என் மலர்
திருவள்ளூர்
- திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மாணவி வழக்கில் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் "சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி" உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சரளா பிளஸ்-2 படித்து வந்தார். அவர் பள்ளியின் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
இன்று காலை வழக்கம்போல் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி திடீரென விடுதி அறைக்கு செல்வதாக மற்ற தோழிகளுடன் கூறி விட்டு திரும்பிச் சென்றார்.
நீண்ட நேரம் ஆனதால் விடுதி அறைக்கு சென்று பார்த்த தோழிகள், தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவி வழக்கில் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவி மரண வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் டிஐஜி சத்யபிரியா கூறினார்.
- தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் முதல்வரின் அனுமதி பெற்று விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
- திருவொற்றியூர் பகுதியில் பரவி வரும் வாயு கசிவிற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இ்ன்னும் ஒரு சில நாட்களில் அவை சரிசெய்யப்படும்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழகம் மற்றும் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 43-வது தென் மண்டல தேசிய பூப்பந்தாட்ட போட்டி திருவொற்றியூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பகல்- இரவு போட்டியாக மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் இருந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கு பெற்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கும், பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற கர்நாடக அணிக்கும் பரிசுத்தொகையாக தலா 50 ஆயிரம் மற்றும் கோப்பையை வழங்கினார்.
விழாவில் வடசென்னை எம்.பி.டாக்டர் கலாநிதி வீராசாமி மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:- இந்ந தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று வெகுவிரைவில் திருவொற்றியூரிலும் மாதவரம் தொகுதியிலும் 3 கோடி ருபாய் அளவில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
அதேபோல் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் முதல்வரின் அனுமதி பெற்று விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். திருவொற்றியூர் பகுதியில் பரவி வரும் வாயு கசிவிற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இ்ன்னும் ஒரு சில நாட்களில் அவை சரிசெய்யப்படும் என்றார்.
முன்னதாக பூப்பந்தாட்ட கழக மாநில பொதுச் செயலாளர் எழிலரசன், அனைவரையும் வரவேற்றார். முடிவில் மாரிமுத்து நன்றி கூறினார்.
- போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று டிஐஜி சத்யபிரியா கூறினார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் "சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி" உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் என்பவரது மகள் சரளா (வயது17) பிளஸ்-2 படித்து வந்தார். அவர் பள்ளியின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
இன்று காலை வழக்கம்போல் மாணவி சரளா சீருடை அணிந்து பள்ளிக்கு புறப்பட்டார். பின்னர் அவர் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி திடீரென விடுதி அறைக்கு செல்வதாக மற்ற தோழிகளுடன் கூறி விட்டு திரும்பிச் சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் மாணவி சரளா திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தோழிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விடுதி பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவி மரண வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் டிஐஜி சத்யபிரியா கூறினார்.
- பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
- மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மாணவி சரளாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், மாணவி மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் முறையான தகவல் தரவில்லை என்று கூறி இன்று காலை தக்களூர் கிராமத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது அவ்வழியே வந்த 4 பஸ்களை சிறைப்பிடித்தனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன.
போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில், செயல் அலுவலர் வெற்றிஅரசு தலைமையில் அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
- மீஞ்சூர், வேளாளர் தெரு, பஜார் பகுதி, டி. எச் சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
பொன்னேரி:
மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை செய்யப்படுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில், செயல் அலுவலர் வெற்றிஅரசு தலைமையில் அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். மீஞ்சூர், வேளாளர் தெரு, பஜார் பகுதி, டி. எச் சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் சுமார் 712 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 20 கடைகளுக்கு அபராதம் விதித்து ரூ.26ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டது. சோதனையின் போது இளநிலை உதவியாளர்கள் அன்பரசு, கருப்பையா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் உடன் இருந்தனர்.
- இன்று காலை வழக்கம்போல் மாணவி சரளா சீருடை அணிந்து பள்ளிக்கு புறப்பட்டார்.
- மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2 வாரத்துக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. பின்னர் கோர்ட்டு உத்தரவுபடி நேற்று முன்தினம் மாணவி ஸ்ரீமதியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த சோகம் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பிளஸ்-2 மாணவி விடுதியில் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் "சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி" உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் என்பவரது மகள் சரளா (வயது17) பிளஸ்-2 படித்து வந்தார். அவர் பள்ளியின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
இன்று காலை வழக்கம்போல் மாணவி சரளா சீருடை அணிந்து பள்ளிக்கு புறப்பட்டார். பின்னர் அவர் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி திடீரென விடுதி அறைக்கு செல்வதாக மற்ற தோழிகளுடன் கூறி விட்டு திரும்பிச் சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் மாணவி சரளா திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தோழிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விடுதி பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீ சார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி சரளாவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவி தற்கொலை குறித்து அறிந்ததும் அவரது பெற்றோர் பூசனம், முருகம்மாள் மறறும் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளி விடுதிக்கு வந்தனர். அவர்கள் மாணவியின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அசம்பாவிதத்தை தடுக்க பள்ளி விடுதி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெளியில் இருந்து வந்த யாரையும் விடுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
இதேபோல் விடுதியில் இருந்த மாணவிகளையும் வெளியே செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது.
தற்கொலை செய்த மாணவி சரளா, விவசாயி பூசனம்-முருகம்மாள் தம்பதியின் ஒரே மகள் ஆவார். மகளின் உடலை பார்த்த அவர்கள் அலறி துடித்தது அனைவரையும் கண் கலங்க வைத்தது.
மகளின் சாவில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். அவளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்கிடையே மாணவி தற்கொலை குறித்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார், சப்-கலெக்டர் மகாபாரதி, குழந்தைகள் நல அலுவலர் மற்றும் அதிகாரிகள் மாணவி தற்கொலை செய்த இடத்தை ஆய்வு செய்தனர். அவர்கள் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதே போல் கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளியில் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி செல்வக்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.
மாணவி சரளாவின் சொந்த ஊரான தக்களூர் கிராமத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாணவி தற்கொலை செய்ததையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
மாணவி தற்கொலை தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் கூறும்போது, "மாணவி சரளா தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதற்கிடையே பள்ளி விடுதியில் தங்கி உள்ள மற்ற மாணவிகளின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்களது மகள்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறி விடுதிக்குள் செல்ல முயன்றனர்.
ஆனால் அவர்களை விடுதிக்குள் செல்ல போலீசார் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாணவிகளின் பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பண்ணூர் பெட்ரோல் பங்க் அருகே நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் ஆசிரியர் ஆரோக்கியமேரி கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்க செயினை பறித்து தப்பி சென்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (58). கீழச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று மாலை பண்ணூர் பெட்ரோல் பங்க் அருகே நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் ஆசிரியர் ஆரோக்கியமேரி கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்க செயினை பறித்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து ஆரோக்கிய மேரி கொடுத்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் வண்டலூர் -மீஞ்சூர் 400 அடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் மீஞ்சூரை அடுத்த சீமாவரம் பகுதியை சேர்ந்த ராஜா என்ற ரித்தீஸ்வரன், நாலூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பதும் வழிப்பறியில் ஈடுபட கத்தியுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.
- ஆலமரத்தை அகற்ற அதிகாரிகள் ஜே.சி.பி.யுடன் வந்த போது அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.
பூந்தமல்லி:
போருர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற மதகு மற்றும் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கால்வாய் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.
இந்த நிலையில் மாங்காடு அடுத்த பரணிபுத்தூரில் மழைநீர் கால்வாய் செல்லும் பாதையில் 70 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. இதையடுத்து அந்த மரத்தை வேரோடு அகற்றி வேறு இடத்தில் நட நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
நேற்று காலை ஆலமரத்தை அகற்ற அதிகாரிகள் ஜே.சி.பி.யுடன் வந்த போது அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.
அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆலமரம் வேரோடு அகற்றப்பட்டு வேறு இடத்தில் நட்டி பராமரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆலமரத்தின் பெரிய கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது. பின்னர் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் ஆலமரம் வேரோடு பிடுங்கப்பட்டு சுமார் 100 மீட்டர் தொலைவில் நடப்பட்டது. தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் ஆலமரம் நட்டு வைக்கப்பட்டது. இதனை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆலமரம் மீண்டும நடப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆலமரத்தின் வேர் முழுவதும் 4 எந்திரங்களை பயன்படுத்தி முற்றிலும் அகற்றப்பட்டது. சுமார் 60 அடி உயரம் உள்ள இந்த மரத்தின் பெரிய கிளைகள் வெட்டப்பட்ட பின்னர் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு எடுத்து சென்று புதிய இடத்தில் நட்டோம்.
