என் மலர்
திருவண்ணாமலை
- வருகின்ற நவம்பர் மாதம் நடக்கிறது
- நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
வேங்கிக்கால்
திருவண்ணாமலையில் மாவட்ட சீனியர் தடகள சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கார்த்தி வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது. வருகின்ற நவம்பர் மாதம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில சீனியர் தடகள போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் வீரர்கள் வர உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு செயலாளர் சுரேஷ்குமார் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது
- பலர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு 20 புதிய கம்ப்யூட்டர்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம் விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் செய்யாறு மற்றும் அனக்காவூர் பள்ளிகளுக்கு இடையேயான குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
ஒ.ஜோதி எம்.எல்.ஏ. ஒலிம்பிக் சுடரை ஏற்றி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்ராஜ், திமுக பிரமுகர்கள் ராஜ்குமார், தமிழ்ச்செல்வன், பார்த்திபன், ஆறுமுகம், கதிரவன், ரூபி வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்
வெம்பாக்கத்தை சேர்ந்தவர் இமாம். தொழிலாளி. இவரது மகள் கரிஷ்மா (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து பைக்கில் சென்றார். காஞ்சிபுரம் - மோரணம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி இவர் ஓட்டிச் சென்ற பைக் மீது திடீரென மோதியது. இதில் கரிஷ்மா தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கரிஷ்மா நேற்று பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பிரம்மதேசம் போலீசார் கரிஷ்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாமி தரிசனத்துக்கு 5 மணி நேரமானது
- சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.58 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
பவுர்ணமி இன்று காலை 8.17 மணி வரை நீடித்ததால் பக்தர்கள் 2-வது நாளாக கிரிவலம் சென்றனர்.
கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வழிபாடு செய்தனர்.
இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் நீண்ட பொது வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனது.
போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப இன்றும் சென்னை, வேலூர், விழுப்புரம், பெங்களூர், திருப்பதி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
- பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப இன்றும் சென்னை, வேலூர், விழுப்புரம், பெங்களூரு, திருப்பதி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.58 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
பவுர்ணமி இன்று காலை 8.17 மணி வரை நீடித்ததால் பக்தர்கள் 2-வது நாளாக கிரிவலம் சென்றனர்.
கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் வழிபாடு செய்தனர்.
இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் நீண்ட பொது வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனது.
போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப இன்றும் சென்னை, வேலூர், விழுப்புரம், பெங்களூரு, திருப்பதி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்
- 2 பேர் கைது
செய்யாறு:
செய்யாறு அடுத்த பெரிய வேலி நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 35). ஊர் நாட்டாண்மைதாரர்.
இந்த பகுதியில் ஓசூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நடத்துவது குறித்து கடந்த 28-ந் தேதி கிராம மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதே பகுதியை சேர்ந்த இளைய குமார் (23) என்பவருடன் கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக ஜெயகாந்தனுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென ஜெயகாந்தனை இளைய குமார் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி உள்ளார்.
இதில் ஜெயகாந்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை ஜெயகாந்தனின் அண்ணன் ஜெயக்குமார், தந்தை பெருமாள், தாயார் தங்கமணி ஆகியோர் தட்டி கேட்டனர்.
இளைய குமாருக்கு ஆதரவாக அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஜெய காந்தனின் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த இளைய குமாரின் உறவி னர்கள் கட்டை மற்றும் இரும்பு ராடால் ஜெய காந்தனின் உறவினர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
காயமடைந்த ஜெயகாந்தனின் குடும்பத்தி னரை அங்கிருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைய குமார், மற்றும் தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- போக்சோவில் கைது
- போலீசார் விசாரணை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை வேங்கிக் கால் குபேர நகரை சேர்ந்தவர் அசோக் (வயது 28). நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத் தில் பெயிண்டர் ஒருவர் அவ ரது 5 வயதுடைய பெண் குழந் தையுடன் வந்து பணியாற்றி கொண்டிருந்தார்.
தந்தையின் கண்காணிப்பில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அப் போது அருகில் இருந்த காலி கட்டிடத்தில் இருந்த சிறுமியின் அழுகுரல் கேட்டது. இதைய டுத்து பெயிண்டர் அங்கு சென்று பார்த்தார்.
அப்போது சிறுமியிடம் அசோக் தகாத முறையில் ஈடுபட முயன்று உள்ளார். இதை கண்டு ஆத்திரம் அடைந்த பெயிண்டர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அசோக்கை சுற்றி வளைத்து பிடித்து அடித்து உதைத்தனர்.
அப்போது அசோக் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் அசோக்கை ஒப்படைத்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்து அசோக்கை கைது செய்தனர்.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- மகாபாரத நாடகங்கள் நடந்துவருகிறது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த, படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட வீரக்கோவில் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 19-ந் தேதி அக்னி வசந்த விழா மகாபாரத சொற்பொழிவுடன் தொடங்கியது.
இதனையொட்டி கடந்த 25-ந் தேதி முதல் தினமும் இரவில் மகாபாரத நாடகங்கள் நடந்துவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நாடக நடிகர் அர்ச்சுனன் வேடம் அணிந்து தவசு மரம் ஏறினார். அவர் மரத்தின் மீது நின்று கொண்டு எலுமிச்சை பழம், மஞ்சள், குங்கும உள்ளிட்ட பிரசாதங்களை பக்தர்களுக்கு வீசினார்.
