search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பஸ் நிறுத்த அடிக்கல் நாட்டுவிழா
    X

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    புதிய பஸ் நிறுத்த அடிக்கல் நாட்டுவிழா

    • பொதுமக்களுக்கு 2-ம் கட்டமாக 14 பேருக்கு வீட்டு மனை பட்டா
    • ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்துக்கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் 6-வது வார்டு வேப்பங்கால் பகுதியில் புதிதாக ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்த நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    மேலும் 40 ஆண்டுகளாக வேப்பங்கால் பகுதியில் வீட்டுமனை பட்டா இன்றி அரசு நிலத்தில் வசித்து வந்த 34 குடும்பங்களை சேர்ந்த பொது மக்களுக்கு 2-ம் கட்டமாக 14 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்.

    இதனையடுத்து பொதுமக்களிடத்திலிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அன்னதானம் வழங்கினார்.

    தொடர்ந்து 15-வது வார்டு சின்ன கோவிந்தம்பாடியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு பங்கேற்றார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தி.மு.க. நகர செயலாளர் ஜாகீர் உசேன் செய்திருந்தார்.

    இதில் ஓன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், குமாரபாணடியன் பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, தலைவர் சுபபிரியா துணை தலைவர் வசிம்அக்ரம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×