என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி கிளை நூலகத்தில் 55வது தேசிய நூலக வார விழா
- நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், திமுக நகர செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் புதிய நூலகத்தை திறந்து வைத்தனர்
- பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
பொன்னேரி:
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக் குழு, பொன்னேரி கிளை நூலக வாசகர் வட்ட வளர்ச்சி குழு நடத்தும் 55ஆவது தேசிய நூலக வார விழா பொன்னேரி கிளை நூலகத்தில் நடைபெற்றது விழாவில் வெல்டன் வாசகர் தலைமை தாங்கினார். வாசகர் வட்டத் தலைவர் ஜோதிஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். பொன்னேரி கிளை நூலக நூலகர் சங்கர் முன்னிலை வைத்தார்.
இதில் கவிஞர் பொன் தாமோதரன், ஆத்தி மாலை ஆசிரியர் ஜெயச்சந்திரன், பொன்னேரி நகர துணைத் தலைவர் விஜயகுமார், தமிழ் ஆசிரியை ரதி, யோகா ஆசிரியை ஆர்த்தி, சமூக ஆர்வலர் பாலச்சந்தர் ஆகியோர், புத்தகம் வாசிப்பு குறித்தும், கல்வியின் மேன்மை குறித்தும், மாணவர்களிடயே புத்தகம் படிக்கும் பழக்கம், அறிவு வளர்த்துக் கொள்வது, யோகா, உடற்பயிற்சி பயன்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.
பின்னர் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொன்னேரி நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், திமுக நகர செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் புதிய நூலகத்தை திறந்து வைத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் வேலா கதிரவன், நல்லசிவம், வாசகர் வட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், நூலக வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர்.






