உதவி ஆய்வாளரை திட்டியபெண் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

உதவி ஆய்வாளரை திட்டிய பெண் காவலர்பெண் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் உதவி ஆய்வாளரை திட்டிய பெண் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
உதவி ஆய்வாளரை திட்டியபெண் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணிகண்டம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு பொறுப்பில் உள்ள உதவி ஆய்வாளர் பணி ஒதுக்கீடு செய்வது வழக்கம். அதன்படி இந்த காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் கலா (வயது 45) என்பவருக்கு இரவு ரோந்து பணியை ஒதுக்கீடு செய்து உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசர் உத்தரவிட்டார்.

ஆனால் கலா தான் இரவு ரோந்து பணிக்கு செல்ல முடியாது என கூறி உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசரை கடும் சொற்களால் திட்டியுள்ளார். இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் பெண் காவலர் கலாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com