என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • அடிக்கடி மின்விளக்குகள் பழுது ஏற்படுகிறது
    • பொதுமக்கள் அவதி

    செங்கம்:

    செங்கம் பேரூராட்சியில் ஜீவானந்தம் தெருவில் இருந்து ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு செல்லும் குறுக்கு தெருக்களில் தெரு விளக்குகள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.

    குறிப்பாக ராஜவீதியில் இருந்து ஜீவானந்தம் செல்லும் குறுக்கு தெருவில் அடிக்கடி மின்விளக்குகள் பழுது ஏற்படுகிறது.

    தெருவிளக்குகள் பழுது ஏற்பட்டால் நாள் கணக்கில் பழுது சரி செய்யப்படாமல் உள்ளதால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    இதனால் சிறுவர்கள், பெண்கள் உள்பட பொதுமக்கள் நடமாட அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

    மேலும் இருள் சூழ்ந்து உள்ளதால் திருட்டு சம்பவம் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    ஜீவானந்தம் தெருவில் இருந்து ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு வழியாக செல்லும் குறுக்கு தெருக்களுக்கு போதிய மின்விளக்குகள் அமைத்து பழுதடைந்துள்ள மின்விளக்குகளை மாற்றி புதிய மின்விளக்குகள் அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 30-ந்தேதி நடக்கிறது
    • கலெக்டர் முருகேஷ் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறி யியல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வங்கியாளர் மற்றும் பிற சார்புத்துறை அலு வலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

    எனவே, விவ சாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும், தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன்பெறலாம்.இந்த தகவலை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • விபத்து இழப்பீடு தொகை வழங்காததால் நடவடிக்கை
    • பஸ்சை கோர்ட்டில் ஒப்படைத்தனர்

    செய்யாறு:

    வந்தவாசி தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி. இவர், கடந்த 2015-ம் ஆண்டு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    லூர்துசாமி இழப்பீடு கேட்டு செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி குமார வர்மன் விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட லூர்துசாமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 30 வழங்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார்.

    நீதிமன்ற உத்தரவின்படி லூர்துசாமிக்கு இழப்பீடு தொகை வழங்காததால், செய்யாறு பஸ் நிலையத்தில் சென்னைக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை சார்பு நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • சாலையோரம் நடந்து சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மாலையிட்டான் பகுதியைச் சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 60) தொழிலாளி. இவரது மனைவி வாமா. இவர்களுக்கு சுமையா என்ற மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று அலாவுதீன் அய்யாவாடி கூட்டு சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற கார் அலாவுதீன் மீது மோதியது.

    இதில் அலாவுதீன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரநை்து வந்த வந்தவாசி வடக்கு போலீசார் அலாவுதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • 400 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
    • விவசாயிகள் 3 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் கெங்கை சூடாமணி, கிராமத்தில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சோமசுந்தரம், உதவி இயக்குனர்கள், ஜெயக்குமார், ராமன், ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சேத்துப்பட்டு, கால்நடை மருத்துவமனை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம், மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கெங்கைசூடாமணி, ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா வெங்கடேசன், தலைமை தாங்கினார். துணை தலைவர் வடிவேல், முன்னிலை வகித்தார்.

    முகாமில் 200 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், 30 பசு மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் ஊசி செலுத்துதல், 400 கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்து செலுத்துதல், 200 கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பு மருந்து, 300 வெள்ளை, மற்றும் செம்மறி, ஆடுகளுக்கு நோய் தடுப்பு மருந்து செலுத்துதல், 10 நாய்களுக்கு வெறி நாய் கடிப்பு தடுப்பு ஊசி செலுத்துதல், 30 கால்நடைகளுக்கு தாது உப்பு கட்டிகள், உள்ளிட்ட 400கால்நடைகளுக்கு சேத்துப்பட்டு, கால்நடை மருத்துவர் ஆரிப், மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் தாஸ், ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

    முன்னதாக சிறந்த 3 கடேரி பசு கன்றுகளை தேர்ந்தெடுத்து அதன் உரிமையாளருக்கு பரிசு வழங்கினார்கள். இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 49), சமையல் மாஸ்டர். இவர், நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தற்கொலை செய்து கொண்ட முத்துவுக்கு விஜயராணி என்ற மனைவியும், அரிகரன் என்ற மகனும், அனுசுயா என்ற மகளும் உள்ளனர்.

