என் மலர்
திருவள்ளூர்
- திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
- திருத்தணி, திருவள்ளூர், பூண்டி, திருவாலங்காடு, ஊத்துக்கோட்டை பகுதியில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீட்டர் மழை பதிவானது. இதேபோல் திருத்தணி, திருவள்ளூர், பூண்டி, திருவாலங்காடு, ஊத்துக்கோட்டை பகுதியில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி-5
பள்ளிப்பட்டு-19
சோழவரம்-24
பொன்னேரி-15
செங்குன்றம்-8.8
ஜமீன் கொரட்டூர்-4
பூந்தமல்லி-2
திருவாலங்காடு-21
திருத்தணி-71
பூண்டி-36
திருவள்ளூர்-23
ஊத்துக்கோட்டை-33
ஆவடி-9.
- நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், திமுக நகர செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் புதிய நூலகத்தை திறந்து வைத்தனர்
- பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
பொன்னேரி:
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக் குழு, பொன்னேரி கிளை நூலக வாசகர் வட்ட வளர்ச்சி குழு நடத்தும் 55ஆவது தேசிய நூலக வார விழா பொன்னேரி கிளை நூலகத்தில் நடைபெற்றது விழாவில் வெல்டன் வாசகர் தலைமை தாங்கினார். வாசகர் வட்டத் தலைவர் ஜோதிஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். பொன்னேரி கிளை நூலக நூலகர் சங்கர் முன்னிலை வைத்தார்.
இதில் கவிஞர் பொன் தாமோதரன், ஆத்தி மாலை ஆசிரியர் ஜெயச்சந்திரன், பொன்னேரி நகர துணைத் தலைவர் விஜயகுமார், தமிழ் ஆசிரியை ரதி, யோகா ஆசிரியை ஆர்த்தி, சமூக ஆர்வலர் பாலச்சந்தர் ஆகியோர், புத்தகம் வாசிப்பு குறித்தும், கல்வியின் மேன்மை குறித்தும், மாணவர்களிடயே புத்தகம் படிக்கும் பழக்கம், அறிவு வளர்த்துக் கொள்வது, யோகா, உடற்பயிற்சி பயன்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.
பின்னர் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொன்னேரி நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், திமுக நகர செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் புதிய நூலகத்தை திறந்து வைத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் வேலா கதிரவன், நல்லசிவம், வாசகர் வட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், நூலக வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
திருநின்றவூர் இ.பி. காலனியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியை தாளாளர் மகன் வினோத் நிர்வாகித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகி வினோத், பிளஸ்-2 மாணவிகளிடம் பாடம் சம்பந்தமாக கவுன்சிலிங் இருப்பதாக தனியாக அழைத்து பேசி வந்ததாக தெரிகிறது. அப்போது அவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
கடந்த வாரம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு நிர்வாகி வினோத் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி மாணவி தோழிகளிடம் கூறியபோது இதே போல் அவர் மேலும் பல மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பள்ளி நிர்வாகி வினோத்தின் செயல் குறித்து தங்களது பெற்றோருக்கு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று காலை பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகளுக்கு எதிராக நிர்வாகி வினோத்தின் செயல்பாட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் பள்ளி தாளாளர் ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் மாணவிகளின் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் பள்ளி அருகே சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்ததும் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற மாணவிகளின் பெற்றோரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை வலியுறுத்தி அவர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, "பள்ளி நிர்வாகி வினோத் பல மாணவிகளை தனியாக அழைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து இருப்பதாக" சரமாரியாக குற்றம்சாட்டினர். பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகி வினோத் பள்ளியில் இல்லை. அவர் வெளியூர் சென்று இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள். இச்சம்பவத்தில் திருநின்றவூர் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பள்ளி மாணவிக்கு அதே பகுதியில் வசித்து வரும் லாரி கிளீனரான லோகேசுடன் பழக்கம் ஏற்பட்டது.
- கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார்.
கும்மிடிப்பூண்டி:
புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த 14 வயது மாணவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் லாரி கிளீனரான லோகேசுடன் (22) பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
இது பற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். மேலும் மாணவிக்கு கட்டுப்பாடுகள் விதித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார். அவரை பெற்றோர் தேடி வந்தனர். இது குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவி, காதலன் லோகேசுடன் திண்டிவனத்தில் விடுதியில் அறை எடுத்து தங்கி இருப்பது தெரிந்தது. போலீசார் விரைந்து சென்று மாணவியை மீட்டனர். மேலும் லோகேசை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியை திருத்தணி கோவிலுக்கு அழைத்து சென்று தாலி கட்டி திருமணம் செய்து இருப்பது தெரிந்தது. பின்னர் அவர்கள் திருப்பூர், திண்டிவனம் சென்று தங்கி உள்ளனர்.
