என் மலர்tooltip icon

    வேலூர்

    • பொதுமக்களுக்கு 2-ம் கட்டமாக 14 பேருக்கு வீட்டு மனை பட்டா
    • ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்துக்கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் 6-வது வார்டு வேப்பங்கால் பகுதியில் புதிதாக ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்த நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    மேலும் 40 ஆண்டுகளாக வேப்பங்கால் பகுதியில் வீட்டுமனை பட்டா இன்றி அரசு நிலத்தில் வசித்து வந்த 34 குடும்பங்களை சேர்ந்த பொது மக்களுக்கு 2-ம் கட்டமாக 14 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்.

    இதனையடுத்து பொதுமக்களிடத்திலிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அன்னதானம் வழங்கினார்.

    தொடர்ந்து 15-வது வார்டு சின்ன கோவிந்தம்பாடியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு பங்கேற்றார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தி.மு.க. நகர செயலாளர் ஜாகீர் உசேன் செய்திருந்தார்.

    இதில் ஓன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், குமாரபாணடியன் பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, தலைவர் சுபபிரியா துணை தலைவர் வசிம்அக்ரம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கோடை விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு வந்த பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    கர்நாடகா மாநிலம் பத்ராவதி அடுத்த காளங்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 2 மகள்களும், பிரேம் (வயது 11) என்ற மகனும் உள்ளார்.

    மாணவன்

    பிரேம் அதே பகுதியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். ரேகாவின் பெற்றோர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கலைஞர் நகரில் வசித்து வருகின்றனர்.

    கோடை விடுமுறை என்பதால் பிரேம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள தாத்தா மூர்த்தியின் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு அருகே அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பிரேம் மாயமானார்.

    இதனையடுத்து மூர்த்தி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடினர். மாணவன் கிடைக்காததால் மூர்த்தி நேற்று மாலை குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மாயமான பிரேமை தேடி வந்தனர்.

    இவர்கள் வசிக்கும் அதே பகுதி அருகே அம்மணாங்குப்பம் ஏரி உள்ளது. இன்று காலை சந்தேகத்தில் மாணவனின் தாத்தா ஏரியில் இறங்கி தேடினார்.

    ஏரியில் பிணம்

    அப்போது மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிந்தது. பின்னர் மாணவனின் உடலை வெளியே கொண்டு வந்தார்.

    தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் விரைந்து சென்று பிரேமின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடியாத்தத்தில் பரபரப்பு
    • மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது

    குடியாத்தம்:

    திருவண்ணாமலையில் ஒரே நாளில் பல ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் தீவிரமாக செயல்பட்டு வட மாநில கொள்ளையர்களை கைது செய்து வருகின்றனர்.

    இதனையடுத்து ஏ.டி.எம். மையங்கள் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது.

    கடந்த மாதம் குடியாத்தம் நேதாஜிசவுக் பகுதியில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கிஏ.டி.எம்.மில் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் கற்களைக் கொண்டு ஏடிஎம் கண்ணாடிகளை உடைத்தார். அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து ரோந்து பணியில் இருந்து போலீசார் விரைந்து வந்து கற்களால் ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி உடைத்த நபரை பிடித்து விசாரித்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணைக்கு பின் அந்த நபரை விரட்டி விட்டனர். குடியாத்தம் பகுதியில் ஏடிஎம் எந்திரம் கல்லால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • பள்ளிகொண்டாவில் விவசாயிகளை ஏமாற்றி வீடுகள் நிலங்களை பறித்துள்ளனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

    விவசாய கூட்டத்துக்கு அணைக்கட்டு தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் பொன்முருகன், தலைமையிடத்து துணை தாசில்தார் குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    விவசாயிகளுக்காக நடத்தப்படும் ஜமாபந்தி விழாவில் அரசிய ல்வாதிகள் தலையிட்டால் விவசாயிகள் புறக்கணிக்க ப்படுகிறார்கள். எனவே, இந்த ஆண்டு நடைபெறும் ஜமாபந்தி விழாவில் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

    அனைத்து தாலுகாவிலும் மழை மானியம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அணைக்கட்டு தாலுகாவில் மழை மானியம் இல்லாததால் விவசாயிகள் எந்த அளவிற்கு மழை பெய்தது, எந்த அளவில் பாதிப்ப டைந்துள்ளது என தெரியாமல் உள்ளனர். ஆகவே அணைக்கட்டு தாலுகாவில் மலைப்பகுதியில் மழை மானியம் வைக்க வேண்டும்.

