என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • கலசம் எடுத்துச் செல்லுதல் தொடர்பாக நடந்தது
    • தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் கிராமத்தில் நாளை (வியாழன்) ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு ஸ்ரீ பன்னீர் முருகன் கோவிலுக்கு அபிஷேக கலசம் எடுத்துச் செல்லுதல் தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    இது குறித்து நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போலீஸ் பாதுகாப்பு டன் திருவிழாவினை நடத்த இரு தரப்பினரிடம் அறிவுறுத்தி எழுத்துமூலம் ஒப்புதல் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், தலைமை யிடத்து துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.3.50 கோடியில் அமைக்கப்படுகிறது
    • அதிகாரிகளுடன் நகரமன்ற தலைவர் ஆய்வு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நகரின் பிரதான சாலைகளை இணைக்கும் பகுதியான ஜண்டாமேடு பகுதியில் உள்ள பாலம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டு வருகிறது.

    இந்தப் பாலத்தின் வழியாகதினமும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாண விகள், பொதுமக்கள், விவசாயிகள் சென்று வருகின்றனர்.

    எனவே அந்த பகுதியில் புதிய பாலம் அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி நகர மன்ற தலைவர் உமாசிவாஜி கணேசன், நகர தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் ஆகியோர் முயற்சியால் இக்பால் ரோடு- ஜண்டாமேடு பகு தியை இணைக்கும் பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு புதிதாக சி.ஜி.எப் நிதியின் கீழ் ரூ.3.50 கோடி செலவில் புதிய பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதற்கான ஆயத்த பணிகளை நகராட்சி அதிகாரிகளுடன் நகரமன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன், நகர தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாலம் விரைவில் கட்டப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.

    • பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆம்பூர்:

    ஆம்பூர் நேதாஜிரோடு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரபல துணிக்கடை அமைந்துள்ளது. இந்த துணிக்கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கடையில் இருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து

    விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தனியார் துணி கடைக்கு வேலைக் சென்றார்
    • போலீஸ் நிலையத்தில் புகார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்த (17 வயது) இளம் பெண்.

    இவர் கடந்த 29-ந் தேதி ஆம்பூர் உள்ள தனியார் துணி கடைக்கு வேலைக் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வரவில்லை. இதுகுறித்து இளம்பெண் பெற்றோர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேய்ந்து கொண்டிருந்த போது தடுமாறி விழுந்தது
    • தீயணைப்பு துறையினருக்கு தகவல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் இர்பான். நேற்று வீட்டின் அருகே 30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்று பகுதியில் இவரது பசுமாடு மேய்ந்து கொண்டிருந்த போது தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தது.

    உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித் துள்ளனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் சென்று கிணற்றில் இருந்து மாட்டை உயிருடன் மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • பாதாம், பிஸ்தாவை திருடி சாப்பிட்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன் மகன் ராகுல் (வயது 27). இவர் ஓசூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேனகா (25).

    மேனகா நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது மாமனார் பரந்தாமன் மற்றும் மாமியார் செல்வராணி ஆகியோரும் வீட்டை பூட்டி விட்டு மருமகளுடன் சென்றனர்.

    ஊருக்கு சென்ற பரந்தாமன் மற்றும் செல்வராணி வீட்டுக்கு வந்தனர். வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.

    பீரோ உடைத்து அதன் வைத்து இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 4 கிராம் வெள்ளி பொருட்களை மரம் நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் கொள்ளையர்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து சோபாவில் அமர்ந்து ஆர அமர சாப்பிட்டுவிட்டு, தோலை வீடு முழுவதும் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

    இது குறித்து போரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார்.

    பின்னர் இரவு வீட்டுக்கு வந்தபோது மாடியின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த 2 லேப்டாப்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப் பிரண்டு சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் அதேப்பகுதியை சேர்ந்த டேவிட் (25) என்பவர் பொருட்களை திருடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • 3 நாட்கள் நடந்தது
    • பெண் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையம் மற்றும் நபார்டு வங்கி சார்பில் பெண் விவசாயிகளுக்கு திருப்பத்தூரில் நவீன முறையில் கறவை மாடு வளர்ப்பு குறித்து சிறப்பு பயிற்சி முகாம் கடந்த 3 நாட்கள் நடந்தது.

    பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரவீன்பாபு தலைமை தாங்கினார்.

    திருப்பத்தூர் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி எழிலரசி வரவேற்றார்.

    இதில் பயிற்சி பெற்ற பெண் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவலாபுரம் ஊராட்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள பொது மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தெருக் குழாய்களில் குடிநீர் சரிவர சப்ளை செய்வதில்லை.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆக்கிரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆம்பூரில் இருந்து பேர்ணாம்பட்டு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்த உமராபாத் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.

    உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    • போலீசார் விசாரணை
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய மூக்கனூர், லெனின் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 55). விவசாயி.

    இவருக்கும் இவரது சித்தப்பா ராமன் மற்றும் அவரது மகன் சிவக்குமார் (46) ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக சொத்து தகராறு பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தசாமி தனக்கு சொந்தமான நிலத்தில் மாட்டு சாணம் கொட்ட சென்றபோது அங்கிருந்த சிவக்குமார் இங்கு ஏன் வந்தாய் உன்னை ஒழித்து விடுவேன் என தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் இருந்த கல்லை தூக்கி கோவிந்தசாமியின் தலைமீது வீசியுள்ளார்.

    மேலும் அவரது மனைவி ஆஷா (35) கைகளால் தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்த கோவிந்தசாமியை அவரது குடும்பத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ஆஷா மீது வழக்கு பதிவு செய்து சிவகுமாரை நேற்று கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் ஆஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆவணங்கள் இல்லாமல் இயக்கிவந்தனர்
    • வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வரை செல்லும் நெடுஞ்சாலையில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட்ராகவன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், புதிய வாகனங்கள் பதிவு செய்யாமலும், வாகனங்களை புதுப்பிக்காமலும் விதிமுறைகளை மீறி இயக்கி வந்த 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 டிராக்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வாகனங்கள் அனைத்துக்கும் ரூ.80 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

    சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • முன்விரோதத்தால் விபரீதம்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    திருப்பத்தூர்:

    ஜவ்வாதுமலை புதூர்நாடு சேம்பரை கிராமம் பகுதியை சேர்ந்தவர் அனுமன் (வயது 50). இவரது மகன் பிரவீன் குமார் (19), சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மாவட்ட கவுன்சிலர் வைகுந்தராவ். இவரின் சகோதரர் பிரசாந்த் மற்றும் சாம்பசிவம் மகன் செஞ் சுபதி. இவர்களுக்கும், அனுமனுக்கும் இடையே முன்விரோ தம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக பிரசாந்த், செஞ்சுபதி ஆகியோர் பிரவீன் குமாரை கட்டையால் தாக்கி, நெஞ்சு பகுதியில் கடித்து காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த பிரவீன் குமார் புதூர்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலை யத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×