என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாதுகாப்பு இல்ல மதில் சுவர் உயரம் அதிகரிப்பு பணி நடந்து வரும் காட்சி.
பாதுகாப்பு இல்ல மதில் சுவர் உயரம் அதிகரிப்பு
- சிறுவர்கள் தப்பி செல்வதை தடுக்க நடவடிக்கை
- எந்த வழியாகவும் சிறுவர்கள் தப்பிக்காத வகையில் பாதுகாப்பு
வேலுார்:
வேலுார் காகிதப்பட் டறை பகுதியில், அரசின் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் பாதுகாப்பு இல்லம் இயங்குகிறது. இங்கு, 17 வயதுக்கு உட்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 42 பேர் தங்க வைக் - கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் ஏப்ரல் 27-ந் தேதி வரையிலான ஒரு மாதத்துக்குள் 18 சிறு வர்கள் இங்கிருந்து தப்பி னர். இவர்களில் 11 பேர் பிடிபட்டனர். ஒருவர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மீதமுள்ள 6 பேரை தனிப்படை போலீ சார் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் இதுபோன்று சிறுவர் கள் தப்பிச்செல்லும் சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பாதுகாப்பு இல்லத்தை பலப்படுத்தும் பணி நடந்துவருகிறது.
அதன்படி, பாதுகாப்பு இல்லத்தின் முன்பக்க காம்பவுண்ட் சுவரை 3 அடி உயரம் அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, பின்பக் கம் மற்றும் இடது, வலது காம்பவுண்ட் சுவர்கள் மீது போடப்பட்டுள்ள முள் கம்பிகளை 3 அடி உயரம் அதிகரிக்கும் பணி மும்மு ரமாக நடக்கிறது.
இதில் 10-க்கும் மேற் பட்ட ஊழியர்கள் ஈடுபட் டுள்ளனர். இதன்மூலம், பாதுகாப்பு இல்லத்தில் இருந்து எந்த வழியாகவும் சிறுவர்கள் தப்பிக்காத வகையில் பாதுகாப்பு நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






