என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாசன கால்வாயில் பாலம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு- விவசாயிகள் போராட்டம்
- பேரண்டூர் பகுதியில் 35 ஹெக்டேர் பரப்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.
- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் பகுதியில் 35 ஹெக்டேர் பரப்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர் பாயும் பாசன கால்வாய் மீது 15 மீட்டர் நீளத்துக்கு அவர் பாலம் அமைக்கப்படுகிறது.
இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த பாலத்தால் ஏரிக்கு செல்லும் நீர் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதற்கிடையே பாசன கால்வாய் மீது பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள், விவசாயிகள் உள்ளட சுமார் 50-க்கும் மேற்பட்டடோர் பாலம் கட்டப்படும் இடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலம் கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, தொழிற்சாலை பணிக்காக தனிநபரால் இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது. தொழிற்சாலை அமைத்தால் அதில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏரி நீர் மாசடையும் என்றனர்.






