என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கடந்த வெள்ளிக்கிழமை மர்ம கும்பல் புகுந்து 2 மாணவர்களை அரிவளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்தணி:

    திருத்தணியில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம கும்பல் புகுந்து 2 மாணவர்களை அரிவளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடிய போது நீண்ட நேரத்துக்கு பின்னர் பொன்னரசுவின் உடலை மீட்டனர்.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி, பல்லாவரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் பொன்னரசு (வயது15). இவர் குன்றத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற பொன்னரசு மாலையில் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதற்கிடையே மணஞ்சேரி, திருப்பதி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள கிணற்றின் அருகே பொன்னரசுவின் பள்ளி சீருடை மற்றும் செருப்பு கிடந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கும், பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடிய போது நீண்ட நேரத்துக்கு பின்னர் பொன்னரசுவின் உடலை மீட்டனர். அவர், கிணற்றில் குதித்து குளித்த போது தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பொன்னரசு நண்பர்களுடன் வந்து குளித்தபோது இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருத்தணி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து தினசரி வீடுகள் தேடி வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
    • வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    திருத்தணி:

    திருத்தணி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து தினசரி வீடுகள் தேடி வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் ராமஜெயம் மேற்பார்வையில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    இதனை நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி துணைத்தலைவர் சாமிராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இருந்தது.
    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து தண்ணீர் கசிவுடன் கான்கிரீட் கலவை பெயர்ந்து.

    மீஞ்சூர் ஒன்றியம் வெள்ளி வாயில் சாவடி ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இருந்தது.

    சேக்கன் காலனி கிருஷ்ணா நகர், சில்வர் நகர், திருவுடையம்மன் நகர், புதுச்சேகன் காலனி, உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து தண்ணீர் கசிவுடன் கான்கிரீட் கலவை பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் கீழே இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே ஆபத்தான மேல்நிலைத தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ராமசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
    • சமத்துவபுரத்தை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அமுதா, நேரில் பார்வையிட்டு அங்குள்ள வீடுகளை ஆய்வு செய்தார்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள ராமசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் சமத்துவ புரத்தை திறப்பதற்கான பணிக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து சாலைவசதி, குடிநீர்குழாய், தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை தேவைக்கான பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. இதனை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இதற்கிடையே சமத்துவபுரத்தை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அமுதா, நேரில் பார்வையிட்டு அங்குள்ள வீடுகளை ஆய்வு செய்தார். அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கூடுதல் இயக்குனர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஒருசில மருந்து மாத்திரை போதிய அளவு இருப்பு இல்லை என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கூறினர்.
    • இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு தேவையான டாக்டர் மற்றும் நர்ஸ் பணியாற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதி

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி எஸ்.பி.கோவில் தெருவில் இம்மாதம் 5-ம் தேதி பாம்பு கடித்து பள்ளி மாணவர்கள் இருவர் சிகிச்சை பலனின்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பலியானார்கள்.

    இந்நிலையில், ஆரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடி மற்றும் நாய் கடிக்கு (ஊசி) மருந்து இருப்பு இல்லை என்று தகவல் வெளியானது. இதையடுத்து இந்த மருத்துவமனையில் பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் திடீரென ஆய்வு செய்தார். மேலும், பாம்பு கடி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு போதிய மருந்து உள்ளதா? என விசாரித்தார்.

    அப்போது இரவு நேரங்களில் மருத்துவர் மற்றும் நர்ஸ் இல்லை என்றும் ஒருசில மருந்து மாத்திரை போதிய அளவு இருப்பு இல்லை என்றும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கூறினர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி போதிய அளவு மருந்து, மாத்திரை இருப்பு வைக்கவும், இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு தேவையான டாக்டர் மற்றும் நர்ஸ் பணியாற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக பணியில் இருந்த டாக்டர் திலகிடம் எம்.எல்.ஏ உறுதி கூறினார்.

