search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minjur Peruratchi"

    • பேரூர் ஆற்றங்கரையில் பக்தர்கள் குவிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • தடை காரணமாக பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    பேரூர்:

    ந்துக்களின் முக்கிய விழாக்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூைஜ பூஜை செய்வது வழக்கம்.

    கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் திரண்டு முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுப்பார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாக நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தாலும் பக்தர்கள் தடையை மீறி திரண்டு திதி கொடுத்தனர்.

    இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை நாளை மறுநாள் (28-ந் தேதி) வருகிறது. அன்று பக்தர்கள் ஏராளமானோர் பேரூர் நொய்யல் ஆற்றங்கரைக்கு சென்று முன்னோர்களை வழிபட திட்டமிட்டு இருந்தனர். இந்தநிலையில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் ஆடி அமாவாசையில் பக்தர்கள் கூட தடை விதித்து கோவில் உதவி ஆணையாளர் விமலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பெய்துவரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் நீர் வரத்து அதிகரிக்கலாம் என்ற அச்சுறுத்தல் உள்ளது. மேலும் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நொய்யல் ஆற்றங்கரையில் பக்தர்கள் கூட அனுமதிக்க வேணடும் என பேரூர் வருவாய்த்துறையினரும், பொதுப்பணித்துறை யினரும் கோவில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பி உள்ளனர்.

    அந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு ஆடி அமாவாசை தினத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் புனித நீராடவோ, தர்ப்பணம் கொடுக்கவோ தடை விதிக்கப்படுவதாக உதவி ஆணையாளர் விமலா தெரிவித்துள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளாக தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லாததால் இந்த ஆண்டிலாவது ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம் என்று நினைத்து இருந்த பக்தர்கள் தடை காரணமாக அதிருப்தி அடைந்துள்ளனர்.

    எனவே தடையை நீக்கி அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில், செயல் அலுவலர் வெற்றிஅரசு தலைமையில் அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
    • மீஞ்சூர், வேளாளர் தெரு, பஜார் பகுதி, டி. எச் சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை செய்யப்படுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில், செயல் அலுவலர் வெற்றிஅரசு தலைமையில் அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். மீஞ்சூர், வேளாளர் தெரு, பஜார் பகுதி, டி. எச் சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் சுமார் 712 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் 20 கடைகளுக்கு அபராதம் விதித்து ரூ.26ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டது. சோதனையின் போது இளநிலை உதவியாளர்கள் அன்பரசு, கருப்பையா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் உடன் இருந்தனர்.

    ×