search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
    X

    விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. ஒலிம்பிக் சுடரை ஏற்றி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம் விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் செய்யாறு மற்றும் அனக்காவூர் பள்ளிகளுக்கு இடையேயான குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

    ஒ.ஜோதி எம்.எல்.ஏ. ஒலிம்பிக் சுடரை ஏற்றி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்ராஜ், திமுக பிரமுகர்கள் ராஜ்குமார், தமிழ்ச்செல்வன், பார்த்திபன், ஆறுமுகம், கதிரவன், ரூபி வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×