    இந்த ஆய்வின்போது பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் சுகுமார், ஆரணி பேரூர் திமுக செயலாளர் முத்து, நியமன குழு உறுப்பினர் கண்ணதாசன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

    • விழாவிற்கு முதன்மைக் கவாத்துப் போதகர் ஜோசப் செல்வராஜ் வரவேற்றார்.
    • சிறப்பு விருந்தினராக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் அபின் தினேஷ் மோடக் கலந்து கொண்டார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில், பயிற்சி முடித்த 183 ஆண் காவலர்களுக்குப் பயிற்சி நிறைவு விழா போலீஸ் சூப்பிரண்டு ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

    விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், பயிற்சி பள்ளி முதல்வருமான சீபாஸ் கல்யாண் தலைமை தாங்கினார். திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் அனுமந்தன் முன்னிலை வகித்தார்.

    இந்த விழாவிற்கு முதன்மைக் கவாத்துப் போதகர் ஜோசப் செல்வராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் அபின் தினேஷ் மோடக் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பயிற்சியில் கவாத்து, துப்பாக்கிச் சுடுதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய காவலர்களுக்குச் சான்றிதழ், பதக்கங்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பயிற்சி முடித்து காவல் பணியில் ஈடுபட போகும் உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. உங்களை பார்க்கும்போது எனது பயிற்சி காலம் எனக்கு நினைவுக்கு வருகிறது. இப்போது உங்களது குடும்பத்தினர் உங்களை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

    இந்தப் பயிற்சி காலங்களில் நீங்கள் கற்றுக்கொண்டவை ஏராளம். நான் பொறியியல் பட்டதாரி. தற்போது காவல்துறையில் உயர்ந்த பதவியில் உள்ளேன். அதேபோல் தற்போது இந்த பயிற்சியில் 83 பொறியாளர்கள் காவல் பயிற்சி பெற்றுள்ளீர்கள். நீங்கள் இத்துறையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு முன்னேறுங்கள். தற்போது உங்களுக்கு பொறுப்புகள் அதிகம் உள்ளது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும். பணியின் போது, மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பயிற்சி முடித்த காவலர்களின் வீர சாகச, அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

    முடிவில் காவலர் பயிற்சி பள்ளியின் முதன்மை சட்ட போதகர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

    இதேபோல் திருவள்ளுவர் அடுத்த கனகவல்லிபுரம் பகுதியில் செயல்படும் காவலர் பயிற்சி பள்ளியில் 432 பெண்

    காவலர்களுக்குப் பயிற்சி நிறைவு விழா நடந்தது.

    விழாவுக்கு காவல்துறை தலைவர் (பொது) ராதிகா கலந்து கொண்டு பயிற்சியின்போது கவாத்து, துப்பாக்கிச் சுடுதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய பெண் காவலர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் ஆகியவற்றை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    • திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம்‌ நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • பலத்த காயமடைந்த ஆனந்தவேலை மீட்டு திருவள்ளூர் அரசு அஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூரை சேர்ந்தவர் ஆனந்த வேல் (56). மப்பேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு வேலையை முடித்து, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    கடம்பத்தூர் ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் கீழே இறங்கியபோது திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம்‌ நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தவேலை மீட்டு திருவள்ளூர் அரசு அஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆனந்தவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில்குமார் மப்பேடு போலீசில் சரண் அடைந்தார். கடம்பத்தூர் சப்-இன்ஸ் பெக்டர் இளங்கோவன் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார் ஹேமஸ்ரீ
    • சாதனை படைத்த மாணவி ஹேமஸ்ரீயை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே நாகராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்த பிரபு - வினோதினி தம்பதியரின் மகள் பி.ஹேமஸ்ரீ (வயது 7). அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.

    கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில், மூன்று ஆண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வரும் ஹேமஸ்ரீ, பூர்ண கபோடாசனம் எனும் ஆசனத்தில், ஒரு நிமிடத்தில் 78 முறை கழுத்துடன் இரு கால்களை இணைத்து புதிய உலக சாதனை படைத்தார்.

