என் மலர்
நீங்கள் தேடியது "Drinking water is not properly supplied"
- போலீசார் பேச்சுவார்த்தை
- போக்குவரத்து பாதிப்பு
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவலாபுரம் ஊராட்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பொது மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தெருக் குழாய்களில் குடிநீர் சரிவர சப்ளை செய்வதில்லை.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆக்கிரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆம்பூரில் இருந்து பேர்ணாம்பட்டு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்த உமராபாத் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.
உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.






