என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே நட்புறவை வளர்க்கும் விதமாக காகிதப் பறவை கலை நிகழ்வு
    X

    மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே நட்புறவை வளர்க்கும் விதமாக காகிதப் பறவை கலை நிகழ்வு

    • தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.
    • மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொன்னேரி (வடக்கு) மாணவர்களிடையே காகிதப் பறவை கலை நிகழ்வு நடைபெற்றது.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொன்னேரி (வடக்கு) மாணவர்களிடையே காகிதப் பறவை கலை நிகழ்வு நடைபெற்றது. இதில் சமத்துவம் சகோதரத்துவம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சக மாணவர்களிடையே நட்புறவை வளர்க்கும் விதமாக மாணவர்களிடையே காகிதத்தால் பறவைகள், விலங்குகள், பூக்கள், காகித கப்பல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள், செய்து காண்பித்து மாணவர்களிடையே சமத்துவம் சகோதரத்துவத்தை விளக்கினர்.

    இதில் தலைமை ஆசிரியயை குளோரி ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பு பயிற்றுனர்கள் ஜமுனா, செபஸ்டின், சுகந்தி ரம்யா, உட்பட பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×