search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smoking cessation"

    • தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை
    • புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் பொது சுகாதாரத் துறை சார்பில் பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடந்தது.

    மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி தலைமை தாங்கினார்.

    இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பள்ளிகளில் தற்போது அரையாண்டு தேர்வு நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உங்களுக்கு தெரிந்திருக்கும். பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாத மாணவ மாணவிகளை நீங்கள் தேர்ச்சி பெற செய்ய வேண்டும். 2 மாதத்தில் பொது தேர்வு வரவுள்ளது.

    கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பில் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்தது. இதனை மாற்ற வேண்டும் கல்வியில் முன்னிலைப் பெரும் மாவட்டமாக கொண்டு வருவதற்கு தலைமை ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

    பள்ளிகளில் முழுமையாக புகையிலை, குட்கா போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக புகார் செய்ய வேண்டும்.

    மாநில அளவில் நடந்த கலாச்சார போட்டியில் வேலூர் மாவட்ட மாணவ மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதே போல முதல் அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளிலும் அதிகளவில் மாணவ-மாணவிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×