என் மலர்
திருப்பூர்
- கார் சின்னவீரம்பட்டி அருகே தனியார் பள்ளி முன்பு சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது.
- தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை சிவசக்தி காலனியை சேர்ந்தவர் ராமு. இவர் தனது காரில் உடுமலை- திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். கார் சின்னவீரம்பட்டி அருகே தனியார் பள்ளி முன்பு சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் சுதாரித்து கொண்ட ராமு உடனடியாக காரை நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கினார். அதற்குள் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
உடனே இதுகுறித்து உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி கோபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் புளூசைன் தரச்சான்று அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் என்றார்.
- வர்த்தகம் என்ற நிலையை தாண்டி, நீடித்த நிலையான இயற்கைசார் உற்பத்திக்கு மாற வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி அடல் இன்குபேஷன் மையம், சுவிட்சர்லாந்து புளூசைன் சிஸ்டம் நிறுவனம் சார்பில் நீடித்த நிலையான இயற்கைசார் ஜவுளி உற்பத்தி குறித்த கருத்தரங்கு நடந்தது. திருமுருகன்பூண்டி தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு(பியோ) தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.
அடல் இன்குபேஷன் மைய முதன்மை செயல் அலுவலர் பெரியசாமி பேசுகையில், சர்வதேச சந்தைகளில் காலூன்றிய வர்த்தகர்கள், ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் இயற்கை சார் உற்பத்தியில் உருவானதாக இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். குறிப்பாக வளம் குன்றா வளர்ச்சி மறுசுழற்சி தொழில்நுட்பத்தை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
தொழிற்சாலைகளில், கார்பன் உற்பத்தியாகும் அளவுக்கு அவற்றை உறிஞ்சும் இயற்கை சார் உற்பத்தி தொழில்நுட்பம் பின்பற்ற வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். அதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் புளூசைன் தரச்சான்று அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் என்றார்.
திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் பேசுகையில், திருப்பூரில் உள்ள பிரின்டிங் நிறுவனங்களுக்கு தரச்சான்று பெற பல்வேறு இடங்களில் விண்ணப்பிக்கிறோம். குறிப்பாக மாறுபட்ட 5 இடங்களில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. ஒரே தரச்சான்று பெற்றால் போதும் என்ற நிலையை வெளிநாட்டு வர்த்தகர்கள் எதிர்பார்க்கும்படி ஏற்படுத்த வேண்டும் என்றார்.
சுவிட்சர்லாந்து புளூசைன் சிஸ்டம் நிறுவன அதிகாரி கத்திரினாள் மேயர் பேசுகையில், ஜவுளி உற்பத்தியில், பல்வேறு பிரிவில் ரசாயணம் பயன்படுத்தப்படுகிறது.அதிலும் இயற்கையான சாயம் பயன்படுத்தப்பட வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு கருதி நீடித்த நிலையான ஜவுளித்தரம் பராமரிக்க வேண்டும்.
இந்தியா சர்வதேச நாடுகளுக்கான சந்தையாக இருக்கிறது. வர்த்தகம் என்ற நிலையை தாண்டி, நீடித்த நிலையான இயற்கைசார் உற்பத்திக்கு மாற வேண்டும்.பிரின்டிங் மற்றும் சாய ஆலைகள் தரச்சான்று பெறுவதன் மூலம் உலக அளவில் வர்த்தக வாய்ப்புகளை பெறலாம் என்றார்.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், சாய விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். சாயம் மற்றும் பிரின்டிங் நிறுவனங்கள் தரச்சான்று பெறுவதன் மூலமாக நீடித்த நிலையான இயற்கை சார் ஜவுளி உற்பத்தி எளிதாகுமென கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
- பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் பதவி விலக வேண்டும்.
- இந்திய நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் கேள்விக்கு அச்சப்பட்டு பிரதமா் வர மறுக்கிறாா்
திருப்பூர்:
திருப்பூா் காங்கயம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சாா்பில் தலைவா்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது: -
இந்தியா கூட்டணி பா.ஜ.க., அரசை எதிா்க்கின்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து செல்வதற்கான பணிகளை வரும் காலங்களில் மேற்கொள்வாா்கள் என எதிா்பாா்க்கிறோம். மக்களை பாதுகாக்கின்ற கடமையில் மத்திய பா.ஜ.க., அரசு தவறிவிட்டது.
கடந்த 3 மாதங்களாக மணிப்பூரில் நடைபெறும் வன்முறை சம்பவம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் கேள்விக்கு அச்சப்பட்டு பிரதமா் வர மறுக்கிறாா்.
மணிப்பூரை தொடா்ந்து ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. எனவே, பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் பதவி விலக வேண்டும்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 1½ வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட நிலையில் அந்த குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதோடு, ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.
