என் மலர்
உள்ளூர் செய்திகள்
தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் பொன்னேரி சார் ஆட்சியர் திடீர் வாகன சோதனை
- சோதனைச் சாவடி வழியாக வரும் வாகனங்களை பொன்னேரி சார் ஆட்சியர் சோதனை மேற்கொண்டார்
- போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
திருவள்ளூர்:
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வாகனங்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பொம்மாஜி குளம் தமிழகம்-ஆந்திரா எல்லை பகுதியான சோதனைச் சாவடி வழியாக வரும் வாகனங்களை பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் திடீர் சோதனை மேற்கொண்டார்.
அந்த பகுதி வழியாக வரும் பஸ், லாரி, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தார். அப்போது கும்மிடிப்பூண்டி தாசில்தார் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும் வாகன சோதனை தொடரும் எனவும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சார் ஆட்சியர் தெரிவித்தார்.
Next Story







