என் மலர்
நீங்கள் தேடியது "They were engaged in vehicle inspection"
- ஆவணங்கள் இல்லாமல் இயக்கிவந்தனர்
- வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வரை செல்லும் நெடுஞ்சாலையில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட்ராகவன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், புதிய வாகனங்கள் பதிவு செய்யாமலும், வாகனங்களை புதுப்பிக்காமலும் விதிமுறைகளை மீறி இயக்கி வந்த 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 டிராக்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வாகனங்கள் அனைத்துக்கும் ரூ.80 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