    இவரது சாதனை, ‛வேல்ட்வைட் புக் ஆப் ரெக்கார்ட்', ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', ‛அசிஸ்ட் உலக சாதனை', ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. சாதனை படைத்த மாணவி ஹேமஸ்ரீ, யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை, நாகராஜகண்டிகை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • சோதனைச் சாவடி வழியாக வரும் வாகனங்களை பொன்னேரி சார் ஆட்சியர் சோதனை மேற்கொண்டார்
    • போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

    திருவள்ளூர்:

    ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வாகனங்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பொம்மாஜி குளம் தமிழகம்-ஆந்திரா எல்லை பகுதியான சோதனைச் சாவடி வழியாக வரும் வாகனங்களை பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் திடீர் சோதனை மேற்கொண்டார்.

    அந்த பகுதி வழியாக வரும் பஸ், லாரி, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தார். அப்போது கும்மிடிப்பூண்டி தாசில்தார் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    மேலும் வாகன சோதனை தொடரும் எனவும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சார் ஆட்சியர் தெரிவித்தார்.

    • செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைவாக இருக்கும்போது சாதாரண நாட்களில் 23 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கப்படும்.
    • அனகாபுத்தூர் மற்றும் திருநீர்மலை இடையே 120 மீட்டர் நீளத்துக்கு ஆற்றில் அகலப்படுத்தும் பணி நடந்தது.

    பூந்தமல்லி:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கன. அடி ஆகும். தற்போது 2,804 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 20 அடிக்கு தண்ணீர் இருக்கிறது.

    வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியில் 23 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் 22 அடிக்கு மட்டும் ஏரியில் தண்ணீர் தேக்கி வைத்து உபரி நீரை உடனடியாக வெளியேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது உபரி நீர் வெளியேற்றப்பட்டு அடையாறு ஆற்றில் கலந்து கடலில் சேறும்.

    அடையாறு ஆற்றில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் முழுவதும் வீணாகி வருகிறது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைவாக இருக்கும்போது சாதாரண நாட்களில் 23 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கப்படும். ஏற்கனவே தற்போது ஏரியில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. பருவமழை தீவிரம் அடையும் போது வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் ஏரியில் நீர் இருப்பை 22 அடியில் மட்டும் சேமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அடையாறு ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும்போது 42 கி.மீட்டர் தூரத்தில் சில இடங்கள் குறுகலாக இருப்பதால் இந்த இடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வந்தன.

    இதைத்தொடர்ந்து அனகாபுத்தூர் மற்றும் திருநீர்மலை இடையே 120 மீட்டர் நீளத்துக்கு ஆற்றில் அகலப்படுத்தும் பணி நடந்தது. இதேபோல் மணப்பாக்கம் பாலம், குன்றத்தூர் பகுதியிலும் விரிவாக்கப் பணி நடைபெற்றது. ஆற்றின் கரைகளை விரிவாக்கும் பணி 60 சதவீதம் முடிந்துள்ளது.

    மணப்பாக்கம் பாலம் அருகே தடுப்புச்சுவர் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. இது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரை வெளியேற்றும்போது உதவும்.

    கடந்த 2015-16-ம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 922.67 மில்லியன் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் பின்னர் 2020-21-ம் ஆண்டில் 1725.93 மில்லியன் கனஅடியும், 2021-22-ம் ஆண்டில் 3,998.94 மில்லியன் கனஅடியும் உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேரண்டூர் பகுதியில் 35 ஹெக்டேர் பரப்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.
    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் பகுதியில் 35 ஹெக்டேர் பரப்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர் பாயும் பாசன கால்வாய் மீது 15 மீட்டர் நீளத்துக்கு அவர் பாலம் அமைக்கப்படுகிறது.

    இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த பாலத்தால் ஏரிக்கு செல்லும் நீர் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதற்கிடையே பாசன கால்வாய் மீது பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள், விவசாயிகள் உள்ளட சுமார் 50-க்கும் மேற்பட்டடோர் பாலம் கட்டப்படும் இடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலம் கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, தொழிற்சாலை பணிக்காக தனிநபரால் இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது. தொழிற்சாலை அமைத்தால் அதில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏரி நீர் மாசடையும் என்றனர்.

    ×