    பட்டா நிலத்தில் செங்கல் சூளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். 6 மாதகாலமாக அனுமதி கேட்டு விவசாயிகள் தாலுகா அலுவலகம் வந்து செல்வது வேதனை அளிக்கிறது. அணைக்கட்டு தாலுகாவில் ஒரே மாதத்தில் 4 பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    பள்ளிகொண்டாவில் விவசாயிகளை ஏமாற்றி வீடுகள் நிலங்களை பறித்துள்ளனர். அதற்க்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மலைப்பகுதிகளில் முள் இல்லா மூங்கில் மரங்களை வளர்க்க வேண்டும். அப்போதுதான் வனவி லங்குகள் பாதிப்படையாமல் அங்கேயே இருக்கும் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க உதவும், மேலும் நாட்டு ரக காளைகளின்

    சினை ஊசிகளை கால்நடை மருத்துவர்கள் கிராம பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

    அதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கை களுக்கு அதிகாரிகள் பதிலளித்து பேசினர். கூட்டத்தில் சில துறை அதிகாரிகள் மட்டுமே கலந்துக்கொண்டு இருந்தனர். பல துறை அதிகாரிகள் வராமல் இருந்ததால் அங்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காமளே இருந்தது. எனவே அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்துக்கு அணைத்து துறை அதிகா ரிகள் கலந்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    • பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. வேலூர், காட்பாடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • நான் குழந்தையுடன் சென்று ஒரு மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றேன் என கண்ணீர் மல்க கூறினார்.

    வேலூர்:

    சேலம் ஆட்டையாம் பட்டியை சேர்ந்தவர்கள் சுந்தரி (வயது 63), சிவகுமார் (43). இவர்கள் இருவரும் வேலை சம்பந்தமாக காட்பாடிக்கு வந்தனர்.

    சேலத்துக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றனர். ரெயிலுக்காக 1-வது பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர்.

    அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 3 மாத பெண் கைகுழந்தையை அவர்களிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

    பெண் திரும்பி வராததால் அவர்கள் ரெயில்வே போலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.

    பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. வேலூர், காட்பாடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அடையாளம் தெரியாத பெண் காட்பாடி பஸ் நிலையத்தில் இருந்து வேலுார் பஸ் நிலையம் சென்று அங்கிருந்து ஆரணி செல்லும் பஸ்சில் ஏறி பயணம் செய்தது தெரியவந்தது.

    கேமரா மூலம் கிடைத்த புகைப்படத்தை எடுத்து வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக் மற்றும் உள்ளுர் போலீஸ் நிலையம் மூலம் விசாரணை நடத்தினர்.

    இதில் குழந்தையை தவிக்க விட்டு சென்றது கண்ணமங்கலம் அருகே உள்ள மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவரது மனைவி கலைச்செல்வி (வயது27) என்பது தெரியவந்தது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் கலைச்செல்வியை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அப்போது குழந்தையை விட்டு சென்றதை ஒப்புக் கொண்டார்.

    எனது கணவர் விஜய் திருப்பூரில் தறி வேலை செய்து வருகிறார். மாதம் ரூ.7 ஆயிரம் ஊதியம் கிடைக்கிறது. எங்களுக்கு ஏற்கனவே 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை வளர்க்க போதிய வருமானம் இல்லை. வறுமையின் காரணமாக தவித்தோம்.

    ஏற்கனவே குடும்ப பெரியவர்கள் 4-வது குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என கூறி இருந்தனர்.