    • கிராம பொதுமக்கள் ஆவேசம்
    • கல்வி அதிகாரி விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் படிக்கும் மாணவியின் முகத்தில் சூடு வைத்ததாக பெற்றோர் போலீசில் புகார்.

    திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.

    இந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை என 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கெடாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் என்பவரின் மகள் கவுதமி (வயது 9) 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    இவள், சரிவர படிக்கவில்லை என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீக்குச்சியை பற்ற வைத்து மாணவியின் முகத்தில் தலைமை ஆசிரியை சூடு வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கன்னத்தில் காயம் அடைந்த மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றாள். இதுகுறித்து மாணவியின் தாய் மணிமேகலை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மணிமேகலை கிராம பொதுமக்களுடன் மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சீனிவாசன் நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி:

    சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 34 ). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சாந்தி இவர்களுக்கு கவுசிகா (12) என்ற மகளும், தர்ஷன் (9) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் வந்தவாசி அடுத்த கீழ்குவளைவேடு கிராமத்தில் தனியார் பாலிடெக்னிக்கில் தேர்வு எழுதுவதற்காக நண்பர்களுடன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சீனிவாசன் வந்தார். அப்போது இவர்களது நண்பர்களான முத்துவேல்குமரன், கலைவாணன், கவியரசன், வேலாயுதம் ஆகியோருடன் கீழ்குவளைவேடு கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து சீனிவாசன் தங்கி வந்தார்.

    இந்த நிலையில் சீனிவாசன் நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். சீனிவாசனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற நண்பர்கள் முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் வந்தவாசி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி சீனிவாசனை தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்டனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சின் குறுக்கே பைக்கை நிறுத்தியதால் வாக்குவாதம்
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    விழுப்புரம் மாவட்டம் சங்கீதவாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர், திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர், திருவண்ணாமலை நகர மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியார் சிலை அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த லியா கத்அலி (வயது 44) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென் றார். திடீரென்று பஸ்சின் குறுக்கே சென்று பிரேக் பிடித்து உள்ளார். இதனால் பஸ் டிரைவருக்கும், லியாகத்அலிக்கும் டையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் இருவரும் தண்ணீர் பாட்டிலால் மாறி மாறி தாக் கிக்கொண்டனர். இதனால் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து வந்த கிழக்கு போலீசார் பஸ் டிரைவரை தாக்கிய லியாகத்அலியை கைது செய்தனர்.

    இதனால் பஸ் பயணிகளை இறக்கி வேறொரு பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

    • உடல் நலக்குறைவால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வந்தவாசி அடுத்த ஆச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்த வர் சமுத்திரம் (வயது 39), இவரது மனைவி தேவி (27) இவர்கள் குடும்பத்துடன் செய்யாறு அருகே உள்ள பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.

    தேவிக்கு கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த தேவி விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அவரது கணவர் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காம ல்தேவி பரிதாபமாக இறந்து விட்டார்.இது குறித்து செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • உயர் அதிகாரிகளை கண்டித்து நடந்தது
    • ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டான் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பார்த்திபன் பணி சுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளை கண்டித்து போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆணையாளர் பரணிதரன் தலைமையில் வட்டார வளர்ச்சி அதிகாரி பாபு மேலாளர் அருள் உள்பட 30 ஊழியர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுப ட்டனர்.

    • தினசரி சிகிச்சை குறித்து விளக்கம்
    • முக்கிய குறிப்புகள் எடுத்துக் கொண்டனர்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அரவிந்தர் வேளாண்மை அறிவில் தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கிராமாற வேளாண்ளாக அனுபவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி கொழப்பலூர் ஊராட்சியில் உள்ள கால்நடை மருத்துவ மனையில் பயிற்சிக்காக சென்று இருந்தனர் எப்போது கால்நடை மருத்துவர் சுரேஷ் கால்நடைகளுக்கான தினசரி சிகிச்சை அளித்தல் மற்றும் ஆடுகளுக்கான அஜீரணக் கோளாறு, முடக்குவாதம், பசு மாடுகளுக்கான செயற்கைமுறை கருத்தரித்தல் மற்றும் வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடுதல் ஆகிய பல சிகிச்சைகளையும் அவைகளுக்கான மருந்துகளையும் பற்றி நேரடியாக செய்முறை விளக்கம் கொடுத்தார்.

    இதனை கலசப்பாக்கம் அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவிகள் அறிந்து கொண்டு குறிப்புகளையும் எடுத்துக் கொண்டனர்.

    ×