என் மலர்
வேலூர்
- மாநகராட்சி 2-வது மண்டல கூட்டத்தில் வலியுறுத்தல்
- பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் நரேந்திரன் தலைமையில் இன்று நடந்தது. மேயர் சுஜாதா மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 2-வது மண்டல பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும் பல்வேறு பணிகளுக்கு அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கவுன்சிலர் கணேஷ் சங்கர்;-
வேலூர் பழைய பஸ் நிலையம் மண்டி தெரு லாங்கு பஜார் பகுதிகளில் ஏராளமானோர் சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் தரைக்கடை வைக்கப்பட்டுள்ளன.இந்த கடைகள் வைக்க மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளதா அல்லது அப்படி அனுமதி வழங்கி இருந்தால் அந்த வியாபாரியிடம் வரி, வாடகை வசூல் செய்ய வேண்டும். அதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.
கவுன்சில சுமதி மனோகரன் (பாஜக);-
18-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலை அமைக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம் எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பஸ் நிலையம் அருகே சாமுவேல் நகர் பகுதியில் குடிநீர் சப்ளை உடனடியாக செய்ய வேண்டும்.
தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள் 2-வது மண்டல பகுதியில் மாடு, நாய்கள், பன்றிகள் தொல்லைகளை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்த 2-வது மண்டல அதிகாரிகள் சத்துவாச்சாரி ஆற்காடு ரோடு உட்பட வேலூர் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
முதற்கட்டமாக மாடுகளை சாலைகளில் அவிழ்த்து விடக்கூடாது என அவர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்படும். அதனை மீறி மாடுகளை சாலையில் அவிழ்த்து விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி துணிகரம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
பேஸ்புக் கில் பிரபலமானவர்கள் பெயரில் போலிக் கணக்கு உருவாக்கி மோசடி செய்து வருவது அதிகரித்து வருகிறது. ஒரு நபரின் புகைப்படத்தை எடுத்து போலிக் கணக்கை துவக்கி, அவர்களது நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு நட்பு அழைப்பு விடுக்கப்படுகிறது.
அதனை உண்மையான கணக்காக நினைத்து நட்பு அழைப்பை ஏற்றால், சிறிது நேரத்தில் அவசரத் தேவைகளுக்காக பணம் தேவைப்படுகிறது என மெசேஜ் அனுப்பப்படுகிறது.
ஒரே நேரத்தில் பலருக்கும் இதேபோல மெசேஜ் அனுப்பப்படுகிறது. சிலர் நேரடியாக கேட்க தயக்கப்பட்டு இப்படி கேட்பதாக எண்ணி, பணத்தை அனுப்பும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
அதேசமயம் அது போலி கணக்கு என்பதை கண்டறிந்து கேள்வி கேட்டால், அந்தக் கணக்கு முடக்கப்படுகிறது. இப்படி மோசடி செய்வது தொடர் கதையாகி வருகிறது.
பேஸ்புக்கில் பிரபலமாக இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பெயர்களில் இப்படி போலிக் கணக்குகள் துவங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவான ஏபி நந்தகுமார் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இதில் அவருடைய நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் இணையும்படி அழைப்பு விடுத்து பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட சிலர் நந்தகுமார் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நந்தகுமார் எம்.எல்.ஏ. பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அது போன்று வரும் தகவலை கண்டு யாரும் ஏமாற வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
- நிலத்தை அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்வதாக புகார்
- போலீசார் தண்ணீரை ஊற்றி மீட்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
பென்னாத்தூர் அருகே உள்ள அல்லி வரும் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70) இவர் இன்று காலை குறை தீர்வு கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்கம் முன்பு வந்தார். திடீரென அவர் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் எடுத்து தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
அல்லிவரம் கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என கூறினார்.
இதே போல குடியாத்தம் அருகே உள்ள மோடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் என்றமுதியவர் இன்று காலை கலெக்டர் அலுவலக வாசலில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
இது குறித்து நாகரத்தினம் கூறுகையில்:-
மோடிக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு வழி பாதை இல்லாமல் அவதிப்படுகிறேன். நீண்ட நாட்களாக வழிப்பாதை கேட்டு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.
ஒரே நாளில் 2 முதியவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அரசுப்பள்ளி பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டியதால் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அலமேலுமங்காபுரத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
பள்ளியின் பெயர் பலகை மீது திரைப்பட நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் நேற்று முன்தினம் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் பள்ளியின் பெயர் முழுமையாக தெரியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பள்ளியின் அருகே திரண்டனர். பள்ளியின் பெயர் பலகை மீது போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பள்ளியின் பெயர் பலகை மீது போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறினார்கள்.
இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் விசாரணை நடத்தினார். அதில், பள்ளியின் பெயர் பலகை மீது போஸ்டர்கள் ஒட்டியது நடிகர் சந்தானம் ரசிகர் மன்றத்தை சேர்ந்த வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்த வசந்த், அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த லோகேஷ், ராகுல் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் அனுமதி இன்றி போஸ்டர்கள் ஒட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரூ. 1.30 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது
- 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த நத்தம் பகுதியில் உள்ள சாய் பிரண்ட்ஸ் கிளப் உள் விளையாட்டு அரங்கில் சிங்கப்பூர் சரவணன் பேட்மிண்டன் அகடமி சார்பில் அகில இந்திய அளவிலான இரட்டையர்கள் பேட்மிண்டன் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் வட இந்திய மாநிலங்களை சேர்ந்த 158 சிறந்த பேட்மிண்டன் அணிகள் கலந்து கொண்டன.
இந்த போட்டிகள் தொடக்க விழாவில் தாழையாத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அமுலுஅமர், தொழிலதிபர் சி.கே.முனாஸ், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட பேட்மிட்டன் வீரர்கள் கலந்து கொண்டு இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக விளையாடினார்கள்.
இறுதிப் போட்டியில் இரட்டையர்கள் பிரிவில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரச் சேர்ந்த வினய் மற்றும் அரி இணை முதல் பரிசாக 40,000 ரூபாயையும் கோப்பையையும் வென்றது, இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் கவுதம் இணை 20 ஆயிரம் ரூபாயும் கோப்பையும் வென்றது.
இதில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டிகள் மற்றும் 40 வயதிற்கான மற்றும் அனைத்து வயதினரும் கலந்து விளையாடிய இரட்டையர் இறகு பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அகடமி தலைவர் எஸ்.சரவணன் விழா குழுவினர் சி.முரளி ஜெ.உதயராஜ், எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- பொங்கலையொட்டி சிறப்பு சோதனை
- 877 ஆம்னி பஸ்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது
வேலூர்:
போங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் பலர் தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு ரெயில், பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.
அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்து விட்டதால் பெரும்பாலானோர் பஸ்களில் குடும்பத்துடன் தங்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில் வேலூர் சரக இணை போக்குவரத்து கமிஷனர் இளங்கோவன் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி, வாலாஜா, வாணியம்பாடி, பள்ளிகொண்டா ஆகிய சுங்கச்சாவடிகளின் அருகே சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், ராமலிங்கம், ராமகிருஷ்ணன் காளியப்பன், துரைசாமி ஆகியோரின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், சிவக்குமார், ராஜேஷ்கண்ணா, அமர்நாத், விஜயகுமார், வெங்கட்ராகவன் ஆகியோர் 7 நாட்கள் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதா?, அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்களா?, டிரைவர் சீருடை அணிந்துள்ளாரா?, தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா?, முகப்பு விளக்கில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பது உள்பட பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் சாலை வரி, பிறமாநில ஆம்னி பஸ்கள் நுழைவு வரியை முறையாக செலுத்தி உள்ளார்களா என்றும் சோதனை செய்யப்பட்டது. இந்த சிறப்பு சோதனையின் முதல்நாளில் 877 ஆம்னி பஸ்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில் 124 பஸ்கள் போக்குவரத்து விதிகளை மீறியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகன சாலை வரி ரூ.4 லட்சத்து 99 ஆயிரத்து 140 வசூல் செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நீண்ட நாட்களாக வழிப்பாதை கேட்டு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
- கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
பென்னாத்தூர் அருகே உள்ள அல்லி வரும் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70) இவர் இன்று காலை குறை தீர்வு கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்கம் முன்பு வந்தார். திடீரென அவர் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் எடுத்து தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
அல்லிவரம் கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுதர வேண்டும் என கூறினார்.
இதே போல குடியாத்தம் அருகே உள்ள மோடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் என்ற முதியவர் இன்று காலை கலெக்டர் அலுவலக வாசலில் தனது உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
மோடிக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு வழிபாதை இல்லாமல் அவதிப்படுகிறேன். நீண்ட நாட்களாக வழிப்பாதை கேட்டு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.
ஒரே நாளில் 2 முதியவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் பேபி (வயது 66). இவர் நேற்று மாலையில் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங் குவதற்காக வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார்.
