என் மலர்
திருவண்ணாமலை
- கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
- பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்நர்மா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பட்டாச்சாரியார் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம்,நவகிரக ஹோமம், மகாலட்சுமி கோமங்கள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் பட்டாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
பின்னர் அந்த புனித நீரானது பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மங்கள மேள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.
சிறப்பு மிக்க மகா கும்பாபிஷேகத்தை காண ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகரை தரிசனம் செய்து சென்றனர்.
- காலை 9 மணி முதல் 5 மணி வரை தடை செய்யப்படும்
- செயற்பொறியாளர் அறிவிப்பு
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி துணை மின் நிலையத்தில் நாளை 16-ந்் தேதி பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி, கீழ் கொடுங்காலூர், தெள்ளார், புரிசை, மாம்பட்டு, நல்லூர் மற்றும் சத்தியவாடி ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று வந்தவாசி மின் உற்பத்தி செயற்பொறியாளர் மீனாகுமாரி அறிவித்துள்ளார்.
- அன்பழகனுக்கும் போதையில் இருந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- போலீஸ்காரரை தாக்கிய 4 பேரையும் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நேற்று இரவு கண்ணமங்கலம் போலீசார் சாராய சோதனைக்கு சென்றனர். போலீஸ்காரர் அன்பழகன் (வயது 32). படவேடு சாலையில் சோதனை நடத்தினார்.
அதன் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் 4 பேர் குடிபோதையில் கலாட்டா செய்து கொண்டிருந்தனர். இதனை அன்பழகன் தட்டி கேட்டார்.
கலாட்டா செய்யாமல் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அப்போது அன்பழகனுக்கும் போதையில் இருந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் 4 பேர் சேர்ந்து போலீஸ்காரர் அன்பழகனை தாக்கினர்.
இது குறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
போலீஸ்காரரை தாக்கிய 4 பேரையும் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் அவர்கள் குப்பம் கிராமம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் அய்யப்பன் (25), பழனி (36), முருகன் (25) மற்றும் உறவினர் சரணவன் என தெரியவந்தது.
போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ்காரரை ராணுவவீரர்கள் மது போதையில் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Tiruvannamalai News Lottery ticket seller arrestசேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சேத்துப்பட்டு வெங்கடாஜலபதி தெருவை சேர்ந்த விநாயகம் (வயது 53) என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப பிரச்சினையில் கைது நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக வாங்கியபோது சிக்கினார்
- பல்வேறு ஆவணங் களை பறிமுதல் செய்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த மங்களம் கீழ்பா லானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், ஓவியர். அவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேலுக்கும், அவரது மனைவி பரிமளாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இது தொடர்பாக, கடந்த 9-ந் தேதி திருவண்ணாமலை மகளிர் போலீ சில் பரிமளா புகார் அளித்தார். புகாரில் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக வெற்றிவேலை விசாரணைக்கு அழைத்த மகளிர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி, கைது நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
மேலும் பணத்துடன் வருமாறு அவகாசம் அளித்து அனுப்பினர் கணவன் மனைவி பிரச்சினைக்கு தீர்வு காணாமல் கைது செய்வேன் என மிரட்டி லஞ்சம் கேட்ட தால் அதிர்ச்சியடைந்த வெற்றிவேல், இதுதொடர் பாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் உண்மைத் தன்மையை உறுதி செய்ததால், சம்பந்தப்பட்ட பெண் எஸ் ஐயை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
அதன் படி, விஜிலன்ஸ் போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பரமேஸ்வ ரியிடம் வெற்றி வேல் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த விஜிலென்ஸ் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையி லான குழுவினர் பரமேஸ்வரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.
மேலும், இது தொடர்பாக பல்வேறு ஆவணங் களை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாஜிஸ் திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரியை சிறையில் அடைத்தனர். இந்த சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 16-ந் தேதி நடக்கிறது
- மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக் கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் திருவண்ணா மலை உதவி கலெக்டர் தலைமையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக பின்புறம் உள்ள கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக் கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தெரிவித்துள்ளார்.
- பொதுமக்கள் அவதி
- தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வலியுறுத்தல்
வந்தவாசி:
வந்தவாசி அருகே ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடும் பங்களுக்கு 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீருக்காக பயன் படும் கிணறுகளை சுத்தம் செய்யப்படாமலும், 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முழுவதும் பாசி மற்றும் தூசு துகள்கள் படிந்து சுத்தம் செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் குடிநீர் வினியோகம் செய்யும்போது தண்ணீர் கருப்பாகவும், அதிகளவில் பாசி, தூசு துகள்கள் கலந்து வரு வதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
மேலும் இந்த குடிநீர் குடிக்கும்போது உடல் உபா தைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்ற னர்.
எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து கிணறு மற்றும் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பழைய ஊராட்சி கட்டிடம் பழுதடைந்து விட்டது
- புதிய கட்டிடத்தில் இடமாற்றம் செய்து தரவேண்டும்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் சித்ரசாவடி கேட் பகுதியில் ஊராட்சி மன்ற கட்டிடம், ஊர்ப்புற நூலகம் ரேஷன் கடை இயங்கி வருகிறது.
பழைய ஊராட்சி கட்டிடம் பழுதடைந்து விட்டது. இதனால் தற்போது புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊர்ப்புற நூலகக் கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால், நூலகம் இயங்கவில்லை.
இதனருகிலேயே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.
எனவே ஊர்ப்புற நூலகத்தில் செயல்படும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை உடனடியாக புதிய கட்டிடத்தில் இடமாற்றம் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விளையாடி கொண்டிருந்தபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குன்னத்தூர் ஊராட்சி குட்பட்ட அகஸ்தியபுரம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார். கூலி தொழிலாளி. இவரது மகள் வைஷ்ணவி (வயது 8). அதே கிராமத்தில் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகின்றார். சிவகுமார் தம்பதியினர் வேலைக்கு சென்றுள்ளனர்.
தற்போது பள்ளி விடுமுறையால் என்பதால் வைஷ்ணவி அவரது தந்தையுடன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக வைஷ்ணவி உடலில் தீபற்றியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து மீட்டு ஆரணி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இன்று காலை சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாலையில் தீமிதி விழா நடைபெற்றது
- ஏராளமானோர் சாமி தரிசனம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த 5 புத்தூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை கோவில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட துரியோதனன் சிலை முன்பு, பீமன், துரியோதனன் வேடமணிந்து நாடக நடிகர்கள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடத்தினர்.
இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வேடிக்கை பார்த்தனர். இந்த விழாவில் ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்து மகாபாரத சொற்பொழிவை கேட்டார். கோவில் சார்பில் விழாக்குழுவினர் பரசுராமன் உள்பட பலர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். மாலையில் கோவில் தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்தபடி கோவிலை வலம் வந்தனர்.
இரவில் முருகன் திருவிளையாடல் நாடகம் நடைபெற்றது. இன்று தருமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது விபரீதம்
- 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்
கண்ணமங்கலம்:
வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி யன் குடும்பத்தினர் 5 சிறுவர் சிறுமிகள் உள்பட 10 பேர் காரில் திருவெண்காடு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் லத்தேரிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு பகுதியில் வேலூர் செல்லும் சாலையில் வந்தனர்.
அப்போது டிரைவரின் கட் டுப்பாடு இழந்து கார் சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
- கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
செய்யாறு பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி, அதே பகுதியில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த 10-ந் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும், உறவினர்கள் வீடுகளிலும் தேடி உள்ளனர்.
கல்லூரி மாணவி கிடைக்காததால் இது குறித்து செய்யாறு டவுன் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.