- அதிகபட்சமாக ரூ.87 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் கூடிய மயிலைப் பசு விற்பனையானது.
- மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பழையகோட்டையில் காங்கேயம் மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 47 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ரூ.12 லட்சத்துக்கு 35 மாடுகள் விற்பனையாயின. அதிகபட்சமாக ரூ.87 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் கூடிய மயிலைப் பசு விற்பனையானது.
- துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
உடுமலை:
உடுமலையை அடுத்த கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கிளுவங்காட்டூா், எலையமுத்தூா், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், அமராவதி நகா், கோவிந்தாபுரம், அமராவதி நகா் செக்-போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூா் மற்றும் ஆலாம்பாளையம்.
கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 8-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 2மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம்.
- செல்போனில் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கு பலமணி நேரம் செலவிடுகிறோம்.
- மனஅமைதி இல்லையென்றால் மற்றவர்களிடம் உள்ள தவறு மட்டுமே கண்ணுக்கு தெரியும்.
திருப்பூர்:
திருப்பூர் கணக்கம்பாளையம் வாஷிங்டன்நகரில் 300-வது கிராமிய சேவைத் திட்டம் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
செல்போனில் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கு பலமணி நேரம் செலவிடுகிறோம். ஆனால் ஒரு அரைமணி நேரம் யோகாவுக்கு செலவிட நாம் தயாராக இல்லை. எந்த சூழ்நிலையிலும் மனதை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதுதான் மனவளம். அதுவே மனநலம். மனஅமைதி இல்லையென்றால் மற்றவர்களிடம் உள்ள தவறு மட்டுமே கண்ணுக்கு தெரியும்.பணமும், பதவியும் வரும்போது இருக்க வேண்டியது பணிவு மட்டும்தான். பணிவுடன் இருப்பவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மனிதா்கள் கடைசி எல்லையை அடைந்துவிட்டால் தேடுவதை நிறுத்த வேண்டும்.
- இளைஞா்கள் நாளை, நாளை என ஓடிக்கொண்டிருக்கும்போது இன்று வீணாகி கொண்டிருக்கிறது.
திருப்பூர்:
திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் 15-ம் ஆண்டு கம்பன் விழா நடைபெற்றது. இதில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பங்கேற்று பேசியதாவது:-
மனிதா்களுக்கு புலன்களை அடக்குவது சாதாரண காரியம் அல்ல. உலகத்தில் எதை வேண்டுமானாலும் அடக்கிவிடலாம். தன்னைத்தானே அடக்குவதுதான் மிகவும் சிரமமான காரியம். எனவே, மற்றவா்களை அடக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு தன்னைத்தானே அடக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் உலகம் மிகவும் சரியானதாக மாறிவிடும்.
மரபு இலக்கியங்களைப் பாடிய புலவா்கள் தமிழைத் தெய்வமாக நினைத்து பாடினாா்கள். ஒரு பொய்யான சொல்லைக்கூட சொல்லமாட்டாா்கள். அக்காலத்து புலவா்கள் சத்தியத்தை மட்டும் சொன்னதால்தான் காவியங்கள் இன்றளவும் நிற்கின்றன.
கம்பராமாயணத்தைப் படிப்பவா்கள், கேட்பவா்கள், சொல்பவா்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறுவதுடன், ஞானமும், புகழும் உண்டாகும்.
மனிதா்கள் கடைசி எல்லையை அடைந்துவிட்டால் தேடுவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தேடுவதிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விடுவாா்கள். இன்றைய இளைஞா்கள் செல்வத்தை தேடும்போது போகத்தையும், புண்ணியத்தையும் இழக்கின்றாா்கள். இளைஞா்கள் நாளை, நாளை என ஓடிக்கொண்டிருக்கும்போது இன்று வீணாகி கொண்டிருக்கிறது.
கம்பராமாயணத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோ்ப்பது என்பது கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்கு ஒப்பாகும். கம்பராமாயணத்தைப் படித்தால் முதலில் வாழ்க்கையையும், அடுத்த நிலையில் கடவுளையும் கற்றுத்தருவாா் கம்பா் என்றாா்.
- மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பபதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
- டோக்கன்களையும் அந்தந்த பகுதியை சார்ந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கினர்.
காங்கயம்:
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பபதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 24.7.2023 முதல் 4.8.2023 வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-2 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 265 ஊராட்சிகளில் முதற்கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று சுமார் 3,88,687 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அந்த வகையில் இரண்டாம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் தொடங்கப்பட்டு 31,509 விண்ணப்பங்கள் பெறப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் 24.7.2023 முதல் 5.8.2023 வரை 4,20,196 கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து இன்று 6.8.2023 முதல் 16.8.2023 வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30வார்டுகளிலும், 6 நகராட்சி பகுதிகளிலுள்ள 147 வார்டுகளிலும் மற்றும் 15 பேரூராட்சிகளுக்குட்பட்ட 233 வார்டுகளிலும் இரண்டாம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இந்த விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் உள்ள அரசுஅலுவலக கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில் விண்ணப்பபதிவு முகாம்கள் நடைபெறும். இரண்டாம் கட்டமாக நடைபெறும் முகாம்களுக்கு 1.8.2023 முதல் 4. 8.2023 வரை ஆகிய நான்கு நாட்கள் விண்ணப்பப்படிவம் மற்றும் டோக்கன்களையும் அந்தந்த பகுதியை சார்ந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கினர்.