அப்போது அவருடன் 12 வயது பேரனும் உடன் சென்றான். வேலூர் கோர்ட்டு அருகே சென்று ஆட்டோவில் செல்வதற்காக பேபி தனது பேரனு டன் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையை, சாலை கெங்கையம்மன் கோவில் அருகே கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழி யாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இருவர் மீதும் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பேபி பலத்த காயம் அடைந்தார். சிறுவனுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. இதைக்கண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக பேபி அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில்
பேபி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக் குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை
- வாடிவாசல் முதல் சேருமிடம் வரை ஓடும்பாதை அதிகபட்சமாக 100 மீட்டர் வரையே இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்
வேலூர்:
எருது விடும் விழாவில் காளைகளை ஒரு சுற்றுக்கு மேல் ஓடவிட்டால் காளையின் உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று வேலூர் கலெக்டர் குமார வேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா அரசாணையில் அனு மதிக்கப்பட்ட நாள், இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
காளை ஓடும்பாதைவாடிவாசல் முதல் சேருமிடம் வரை நீளம் அதிகபட்சமாக 100 மீட்டர் வரையே இருக்க வேண்டும். காளைகள் ஓடு தளம் இலகுவாகவும், அகலமாகவும் இருக்க வேண்டும். கண்டிப்பாக இரட்டை தடுப்பான்கள் அமைக்கப்பட வேண்டும்.
ஓடு தளத்தில் அதிகபட்சமாக 25 தன்னார்வலர்கள் மட்டுமே அவர்களுக்கென சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்ட உடைகளுடன் சுழற்சி முறையில் அனுமதிக் கப்பட வேண்டும்.
பொதுமக்கள் யாரும் ஓடு தளத்துக்குள் செல்ல அனுமதியில்லை. காளைகள் சேருமிடம் விசாலமாக இருக்க வேண்டும்.
வாடிவாசல், விழா அரங்கம் ஆகியவற்றை முழுமையாக கண்காணிக்க கண்காணிப்பு கேமரா அல்லது வெப் கேமரா வசதியை ஏற்படுத்த வேண்டும். விழா நடை பெறும் இடத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிணறுகளை விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக மூட வேண்டும்.
ஒரு காளை ஒரு சுற்று மட்டுமே அனுமதிக்கப்படும். அடுத்த சுற் றுக்கு ஓடவிட்டால் காளையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ரூ.5,000 அப ராதமும் விதிக்கப்படும்.
விழா முடிந்ததும் காளைக ளுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும், மருத்துவ பரி சோதனை மேற்கொண்ட பிறகே கொண்டு செல்ல வேண்டும்.
அரசு பிறப்பித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விழாக் குழுவினரால் கடைப்பி டிக்கப்படுவது அரசு அலுவலர்க ளால் உறுதி செய்யப்பட்ட பிறகே, எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்கப்படும்.
விதிமுறைகளை மீறும்பட்சத் தில் எருது விடும் விழா நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
- 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நிறுத்தப்படும் பைக்குகள் திருடு போனது. இது குறித்து பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து வேலூர் தெற்கு போலீசார் பைக் திருடு போன இடங்களில் பதிவான காட்சிகளை வைத்து பைக் திருடர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியை சேர்ந்த தனசேகர் (வயது 45) என்பவர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் தனசேகரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 10 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் எங்கெங்கு பைக்குகளை திருடினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லத்தேரி கீழ்முட்டுக்கூர் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் அருகே உள்ள பட்டுவான் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவர் மகன் கந்தன் (வயது 19) கூலி வேலை செய்து வந்தார்.
கடந்த 17-ந் தேதி லத்தேரி அருகே உள்ள கீழ் முட்டுக்கூர் கிராமத்தில் மாடு விடும் விழா நடந்தது. இதில் வேடிக்கை பார்ப்பதற்காக கந்தன் சென்றிருந்தார்.
மாடுவிடும் விழாவில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறி பாய்ந்து வந்த காளைகளை இருபுறமும் நின்று வாலிபர்கள் கையால் தட்டிக் கொடுத்து ஆரவாரம் செய்தனர்.
அப்போது பாய்ந்து விழுந்த காளை ஒன்று கந்தனை முட்டி தூக்கி வீசியது.
இதில் அவரது கழுத்தில் கொம்பு குத்தி ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
உடனடியாக அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கந்தன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 16-ம் தேதி பனமடங்கியில் நடந்த மாடு விடும் விழாவில் காளை முட்டியதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் என்பவர் நேற்று இறந்தார். இன்று 2-வது நாளாக மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.
மாடு விடும் விழாவில் காளைகள் ஓடிவரும் பாதையில் எந்த காரணத்தைக் கொண்டும் நின்று ஆரவாரம் செய்ய வேண்டாம் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
- வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நடந்தது
- தமிழக - ஆந்திர எல்லைகளில் போலீசார் கண்காணிப்பு தீவிரம்
வேலூர்:
குடியரசு தினவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 26-ந்தேதி காலை குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
கலெக்டர் குமார வேல்பாண்டி யன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். சிறப்பாக பணிபுரிந்த போலீசார் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.
இந்நிலையில், வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் குடியரசு தின விழாவையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது. இதில் போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
அதேபோல், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையும் நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆந்திர எல்லையான பொன்னை, சைனகுண்டா, கிறிஸ்டியான் பேட்டை ஆகிய சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






