என் மலர்
திருச்சிராப்பள்ளி
- சுற்றுச்சூழலை காக்க வீட்டுக்கு வீடு ஒரு செடி
- வீட்டுக்கு வீடு ஒரு செடி வளர்ப்போம் நிகழ்ச்சி
திருச்சி.
திருச்சி ராயல் லயன்ஸ் சங்கம்,திருச்சி புனித சிலுவை கல்லூரி நாட்டு நலப்பணிகள் திட்டம் இணைந்து சுற்றுச்சூழலை காக்க ஒவ்வொருவரும் வீட்டுக்கு வீடு ஒரு செடியாவது வளர்ப்போம் என்ற நிகழ்ச்சி நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பொருளாதாரத்துறை உதவி பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான மெர்லின் கோகிலா தொடக்க உரையாற்றினார். கல்லூரி செயலர் அருட் சகோதரி ஆனி சேவியர் தலைமை உரையாற்றினார். திருச்சி ராயல் லயன்ஸ் கிளப் சாசனத் தலைவர் முகமது சபி சுற்றுச்சூழலை காக்க ஒவ்வொருவரும் வீட்டுக்கு வீடு ஒரு செடியாவது வளர்ப்போம் தலைப்பில் பேசுகையில், இன்றைய சூழலில் நமது சுற்றுப்புறச் சூழல் அதிகமாக மாசுபட்டு இருக்கிறது. அதன் காரணமாக நாளுக்கு நாள் காற்றின் தூய்மை மோசமடைந்து வருகிறது. வீடுகளில் செடிகளை வளா்த்து வந்தால், தரமான, சுத்தமான மற்றும் அதிகமான ஆக்ஸிஜனைப் பெறலாம் என்றார். வீட்டுக்கு ஒரு செடி வளர்ப்போம் என உறுதியேற்ற நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளுக்கு செடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், திருச்சி ராயல் லயன்ஸ் சங்க தலைமை பண்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன், பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன மதிப்புறு பேராசிரியர் சூர்யகுமார் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி பயன்பாட்டியல், உயிர் வேதியியல், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடப்பிரிவு இளங்கலை முதலாம் ஆண்டு நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் மனோன்மணி, டாலி ஆரோக்கிய மேரி, குழந்தை பிரியா, முனைவர் ரோஸி இடியா மற்றும் ஹேமலதா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- சவாலை சமாளிக்க தயாராகும் திருச்சி மாநகராட்சி
- ரூ.6 கோடி செலவில் உருவாகும் கான்கிரீட் குப்பை மறுசுழற்சி மையம்
திருச்சி,
திருச்சி மாநகராட்சி 163.25 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு நாள்தோறும் 470 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது.
சிறந்த மாநகராட்சி
வீடுகள், வியாபார தளங்கள், ஹோட்டல்களில் இருந்து உருவாகும் இந்த குப்பையானது வீதிக்கு வராமல், தூய்மை பணியா ளர்கள் உதவியுடன், வாக னங்களில் சேகரித்து, எடுத்துச் செல்லப்பட்டு அரியமங்கலம் குப்பை கிடங்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த பணி சீராக நடந்து வருவதன் காரணமாக தமிழக அரசால் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டது.