    என்ன செய்வது என வழி தெரியாமல் திணறினோம். இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ளவர்களிடம் குழந்தையை ஒப்படைக்க முடிவு செய்தோம். நான் குழந்தையுடன் சென்று ஒரு மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றேன் என கண்ணீர் மல்க கூறினார்.

    போலீசார் அவருக்கு அறிவுரை கூறி குழந்தையை ஒப்படைத்தனர்.

    துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் காட்பாடி ரெயில் நிலையத்தில் மூதாட்டியிடம் குழந்தையை கொடுத்து சென்ற பெற்றோரை கண்டுபிடித்த தனிப்படையினரை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, வெகுமதி வழங்கி பாராட்டினார். 

    • 250 மையங்களில் நடத்தப்படுகிறது
    • ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாக்கள் என தலைப்பு

    வேலூர்:

    தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடைகால பயிற்சி வகுப்புகள் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாக்கள் என்ற தலைப்பில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளின் திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    வேலூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 30 மையங்கள் விதம் 250 மையங்களில் நடத்தப்படுகின்றது.

    அரியூர், நம்பி ராஜபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது,

    வேலூர் மாநகராட்சியின் 4-வது மண்டலக் குழு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட துணைத் தலைவர்கள் செ.நா.ஜனார்த்தனன் கே.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி வழிகாட்டுதலின்படி பயிற்சிகள் நடைபெற்றன. இந்த பயிற்சிகள் மே மாதம் 2-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரையிலும் அனைத்து ஒன்றியங்களில் அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் 30 நாட்கள் நடைபெறுகிறது.

    வானவில் மன்ற கருத்தாளர் அருணா மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வ தொண்டர்கள் தீபா, மாலினி, பாரதி, சோனியா மற்றும் லதா ஆகியோரின் பங்கேற்றனர்.

    • சித்ரா பவுர்ணமி முன்னிட்டு நடக்கிறது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

    வேலூர்:

    வேலூர் மாநகர பகுதியில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று புஷ்ப பல்லக்குகள் பவனி வரும் விழா கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

    நாளை (வெள்ளிக்கிழமை) சித்ரா பவுர்ணமியையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர், அரிசி மண்டி உரிமையாளர்கள் சார்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகர், வெல்ல மண்டி உரிமையாளர்கள் சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர், பூ மார்க்கெட் தொழிலாளர்கள் சார்பில் லாங்கு பஜார் வேம்புலி அம்மன், மோட்டார் வாகன பணியாளர்கள் சங்கம் சார்பில் விஷ்ணு துர்கை அம்மன் உட்பட 9 புஷ்ப பல்லக்குகள் ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளது.

    அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு மண்டி வீதி வழியாக இரவில் வருகிறது.

    மண்டி வீதி வந்தடையும் பூ ப்பல்லக்குகளில் வீற்றிருக்கும் உற்சவ மூர்த்திகளுக்கு அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டு வானவேடிக்கைகள் நடக்கிறது. பின்னர் மேளதாளங்களுடன் 9 பூப் பல்லக்குகள் புறப்பட்டு லாங்கு பஜார், கமிசரி பஜார், பில்டர் பெட்ரோடு திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அண்ணாசாலை வழியாக கோட்டைக்கு வருகிறது. அங்கு வானவேடிக்கைகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    • சிறுவர்கள் தப்பி செல்வதை தடுக்க நடவடிக்கை
    • எந்த வழியாகவும் சிறுவர்கள் தப்பிக்காத வகையில் பாதுகாப்பு

    வேலுார்:

    வேலுார் காகிதப்பட் டறை பகுதியில், அரசின் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் பாதுகாப்பு இல்லம் இயங்குகிறது. இங்கு, 17 வயதுக்கு உட்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 42 பேர் தங்க வைக் - கப்பட்டுள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் ஏப்ரல் 27-ந் தேதி வரையிலான ஒரு மாதத்துக்குள் 18 சிறு வர்கள் இங்கிருந்து தப்பி னர். இவர்களில் 11 பேர் பிடிபட்டனர். ஒருவர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மீதமுள்ள 6 பேரை தனிப்படை போலீ சார் தேடிவருகின்றனர்.

