என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur Jewelry Theft"

    • பண்ணூர் பெட்ரோல் பங்க் அருகே நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் ஆசிரியர் ஆரோக்கியமேரி கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்க செயினை பறித்து தப்பி சென்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (58). கீழச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை பண்ணூர் பெட்ரோல் பங்க் அருகே நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் ஆசிரியர் ஆரோக்கியமேரி கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்க செயினை பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து ஆரோக்கிய மேரி கொடுத்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் வண்டலூர் -மீஞ்சூர் 400 அடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் மீஞ்சூரை அடுத்த சீமாவரம் பகுதியை சேர்ந்த ராஜா என்ற ரித்தீஸ்வரன், நாலூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பதும் வழிப்பறியில் ஈடுபட கத்தியுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.

    ×