இந்திய அளவில் 6-வது இடத்தையும் எட்ட முடிந்தது. மாநகரில் சேரும் குப்பைகளை சிறப்பாக கையாண்டு, தூய்மையை, பேணி காக்கும், மாநகராட்சி க்கு, கட்டுமான பணியின் போது உருவாகும் கழிவுகள் மற்றும் இடிக்கப்பட்ட கட்டிடங்களால் உண்டாகும் கான்கிரீட் குப்பைகளை கையாள்வது பெரும் சவாலாக இருக்கிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக கடத்த 2020-ம் ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில் கான்கிரீட் குப்பைகளை கையாள்வதற்காக, புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அதன்படி அரியமங்கலம் குப்பை கிடங்கில் 2 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ரூ.6 கோடி செலவில் கான்கிரீட் குப்பை மறுசுழற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தின் மூலம் கான்கிரீட் குப்பைகள் அனைத்தும் மறுசுழற்சி முறையில், தரைத்தள ங்களில் பதிக்கப்படும் டைல்ஸ்களாகவும், நடைபாதையில் பதிக்கப்படும் சிமெண்ட் பிளாக் கற்களாகவும் மாற்றப்படும். இதற்காக மாநகரத்தின் 4 இடங்களில் கான்கிரீட் குப்பை சேகரிக்கும் மையம் அமைக்கப்பட்டு, அங்கி ருந்து அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கான்கிரீட் குப்பை மறுசுழற்சி செய்யும் மையத்திற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.
டைல்ஸ், சிமென்ட், பிளாக் கற்கள் தயாரிக்கிறார்கள்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்த காங்கிரீட் குப்பைகள் நீர்நிலைகளி லும், காலி பிளாட்டுகளிலும் திருட்டுத்தனமாக கொட்டப்படுகிறது. இது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த கான்கிரீட் குப்பை மறுசுழற்சி மையம் அமைந்தால், காங்கிரீட் குப்பைகளால் ஏற்படும் சிரமம் தவிர்க்கப்படும். மேலும் இதன் மூலம் செய்யப்படும் டைல்ஸ்கள் மற்றும் சிமெண்ட் கற்கள் மாநகராட்சி பணிக்கு பயன்படுத்தப்படுவதோடு, விற்பனையும் செய்யப்பட உள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். புதிதாக அமையவுள்ள கான்கிரீட் மறு சுழற்சி மையத்தில் நாளொன்றுக்கு 50 டன் காங்கிரீட் கழிவுகள் கையாள முடியும். ஒரு வருடத்திற்குள் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.
- துறையூர் பெருமாள் மலை கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறும்
- 17 ஆண்டுகள் கடந்தும் நடைபெறாமல் இருந்த துறையூர் பெருமாள் மலை கோவில் கும்பாபிஷேகம்
- கோவில் செயல் அலுவலர் தகவல்
திருச்சிக்கு அருகில் உள் ளது துறையூர். துறையூரில் இருந்து பெரம்பலூர் செல் லும் வழியில், 3 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது பெரு மாள் மலை. இங்கு அடிவா ரத்தில் இருந்து மலைக்கோ யிலுக்கு செல்ல, சுமார் 1564 படிகள் உள்ளன.
அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு வாகன த்திலும் செல்லலாம். அதற் காக 5 கி.மீ. தொலைவுக்கு தார்ச்சாலையும் உள்ளது.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பிரசன்ன வேங்க டாசலபதி திருக்காட்சி தருகிறார்.
11-ம் நூற்றாண்டு கோவில் ஆகும். கரிகாற் சோழனின் பேரனின் ஆட்சிக் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக விவரிக்கிறது ஸ்தல வரலாறு.
இங்கே உள்ள ஏழு கருங் கல் தூண்கள் விசேஷமா னவை. ஏழு தூண்களில் இரு ந்தும் ஏழு ஸ்வரங்களும் வெளிப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், பதினாறு திரு க்கரங்களுடன் இரணி யனை மடியில் கிடத்தியபடி வடக்கு முகம் கொண்டு ஸ்ரீநரசிம்மர் உக்கிரத்துடன் சேவை சாதி க்கும் சிற்பமும் கொள்ளை அழகு.
புரட்டாசி மாதத்தில், பெருமாள் மலை பிரசன்ன வேங்கடாசலபதியை தரிசி த்தால், மகா புண்ணியம் என்றும் இந்த மாதத்தில் என்றேனும் ஒருநாளில், பெருமாளை கண் குளிர தரிசித்து மனதார வேண்டி க்கொண்டால், தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். வைஷ்ணவக் கோயில்களில் இல்லாத தனிச்சிறப்பு இந்தக் கோயிலுக்கு உண்டு.