மாணவியை திருமணம் செய்த லோகேஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இன்று காலை தெற்கு ஆந்திர மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. நாளை முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தல் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகி வினோத், பிளஸ்-2 மாணவிகளிடம் பாடம் சம்பந்தமாக கவுன்சிலிங் இருப்பதாக தனியாக அழைத்து பேசி வந்ததாக தெரிகிறது.
- மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
திருநின்றவூர்:
திருநின்றவூர், இ.பி. காலனியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியை தாளாளர் மகன் வினோத் நிர்வாகித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகி வினோத், பிளஸ்-2 மாணவிகளிடம் பாடம் சம்பந்தமாக கவுன்சிலிங் இருப்பதாக தனியாக அழைத்து பேசி வந்ததாக தெரிகிறது. அப்போது அவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
கடந்த வாரம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு நிர்வாகி வினோத் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி மாணவி தோழிகளிடம் கூறியபோது இதே போல் அவர் மேலும் பல மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பள்ளி நிர்வாகி வினோத்தின் செயல் குறித்து தங்களது பெற்றோருக்கு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுக்கு எதிராக நிர்வாகி வினோத்தின் செயல்பாட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களிடம் பள்ளி தாளாளர் ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் மாணவிகளின் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் பள்ளி அருகே சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்ததும் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற மாணவிகளின் பெற்றோரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி அவர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது.
போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, பள்ளி நிர்வாகி வினோத் பல மாணவிகளை தனியாக அழைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து இருப்பதாக சரமாரியாக குற்றம்சாட்டினர்.
பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகி வினோத் பள்ளியில் இல்லை. அவர் வெளியூர் சென்று இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.
இச்சம்பவத்தில் திருநின்றவூர் பகுதியில் பரபரப்பாக காாணப்படுகிறது.
- 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
- வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைத்து மழை வெளுத்து வாங்கியதால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து அதிகமானதை தொடர்ந்து நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. இதனால் இந்த 2 ஏரிகளில் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உபரிநீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வழு விழந்ததால் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்தது.
இதைத்தொடர்ந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டது. தற்போது குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 7,907 மி.கன அடி (7.9 டி.எம்.சி) தண்ணீர் உள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குடிநீர் ஏரிகளில் மொத்தம் 2 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ஏரிகளில் 10 ஆயிரம் மி.கன. அடி (10 டி.எம்.சி) தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்பதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் போதுமான தண்ணீர் இருப்பதால் கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் கிடைக்கும். எனவே அடுத்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 2500 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 192 கன அடி தண்ணீர் வருகிறது. அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கன அடி. இதில் 435 மி.கன அடி நீர் உள்ளது. ஏரிக்கு 184 கன அடி தண்ணீர் வருகிறது. 3 கன அடி வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,484 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 68 சதவீதம் ஆகும்.
ஏரிக்கு 58 கன அடி தண்ணீர் மட்டும் வருகிறது. 139 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 1,988 மி. கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 340 கன அடி தண்ணீர் வருகிறது. 53 கன அடி வெளியேற்றப்படுகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழு கொள்ளளவான 500 மி.கன. அடி நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 20 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென பலத்த மழை கொட்டியது.
- மழை காரணமாக நடைபாதை வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென பலத்த மழை கொட்டியது. இன்றுகாலையும் சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழைபெய்தது. சோழவரம், பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணியில் இன்று காலை விட்டு விட்டு பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இன்று கார்த்திகை மாத அமாவாசை ஆகும். எனினும் மழை தொடர்ந்து பெய்ததால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. இதனால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. குறைவான பக்தர்கள் கோவில் நுழைவுவாயிலில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.
திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கே.ஜி.கண்டிகை, நல்லாட்டூர், கனகம்மாசத்திரம், மத்தூர், திருவாலங்காடு, ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சென்றனர்.
திருத்தணி நகரத்தில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப் பட்டுள்ளன. இதில் மழை நீர் தேங்கியதால் அவ்வழியே சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. மழை காரணமாக நடைபாதை வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.
மாவட்டத்தில் அதி கபட்சமாக சோழவரத்தில் 34 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீட்டரில்)வருமாறு:-
திருவள்ளூர்-3, சோழவரம் - 34 , தாமரைப்பாக்கம் - 27, கும்மிடிப்பூண்டி - 17 , பொன்னேரி - 15 , புழல் - 13 , பூண்டி - 13 ஆவடி - 11, ஊத்துக்கோட்டை - 7
- தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.
- மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொன்னேரி (வடக்கு) மாணவர்களிடையே காகிதப் பறவை கலை நிகழ்வு நடைபெற்றது.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொன்னேரி (வடக்கு) மாணவர்களிடையே காகிதப் பறவை கலை நிகழ்வு நடைபெற்றது. இதில் சமத்துவம் சகோதரத்துவம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சக மாணவர்களிடையே நட்புறவை வளர்க்கும் விதமாக மாணவர்களிடையே காகிதத்தால் பறவைகள், விலங்குகள், பூக்கள், காகித கப்பல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள், செய்து காண்பித்து மாணவர்களிடையே சமத்துவம் சகோதரத்துவத்தை விளக்கினர்.
இதில் தலைமை ஆசிரியயை குளோரி ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பு பயிற்றுனர்கள் ஜமுனா, செபஸ்டின், சுகந்தி ரம்யா, உட்பட பலர் கலந்து கொண்டனர்
- வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
- மீன்பிடி படகுகளை கரையில் கட்டி வைத்து வலைகளை பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.
பொன்னேரி:
வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் பலத்த மழைபெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து எண்ணூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
எனினும் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் மழை இல்லை. ஆனால் வழக்கத்தை விட குளிர் அதிக அளவில் நிலவி வருகிறது.
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம், காரனோடை, காட்டூர் தச்சூர் உள்ளிட்ட பகுதியில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை பழவேற்காடு கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்தகாற்றும் வீசுகிறது.
இதனால் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமமக்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. மீன்பிடி படகுகளை கரையில் கட்டி வைத்து வலைகளை பாதுகாப்பாக வைத்து உள்ளனர். குளிர்ந்த காற்று வேகமாக வீசி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். வயதானவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.
இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் கூறும்போது, கடல்பகுதியில் தற்போது குளிர்ந்த காற்று வேகமாக வீசுகிறது. வானிலை ஆய்வு மையத்தின் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
- கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தனஞ்செழியன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாராயணனை வெட்டி கொலை செய்தார்.
- தனஞ்செழியன் அவனது கூட்டாளிகள் உட்பட 12பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போரூர்:
நெற்குன்றம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதி சி.டி.என் நகர் பகுதியை சேர்ந்த தனஞ்செழியன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தனஞ்செழியன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாராயணனை வெட்டி கொலை செய்தார். இவ்வழக்கில் தனஞ்செழியன் அவனது கூட்டாளிகள் உட்பட 12பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்த தனஞ்செழியன் பின்னர் வழக்கில் ஆஜராகாமல் திடீரென தலைமறைவாகிவிட்டார். கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூரில் பதுங்கி இருந்த தனஞ்செழியனை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் அர்சுனன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- பெரம்பூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் நிலஅளவீடு பணிகளை நிறுத்தினர்.
- ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் சென்னை பெருநகர எல்லைக்குள் வந்து விட்டதால் உடனே வீட்டு மனை பட்டா வழங்க முடியாது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா கிடையாது.
இவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 30 வருடங்களாக கோரிக்கை மனு அளித்தனர்.
இதற்கிடையே வருவாய்த்துறை அதிகாரிகள் லட்சிவாக்கம் அருகே உள்ள பெரம்பூரில் உள்ள தோப்பு புறம்போக்கு நிலத்தில் வீட்டு மனை பட்டா வழங்க அளவீடு பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பெரம்பூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் நிலஅளவீடு பணிகளை நிறுத்தினர். இதனால் வீட்டுமனை பட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டுமனை பட்டாவை உடனடியாக வழங்க கோரி லட்சிவாக்கத்தை சேர்ந்த பழங்குடியினர் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும குடும்பத்துடன் அங்குள்ள திறந்தவெளி இடத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஜீவா தலைமை தாங்கினார்.
இரவும் அவர்களது போராட்டம் நீடித்தது. இதையடுத்து சப்-கலெக்டர் மகாபாரதி, ஊத்துக்கோட்டை தாசில்தார் அருண்குமார், துணை போலீஸ் கண்காணிப்பாளர் சாரதி, இன்ஸ்பெக்டர் ஏழுமலை நேற்று இரவு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் சென்னை பெருநகர எல்லைக்குள் வந்து விட்டதால் உடனே வீட்டு மனை பட்டா வழங்க முடியாது.
குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்த இடங்களை கண்டறிந்து வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதிமொழி அளித்தனர்.
ஆனால் இதை ஏற்காமல் அவர்கள் வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி போராட்டத்ததை தொடர்ந்தனர். விடிய, விடிய அவர்களது போராட்டம் நீடிதத்தது. கடும் குளிரிலும் அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு படுத்து தூங்கினர்.
இன்று காலையும் அவர்களது போராட்டம் 2-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. அவர்களிடம் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்தை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
கடந்த மாதம் 26-ந் தேதியும் இதேபோல் கிராமமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு திறந்த வெளியில் சமைத்து சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊத்துக்கோட்டை தாசில்தார் அருண்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.