இந்த டோக்கன்களில் டோக்கன் நம்பர், நாள் மற்றும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மையத்திற்கு வர வேண்டும் எந்த நாளில் வரவேண்டும் என்று டோக்கன்களில் எழுதப்பட்டு வழங்கப்படும். குறிப்பிடப்பட்ட அந்த மையத்திற்கு அந்த நாள் அந்த நேரத்திற்கு வந்தால் போதுமானது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பழனியப்பா திருமண மண்டபம், ராஜாஜி வீதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பகுதிகளில் நடைபெற்ற கலைஞர் உரிமைத்திட்டம் விண்ணப்பம் பதிவு மையத்தினை அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் வட்டாட்சியர் புவனேஸ்வரி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- காலை 9 மணி முதல் மதி–யம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- 3 துணைமின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தாராபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட மூலனூர், கன்னிவாடி, கொளத்துபாளையம் ஆகிய 3 துணைமின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையங்களில் மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
அதன்படி மூலனூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதியான அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.
கன்னிவாடி துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதியான மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.
கொளத்துப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- கைவினை பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட்டனர்.
- உலக வங்கி குழு தலைவர் சமிக் சுந்தர் தாஸ், சமூக மேம்பாட்டு திட்ட ஆலோசகர் மதுஸ்ரீ பேனர்ஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருள்புரத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. திருப்பூர், பொங்கலூர், அவினாசி, குண்டடம், உடுமலை ஆகிய 5 வட்டாரங்களில் கடந்த 2019ம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சமுதாய பண்டக பள்ளி, உற்பத்தியாளர் குழு, தொழில் குழு, உற்பத்தியாளர் நிறுவனம், மதி சிறகுகள் அமைப்பு ஆகியவை குறித்து உலக வங்கியை சேர்ந்த குழு தலைவர் சமிக் சுந்தர் தாஸ், சமூக மேம்பாட்டு திட்ட ஆலோசகர் மதுஸ்ரீ பேனர்ஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த கைவினை பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரிகள் அருள்ஜோதி அரசன், கணேஷ்குமார், ராஜேஸ்குமார், திருப்பூர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மாணவா்களுக்கு நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
- குப்பைகள் கொட்டுவதையும், அவற்றுக்கு தீ வைப்பதையும் நகராட்சி நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட அகிலாண்டபுரம் பகுதியில் தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியிலுள்ள சிலா் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு அருகில் குப்பைகள் கொட்டுவது, அவற்றுக்கு தீ வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
பள்ளிக்கு அருகில் கொட்டப்பட்டு தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மாணவா்களுக்கு நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, தீ வைக்கப்படும் குப்பைகளில் இருந்து எழும் புகை மாணவா்களை பாதிக்கிறது.
எனவே, பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு அருகே குப்பைகள் கொட்டுவதையும், அவற்றுக்கு தீ வைப்பதையும் நகராட்சி நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
- ஏராளமான டாரஸ் லாரிகளில் வண்டல் மண் ஏற்றிக்கொண்டு தளி கிராம சாலை வழியாக செல்கின்றன.
- தளி கிராம சாலைகள் வழியாக சென்றால் குழாய் உடைத்து சாலை பழுது ஏற்படுகிறது.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.இதைத்தொடர்ந்து லாரிகளில் விவசாயிகள் மண் எடுத்துச் செல்கின்றனர். தினசரி ஏராளமான டாரஸ் லாரிகளில் வண்டல் மண் ஏற்றிக்கொண்டு தளி கிராம சாலை வழியாக செல்கின்றன. தளி வழியாகத்தான் ஐந்துக்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் செல்கின்றன.
லாரிகளால் இந்த குழாய்கள் உடைந்து சேதம் ஆகின்றன. மேலும் சாலைகளும் விரிசலாகி பழுதாகின்றன. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் ,அணையில் இருந்து இடதுபுறம் மொடக்குப்பட்டி சாலை வழியாக செல்லலாம். வலதுபுறம் ஜல்லிப்பட்டி வழியாகவும் உடுமலைக்கு செல்லலாம். தளி கிராம சாலைகள் வழியாக சென்றால் குழாய் உடைத்து சாலை பழுது ஏற்படுகிறது.எனவே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