அழகும் கருணையும் ததும்ப அற்புதக் கோலத்தில் காட்சி தரும் இந்த பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி நடைபெற்றது. 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை கும்பாபிஷேகம் நடை பெற வில்லை. இது பக்தர்களுக்கு கவலை அளிப்பதாக இருந்தது.
இது குறித்து பக்தர் ஒரு வர் கூறும் போது,
வழக்கமாக கோவில்க ளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆனால், இக்கோவிலில் 17 ஆண்டுக ளுக்கு மேலாகியும் கும்பாபி ஷேகம் நடத்தப்பட வில்லை. திருப்பணிகள் நடைபெறா ததால் கோவில் வெளிப்பி ரகார தெற்கு பகுதி சுற்றுச் சுவரில் செடிகள் முளைத்து வெடிப்புகள் ஏற்பட்டு ள்ளது. பக்தர்களின் கோரி க்கைகளை நிறைவேற்றி தரும் இந்த ேகாவிலின் கும்பா பிஷேகத்தை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் வேணு கோபாலிடம் கேட்ட போது, தற்போது கோவிலில் புரட்டாசி விழா நடைபெற்று வருகிறது. விழா முடிவ டைந்த உடன் கும்பாபி ஷேகத்திற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கி விடும் என்றார்.
- ஸ்ரீரங்கம் பூ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
- அ.தி.மு.க. நிர்வாகி அதிரடி கைது
திருச்சி,
திருச்சி திருவானைக்காவல் சிங்கபெருமாள் கோவில்தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 37). இவர் ஸ்ரீரங்கம் மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை மாணிக்கம்பிள்ளை தெரு அருகே கதிர்வேல் சென்றபோது, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவரை சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு கையில் வெட்டு விழுந்து காயமடைந்தார். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த கதிர்வேலை அப்பகுதி மக்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தற்போது ரங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் திருவானைக்காவல் பகுதி அ.தி.மு.க. துணை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.சுரேஷ், செல்வகுமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். கொலை முயற்சி வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை
- ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி,
திருச்சி சங்கிலியாண்ட புரம் அன்பு நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சங்கீதா (வயது 36). தனியார் நிறுவன மேலாளர். காதல் திருமணம் செய்த இவர்களு க்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சங்கருக்கு ரியல் எஸ்டேட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் மன அழுத்தத்தில் இருந்த சங்கர், வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றர். ஓய்வு பெற்ற பெல் ஊழியர் தீயில் கருகி சாவு ஸ்ரீரங்கம் சித்திரை வீதி இ.பி.எஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிரு ஷ்ணன் (வயது 63). பெல் ஓய்வு பெற்ற ஊழியர். இவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் கோபால கிருஷ்ணன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே சமையல் அறையில் இருந்த சிலிண்டரில் கியாஸ் கசிந்து ள்ளது. இது தெரியாமல் கோபா லகிருஷ்ணன் மின்சார சுவி ட்சை போட்டுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.இதில் உடல் கருகிய அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரர் ரங்கராஜன் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
- உதவி ஆய்வாளரை திட்டிய பெண் காவலர்
- பெண் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
- உதவி ஆய்வாளரை திட்டிய பெண் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணிகண்டம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு பொறுப்பில் உள்ள உதவி ஆய்வாளர் பணி ஒதுக்கீடு செய்வது வழக்கம். அதன்படி இந்த காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் கலா (வயது 45) என்பவருக்கு இரவு ரோந்து பணியை ஒதுக்கீடு செய்து உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசர் உத்தரவிட்டார்.