    இந்நிலையில், மீண்டும் இதுபோன்று சிறுவர் கள் தப்பிச்செல்லும் சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பாதுகாப்பு இல்லத்தை பலப்படுத்தும் பணி நடந்துவருகிறது.

    அதன்படி, பாதுகாப்பு இல்லத்தின் முன்பக்க காம்பவுண்ட் சுவரை 3 அடி உயரம் அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, பின்பக் கம் மற்றும் இடது, வலது காம்பவுண்ட் சுவர்கள் மீது போடப்பட்டுள்ள முள் கம்பிகளை 3 அடி உயரம் அதிகரிக்கும் பணி மும்மு ரமாக நடக்கிறது.

    இதில் 10-க்கும் மேற் பட்ட ஊழியர்கள் ஈடுபட் டுள்ளனர். இதன்மூலம், பாதுகாப்பு இல்லத்தில் இருந்து எந்த வழியாகவும் சிறுவர்கள் தப்பிக்காத வகையில் பாதுகாப்பு நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
    • 6 மணிக்குள் நிலைக்கு வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு வரும் 14-ந்தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி அம்மன் சிரசு ஊர்வலம், 17-ந் தேதி பூப்பல்லக்கு நடைபெற உள்ளது. ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    கெங்கையம்மன் கோவில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் கெங்கையம்மன் கோவில் ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலர் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைவாணி நன்றி கூறினார்.

    கூட்டத்தில் கோவிலை சுற்றி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், தேர் சல்லும் பாதைகளை உள்ள மரக்கிளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும், திருவிழாவை முன்னிட்டு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், தேர் சொல்லும் பாதையிலும், அம்மன் சிரசு சேரும் பாதையிலும் தீயணைப்பு துறையினர் பணியில் இருக்க வேண்டும், மருத்துவத்துறை சார்பில் தேவையான மருந்துகள் டாக்டர்கள் செவிலியர்களுடன் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும், கேமராக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும், சிரசு திருவிழாவுக்கு முன்பாக மக்கள் நெரிசலை தவிர்க்க ஒற்றை வழி பாதை அமைத்த போக்குவரத்து எளிதாக்க வேண்டும், பக்தர்கள் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க வேண்டும் தொடர்ந்து தேரோட்டம் மாலை 6 மணிக்குள் நிலைக்கு வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    அப்போது விழா குழுவினர் பக்தர்கள் வசதிக்கா வெளியூரிலிருந்து பக்தர் வருவதாகவும் இரவு 8 மணி வரை தேரோட்டம் நடைபெற அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

    பக்தர்கள் நெரிசல் இன்றி உள்ளே செல்லவும் வெளியே வரவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

    • ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி பெருமாள் கோயில் தெருவில் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்பப் பள்ளியில் பழுதடைந்தது இருந்தது.

    வகுப்பறை கட்டிடங்கள் சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

    புதிய 2 வகுப்பறை கட்டிடம் கட்ட ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து தருவேன் என கூறியிருந்தார்.

    அதன் பேரில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிட பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

    இதில் மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலுார் மத்திய மாவட்ட தி.மு.க .சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
    • வள்ளுவர் கோட்டத்தை போல் கருணாநிதிக்கு திருவாரூரில் கலைஞர் கோட்டம் கட்டியிருக்கிறார்கள்.

    வேலுார்:

    வேலுார் மத்திய மாவட்ட தி.மு.க .சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.

    இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க.வில் ஒரு தொகுதிக்கு புதிதாக 50 ஆயிரம் பேரை புதிதாக சேர்க்க வேண்டும். இது மாபெறும் பணி. சாதாரணமாக சேருங்கள் என்று சொல்லியிருந்தால் விரைந்து செய்திருப்பீர்கள்.