அதன் வேர்களை மாட்டுச்சாணம், மண்புழு உரம் மற்றும் வேரின் வளர்ச்சியை தூண்டும் உரங்களால் மூடி இடமாற்றம் செய்தோம்.
புதிய இடத்தில் ஆலமரத்தை வைப்பதற்கு முன்பு அது ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணும் உரங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டது. இந்த மரத்தின் வளர்ச்சியை சில மாதங்கள் கண்காணிப்போம் என்றார்.
- திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா குமாரராஜூப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்.
- விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா குமாரராஜூப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 53). விவசாயி. இவர் நேற்று காலை தனது வயல்வெளிக்கு செல்வதற்காக பள்ளிப்பட்டு-சோளிங்கர் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கரூரில் இருந்து நூல் பண்டல்களை ஏற்றிக் கொண்டு மின்வேன் ஒன்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஏகாம்பரகுப்பம் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், வாகனம் விவசாயி சேகர் பின்னால் பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் துடி, துடித்து பரிதாபமாக பலியானார்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கரூர் மாவட்டம் மண்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வாகனத்தை ஒட்டி வந்த டிரைவர் கோவிந்தராஜ் என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருவள்ளூர்:
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ-மாணவிகளை கொண்டு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் செஸ் போட்டியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
- காரைவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி.
- அனுமன்பள்ளியிலிருந்து வெள்ளோடு நோக்கி சென்ற ஒரு பிக்கப் வேன் விமலேஷ் மீது மோதியது.
சென்னிமலை:
காரைவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி. இவருடைய மகன் விமலேஷ் (வயது 7). இவன் அனுமன்பள்ளியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாணவன் விமலேஷ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு அரசு டவுன் பஸ்ஸில் வீடு திரும்பினான். அப்போது வெள்ளோடு - அனுமன்பள்ளி ரோட்டில் காரைவாய்க்கால் என்ற இடத்தில் பஸ்ஸை விட்டு இறங்கி ரோட்டை கடக்கும் போது
அனுமன்பள்ளியிலிருந்து வெள்ளோடு நோக்கி சென்ற ஒரு பிக்கப் வேன் விமலேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விமலேஷை உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்களின் உதவியுடன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் விமலேஷ் பரிதாபமாக இறந்து விட்டான். இதுகுறித்து வெள்ளோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உத்ராஜ் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கவுந்தப்பாடியை சேர்ந்த வேர் டிரைவர் தருண்குமாரை என்பவரை கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். விபத்து நடந்த இடத்தில் பள்ளி குழந்தைகள் ரோட்டை கடந்து போவது தெரிந்தும் வேன் டிரைவர் தருண்குமார் வேகமாக வேனை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
- அன்னு ராணி பதக்கம் வெல்லத் தவறினாலும், உலக சாம்பியன்ஷிப்பில் முதல் எட்டு இடங்களை 2 முறைப் பெற்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி ஆனார்.
- 61.12 மீட்டர் தூரம் எறிந்து 7-வது இடத்தை பிடித்தார்.
ஓரேகான்:
18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஓரேகானில் நடைபெற்று வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது. மகளிருக்கான ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அன்னு ராணி, தனது சிறந்த முயற்சியாக 61.12 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
இதன்மூலம், உலக தடகள சாம்பியன்ஷி ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி ஏழாவது இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பர் 66.91 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் காரா விங்கர்(64.05 மீட்டர்) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஜப்பானின் ஹருகா கிடாகுச்சி(63.27 மீட்டர்) வெண்கலம் வென்றார். அன்னு ராணி பதக்கம் வெல்லத் தவறினாலும், உலக சாம்பியன்ஷிப்பில் முதல் எட்டு இடங்களை 2 முறைப் பெற்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி ஆனார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 2 முறை முன்னேறிய முதல் இந்தியர் அன்னு ராணி ஆவார். 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 24 அன்று நிறைவடையும்.