ஆனால் கலா தான் இரவு ரோந்து பணிக்கு செல்ல முடியாது என கூறி உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசரை கடும் சொற்களால் திட்டியுள்ளார். இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் பெண் காவலர் கலாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
- ஒரு வயது குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய பேட்டரி
- உணவுக்குழாயில் சிக்கிய பேட்டரியை அகற்றிய மருத்துவர்கள்
திருச்சி,
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது ஒரு வயது குழந்தை இனியா விளையாட்டு பொம்மைகளுக்கு பொருத்தும் பேட்டரியை கடந்த 21-ந்தேதி விழுங்கியதையடுத்து நல்லதம்பியின் உறவினர்கள குழந்தையை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிேசாதித்த மருத்துவர்கள் பேட்டரியை படிப்படியாக இறங்கி உணவுக்குழர்க்கு செல்வதை அறிந்து குழந்தையை உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மறுநாள் 22-ந்தேதி அரசு மருத்துவமனை மயக்க மருந்து நிபுணர்கள் உதவியுடன் மருத்துவர்கள் ஆர்.ஆர்.கண்ணன், சங்கர், ராஜசேகரன், கார்த்திகேயன், சுதாகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் எண்டோஸ்கோபி மூலம் நீண்ட நேரம் போராடி உவ்வித உபாதைகளும் ஏற்படாத வகையில் உணவுக்குழாயில் இருந்த பேட்டரியை அகற்றினர். இந்த பேட்டரியை உடனடியாக அகற்றி இருக்காவிட்டால் ஒரிரு நாட்களில் உணவுக்குழாயில் ஒட்டை ஏற்படுத்தி குழந்தையின் வாழ்வை கேள்விக்குறியாக்கியிரு க்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை இனியா நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தற்போ அந்த குழந்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளது.
திருச்சி மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது முதல் முறை என்பதால் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவ கல்லரி முதல்வர் நேரு பாராட்டு தெரிவித்துள்ளார்.
- வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் நகை-பணத்தை கொள்ளையடித்த 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, அபராத தொகையை வசூலித்து பாதிக்கப்பட்ட சகாயமேரிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்சி,
திருச்சி ஏர்போர்ட் வளன்நகர் பகுதியை சேர்ந்தவர் சகாயமேரி (வயது 47). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவரை பிரிந்து குழந்தைகளுடன் சகாயமேரி தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 14-6-2016 அன்று மாலை 3.45 மணிக்கு 4 பேர்் அவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர்.பின்னர் சகாயமேரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, நகை, பணம், செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி தென்னூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்த சேக் அப்துல்காதர் (34), நேருநகரை சேர்ந்த சபீர் முகமது (43), குத்பிஷாநகரை சேர்ந்த சாதிக்பாட்சா (43), சங்கிலியாண்டபுரம் உசேன் தெருவை சேர்ந்த முனீர்அகமது (37) ஆகியோரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி மீனாசந்திரா முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் எஸ்.ஹேமந்த் ஆஜரானார். இந்தவழக்கில் சாட்சி விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சேக் அப்துல்காதர், சபீர் முகமது, சாதிக்பாட்சா, முனீர்அகமது ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை வசூலித்து பாதிக்கப்பட்ட சகாயமேரிக்கு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
- 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் டைடல் பார்க் வடிவமைப்பு தயாரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
- 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் டைடல் பார்க் வடிவமைப்பு தயாரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
திருச்சி,
தமிழகத்தின் மையப்பகு தியான திருச்சியில் எளிதாக தொடர்பு மற்றும் இணைப்பு போக்குவரத்து வசதிகள் குறைந்த செலவு ஆகியவறறின் அடிப்படையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை வளர்ந்துள்ளன. திருச்சியை பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய செய்யும் வகையில் ரூ.600 ேகாடி மதிப்பீட்டில், எல்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென் பொருள் நிறுவனங்கள் மையமான டைடல் பார்க் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்ப ட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி யில் டைடல் ப ார்க் அமைக்க வாய்ப்புள்ள இடங்களை சென்னை டைடல் பார்க் நிறுவன அதிகாரிகள் குழுவி னர் பார்வையிட்டனர். அதன்பிறகு திருச்சி- மதுரை சாலையில் 14 ஏக்கர் நிலம் கேட்டு டைடல் பார்க் சார்பில், மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில் தற்போது பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பஞ்சப்பூரிலேயே மாநகராட்சி க்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை வழங்க மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க ப்பட்டது. இதைத் தொடர்ந்து, இப்ப ணியின் அடுத்த கட்டமாக 10 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்ட வடிவமை ப்புக்கான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டைடல் பார்க் நிறுவனம் தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கை யில், திருச்சியில் பஞ்சப்பூர் பகுதியில் 10 ஆயிரம் இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் முதற்க ட்டமாக 5.5 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொட ங்கி நடந்து வருகிறது.
