என் மலர்
உள்ளூர் செய்திகள்

சொத்து தகராறில் முன்னாள் ராணுவ வீரர் கைது
- போலீசார் விசாரணை
- ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய மூக்கனூர், லெனின் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 55). விவசாயி.
இவருக்கும் இவரது சித்தப்பா ராமன் மற்றும் அவரது மகன் சிவக்குமார் (46) ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக சொத்து தகராறு பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தசாமி தனக்கு சொந்தமான நிலத்தில் மாட்டு சாணம் கொட்ட சென்றபோது அங்கிருந்த சிவக்குமார் இங்கு ஏன் வந்தாய் உன்னை ஒழித்து விடுவேன் என தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் இருந்த கல்லை தூக்கி கோவிந்தசாமியின் தலைமீது வீசியுள்ளார்.
மேலும் அவரது மனைவி ஆஷா (35) கைகளால் தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்த கோவிந்தசாமியை அவரது குடும்பத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ஆஷா மீது வழக்கு பதிவு செய்து சிவகுமாரை நேற்று கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் ஆஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