குழந்தை மற்றும் திருமணம் வரம் வேண்டி பெண்கள் மற்றும் பக்தர்கள் தபசுமத்தை சுற்றி வந்து வணங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- செய்யாறு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த தனசேகரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 23). தொழிலாளி. இவரது மனைவி கவிதா. நேற்று முன்தினம் சுதாகர் தனது நண்பருடன் பைக்கில் வேலை சம்பந்தமாக பெருங்கட்டூருக்கு சென்றார்.
அங்குள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சுதாகர் காஞ்சிபுரம் - கலவை சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சுதாகர் பலத்த காயம் அடைந்தார்.
இதனைக் கண்ட சுதாகரின் நண்பரும் அந்த வழியாக சென்றவர்களும் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பெருங்கட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுதாகர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து மோரணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் முதன் முறையாக தேனீ பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
- ஐரோப்பிய தேனீக்கள், இந்திய தேனீக்கள் மற்றும் டாமர் தேனீக்கள் என 3 வகையான தேனீக்கள் வளர்க்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாது மலையில் அத்திப்பட்டு எனும் பழங்குடியின மக்கள் வாழும் குக்கிராமம் உள்ளது.
இந்த மலையில் பழங்குடியினர்கள் 272 குக்கிராமங்களில் 30,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்
இங்குள்ள பெரும்பாலான பழங்குடியினக் குடும்பங்கள் தங்கள் வீட்டின் பின்புறங்களில் தேனீக்களை வளர்த்து வந்தனர். ஆனால் தற்போது சுமார் 300 பழங்குடியினர் மட்டுமே மலைகளில் தேன் சேகரிப்பவர்களாக உள்ளனர்.
பழங்குடியின சமூகத்தினரை அவர்களின் பாரம்பரிய தொழிலான தேன் சேகரிப்பதற்கு மீண்டும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு தமிழகத்தில் முதன் முறையாக தேனீ பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த பூங்கா 14.8 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைக்கப்படுகிறது. இங்கு தேன் உற்பத்தி செய்யக்கூடிய வேம்பு, மகிழம், பூவரசம், புளி, சைனாபெர்ரி, வெள்ளைப்பட்டை அகாசியா, கரும் பலகை மரம், உள்ளிட்ட 32 வகை மரங்கள் 6 எக்டேர் பரப்பளவில் நடப்படுகிறது.
பூர்வீக மர வகைகளை நடவு செய்ய தொடர் வரிசைகளை உருவாக்குதல், பண்ணை குட்டைகள் மற்றும் இந்த குளங்களுக்கு மலைகளில் இருந்து வரும் மழைநீரை சேகரிக்க நீர் சேகரிப்பு அமைப்பு போன்ற பல்வேறு பணிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு ஐரோப்பிய தேனீக்கள், இந்திய தேனீக்கள் மற்றும் டாமர் தேனீக்கள் என 3 வகையான தேனீக்கள் வளர்க்கப்பட உள்ளன. ஏனெனில், அவை குறைவான ஆக்கிரமிப்பு மற்றும் பாதிப்பற்ற கொடுக்குகளை கொண்டுள்ளது.
இவற்றை பெட்டிகளில் வைத்த பின்னர் வாரத்திற்கு 10 முதல் 15 கிலோ தேனை உருவாக்க முடியும்.
பூங்காவின் தோட்டப் பகுதிக்குள் தேனீ பெட்டிகள் வைக்கப்படுகின்றன.
தேனீக்களின் கூட்டத்தைத் தடுக்கவும், தோட்டக்கலை வல்லுநர்கள் பெட்டிகளை தொடர்ந்து கண்காணிக்க வசதியாகவும் ஒவ்வொரு பெட்டிக்கும் இடையே குறைந்தது 5 அடி இடைவெளி விடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் தேனீ பெட்டிகளை பார்க்க தனி நடைபாதைகளும் உருவாக்கப்படுகிறது.
முக்கியமாக மலைகளில் உள்ள பழங்குடியின விவசாயிகளுக்காக மொரீஷியஸின் பல்வேறு வகையான அன்னாசி பழத்தை பயிரிடுவதற்கு பூங்காவில் 1 ஏக்கர் செயல்விளக்க தளம் ஏற்படுத்தப்படுகிறது.
இந்த பூங்காவில் தேன் உற்பத்தி மட்டுமின்றி, பழங்குடியினருக்கு தேன் உற்பத்தியில் சமீபத்திய முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக , ஜவ்வாது மலைகளின் பாரம்பரிய மர இனங்களை காட்சிப்படுத்தும் மையமும் அமைய உள்ளது.
- புதன்கிழமை நாளில் கிரிவலம் சென்றால் சகல கலைகளிலும் நல்ல வளர்ச்சி கிடைக்கும், மோட்சம் கிட்டும்.
- ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை:
ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கி நாளை (வியாழக்கிழமை) காலை 8.19 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் இன்று காலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.
மேலும் பவுர்ணமியையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில் இருந்து 250 பஸ்களும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும், வேலூர் மற்றும் ஆரணி மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும் என 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்ப டுகின்றன.
புதன்கிழமை நாளில் கிரிவலம் சென்றால் சகல கலைகளிலும் நல்ல வளர்ச்சி கிடைக்கும், மோட்சம் கிட்டும்.
வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் குரு அருள் கிடைக்கும். ஞான சித்தி ஏற்படும்.
இந்த ஜென்மம் மட்டுமின்றி பல ஜென்ம குருமார்களின் ஆசியும் கிடைக்கும் எனவே ஆவணி பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் சகல நன்மையும் சிறப்புகளும் தேடி வரும் என்று ஐதீகமாக கூறப்படுகிறது.
இதனால் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். கோவிலில் இலவச தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிரிவலப் பாதையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.