- துறையூரில் தி.மு.க.பிரமுகரிடம் பட்டப்பகலில் ரூ.2 லட்சம் அபேஸ் செய்யப்பட்டு உள்ளது
- வங்கியிலிருந்து எடுத்து வந்த போது மர்ம நபர்கள் கைவரிசை
துறையூர்,
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சிக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிறுநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது45). இவர் உப்பிலி யபுரம் தெற்கு தி.மு.க. ஒன்றிய துணைச் செயலா ளராக இருந்து வருகிறார். துறையூர் - திருச்சி சாலையில் உள்ள தனியார் வங்கியில் தனது கணக்கி லிருந்து ரூ. 2 லட்சம் பண த்தை எடுத்து, இரு சக்கர வாகனத்தின் பின்பகுதியில் வைத்துக்கொண்டு சென்று ள்ளார். நீதிமன்றம் எதிரே உள்ள கடையின் முன்பு இரு சக் கர வாகனத்தை நிறுத்தி விட்டு, நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்து ள்ளார். அப்பொழுது அடை யாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தின் பின்பகுதியை கள்ள சாவி மூலம் திறந்து, பணத்தை எடுத்துள்ளார். இதனைப் பார்த்த சுப்பிர மணியன் திருடன், திருடன் என சத்தம் போட்டு உள் ளார். இதனை அறிந்த மர்ம நபர் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த தன்னு டைய கூட்டாளியின் இருச க்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டார். இச்சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், அப்பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூரில் வங்கியில் இருந்து எடுத்துவரப்பட்ட பணத்தை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது.
- திருச்சி ராம்ஜிநகரில் இளம்பெண் மாயம்
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராம்ஜிநகர்
திருச்சி அருகே உள்ள ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்தவர் சாந்தி (வயது 50). இவரது கணவர் ராமச்சந்திரன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் தீபிகா (26) இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தீபிகா கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற தீபிகா வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது தாய் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் அடைந்து அக்கம் பக்கத்தில் தேடிய போது அவர் எங்கும் காணவில்லை. தனது மகள் காணாமல் போனது குறித்து சாந்தி ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவெறும்பூர்.
உலக சுற்றுலா தினமான இன்று, திருச்சி சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களை கல்லூரி மாணவர்கள் கொண்டு தூய்மை பணியானது நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களை கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றுலா தலங்களை தூய்மைப்படுத்துவதற்கு தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலமாக இன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா தலங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் நந்தவனம் மற்றும் குளம் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையீடு செய்ய முடியவில்லை. எல்லாவற்றிற்கும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. மேலும் இங்கு உள்ள நந்தவனம் மற்றும் குளத்தினை பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை டெங்கு பரவல் இல்லை இதுவரை 37 நபர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு டெங்கு பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் 73 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் தாலுகா ஆபீசில் உள்ள இ சேவை மூலமாக தங்களது தகுதியை தெரிந்து கொள்ளலாம். இதில் திருப்தி இல்லை என்றால் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். அதன்படி பரிசீலனை செய்து விசாரணைக்கு பிறகு தகுதி வாய்ந்த நபர்களுக்கு மகளிர் தொகை வழங்கப்படும் என்றார்.






