வாகனம் மோதி தொழிலாளி பலி

செய்யாறு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வாகனம் மோதி தொழிலாளி பலி
Published on

செய்யாறு:

செய்யாறு அடுத்த தனசேகரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 23). தொழிலாளி. இவரது மனைவி கவிதா. நேற்று முன்தினம் சுதாகர் தனது நண்பருடன் பைக்கில் வேலை சம்பந்தமாக பெருங்கட்டூருக்கு சென்றார்.

அங்குள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சுதாகர் காஞ்சிபுரம் - கலவை சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சுதாகர் பலத்த காயம் அடைந்தார்.

இதனைக் கண்ட சுதாகரின் நண்பரும் அந்த வழியாக சென்றவர்களும் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பெருங்கட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுதாகர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து மோரணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com