    ஆனால், அதில் பல நிபந்தனைகள் விதித்திருக்கிறோம். அதனால், கட்சி கொள்கைகள் குறித்து அனைவரிடத்திலும் விளக்கி கூறி சேர்ப்பது கஷ்டமான விஷயம் தான். அதை நீங்கள் செய்து வருகிறீர்கள். இதற்காக நீங்கள் பாராட்டும், வாழ்த்தும் பெற வேண்டும் என்றால் காரியத்தை முறையாக செய்ய வேண்டும்.

    கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா நடக்கிறது. ஒரு ஆண்டு முழுவதும் இதை கொண்டாட இருக்கிறோம்.

    வள்ளுவர் கோட்டத்தை போல் கருணாநிதிக்கு திருவாரூரில் கலைஞர் கோட்டம் கட்டியிருக்கிறார்கள். அதை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரும் ஜூன் 3-ந் தேதி திறந்து வைக்கிறார்.

    அதற்கு முன்னோட்டமாக சென்னை கிண்டியில் கட்டபட்டுள்ள மிகப்பெரிய ஆஸ்பத்திரியை ஜனாதிபதி திறக்க உள்ளார்.

    அதைத் தொடர்ந்து சில மாதத்தில் மதுரையில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய நூலகத்தையும் திறக்க போகிறோம். கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வேலுாரிலும் ஜூலை முதல் வாரத்தில் பிரம்மாண்டமான விழா நடத்த இருக்கிறோம். அதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வருவதாக உறுதியளித்திருக்கிறார்.

    தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதே நேரத்தில் ஒருசில சங்கடங்களும் வருவது போன்று தோன்றும், அது ஒரு மாயை. அதைப்பற்றி கவலைப்பட கூடாது. கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குழந்தையை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்து அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர்:

    சேலம் ஆட்டையாம் பட்டியை சேர்ந்தவர்கள் சுந்தரி (வயது 63), சிவகுமார் (43). இவர்கள் இருவரும் வேலை சம்பந்தமாக காட்பாடிக்கு வந்தனர்.

    சேலத்துக்கு செல்வதற்காக நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றனர். ரெயிலுக்காக 1-வது பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர்.

    அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 3 மாத பெண் கைகுழந்தையுடன் 1-வது பிளாட்பாரத்திற்கு வந்தார்.

    சுந்தரி மற்றும் சிவகுமாரிடம் அருகே சென்று நான் இயற்கை உபாதை கழிப்பதற்காக செல்கிறேன் எனது குழந்தையை சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுமாறு கூறினார்.

    குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. அந்த இளம்பெண்ணை பிளாட்பாரம் முழுவதும் தேடினர்.

    அவர் கிடைக்காததால் சுந்தரியும், சிவகுமாரும் காட்பாடி ரெயில்வே போலீஸ்சாரிடம் சென்று நடந்தவை பற்றி கூறியுள்ளனர்.

    உடனடியாக ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் அந்த இளம் பெண் ரெயில் நிலையத்திற்குள் நுழைவதும், சுந்தரியிடம் குழந்தையை ஒப்படைப்பதும் மீண்டும் ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகில் சென்று ஆட்டோ டிரைவர்களிடம் பேசுவது போன்றவை பதிவாகி இருந்தது.

    இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த இளம் பெண் கண்ணமங்கலம் செல்ல எவ்வளவு கட்டணம்? வேலூருக்கு செல்ல எவ்வளவு என்று விசாரித்துவிட்டு ஷேர் ஆட்டோவில் ஏறி சென்றதாக தெரிவித்தனர்.

    இதனால் குழந்தையை தவிக்க விட்டுச் சென்ற பெண் அவர் குழந்தையின் தாயாக இருக்கலாம் கண்ணமங்கலம் அல்லது சுற்று வட்டாரங்களை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

    குழந்தையை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்து அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இச்சம்பவத்தால் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×