என் மலர்tooltip icon

    தேனி

    • வெவ்வேறு சமூகம் என்பதால் பிரச்சினை ஏற்படும் என சில நாட்கள் கழித்து சொந்த ஊருக்கு அழைத்துச்செல்வ தாக கூறியுள்ளார்
    • இந்தநிலையில் ஜெய ப்பிரகாசிற்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் பெங்களூரு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதா னப்பட்டி அருகே வேல்நகரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(42). இவருக்கும் பெங்களூரு சீனிவாச காலனியை சேர்ந்த மஞ்சுளா(35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூரில் திருமணம் நடைபெற்றது.

    ஜெயப்பிரகாஷ் தங்கள் குடும்பத்தில் காதல் திருமணத்தை ஏற்று க்கொள்ள மாட்டார்கள். மேலும் வெவ்வேறு சமூகம் என்பதால் பிரச்சினை ஏற்படும். எனவே சில நாட்கள் கழித்து சொந்த ஊருக்கு அழைத்துச்செல்வ தாக கூறியுள்ளார். தான் சொந்த ஊரில் வீடு கட்டி வருவதாகவும், அதற்கு கடன் வாங்கியதாகவும் கூறியுள்ளார். எனவே மஞ்சுளாவிடம் இருந்து ரூ.18 லட்சம் பல தவணைகளில் பெற்றுள்ளார். மேலும் அவரிடம் 12 பவுன் நகையையும் நைசாக பேசி பெற்றுள்ளார்.

    இந்தநிலையில் ஜெய ப்பிரகாசிற்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் பெங்களூரு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் ஜெயப்பிரகாஷ் சொந்தஊருக்கு திரும்பிவிட்டார். அவரை தேடி மஞ்சுளா வந்தபோது ஜெயப்பிரகாஷ், அவரது தம்பி மதுகுமார், தந்தை பழனிச்சாமி, உறவினர்கள் மலர், திருநாவுக்கரசு, முருகேசன் ஆகியோர் அவ தூறாக பேசி மஞ்சுளாவை தாக்கி வெளியேற்றினர்.

    இதுகுறித்து ஜெய மங்கலம் போலீசில் மஞ்சுளா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பி.எட். மாணவிகளுக்கு பிரைட் பிகினிங்க்ஸ் என்ற தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

    தேனி:

    தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்மு றை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் பி.எட். மாணவிகளுக்கு பிரைட் பிகினிங்க்ஸ் என்ற தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பியூலாராஜினி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினரை உதவி பேராசி ரியர் யோகாஅஞ்சுஸ்ரீ அறிமுகப்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெரியகுளம் டி.எஸ்.பி. கீதாதிருவாசகம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்படுவது குறித்து பேசினார். கவுரவ விருந்தினராக தமிழ்நாடு என்.ஜி.ஓ. பெடரேசன் பொதுச் செயலாளர் ராஜன் கலந்து கொண்டு பேசினார். கல்லூரி செயலாளர் குணசேகரன் வாழ்த்தி பேசினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உதவி பேராசிரியர் ஜீவிதா நன்றி கூறினார்.

    • தேவதானப்பட்டி அருகே தேவாங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவ- மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.
    • மாணவர்களை வரவேற்கும் விதமாக 2ம் & 3ம் ஆண்டு மாணவ- மாணவி்கள் நடனமாடினர் பிறகு கல்லூரி முதல்வர் கல்லூரியின் சிறப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தார்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே தேவாங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவ- மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தலைவர் உமையாள் முருகேசன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி்விழாவினை தொடங்கி வைத்தார்.

    செயலாளர் காமராஜர் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாணவர்களை வரவேற்கும் விதமாக 2ம் & 3ம் ஆண்டு மாணவ- மாணவி்கள் நடனமாடினர். கல்லூரி முதல்வர் வேல்விழி கல்லூரியின் சிறப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தார்.

    துணை முதல்வர் ராஜீவ் வரவேற்புரை வழங்கினார். துறைத் தலைவர்கள் ஸ்டெல்லா மேரி, சாகுல் ஹமீத், கதிரேசன், ரதிமாலா ஆகியோர் அவர்தம் துறைசார்ந்த விபரங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தனர். கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெற்று சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவி்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர். முதலாம் ஆண்டு துறைத்தலைவர் இலக்கியாதேவி நன்றியுரை வழங்கினார். மாணவர்கள் மற்றும்பெற்றோர்களும் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர்போஸ் விழாவினை தொகுத்து வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    • போடி புதூர் வடிவேல் நகரை சேர்ந்த நர்சிங் மாணவி மற்றும் ஒரு பெண் மாயமானார்கள்.
    • புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி புதூர் வடிவேல் நகரை சேர்ந்த பழனிவேல் மகள் மாரீஸ்வரி(17). இவர் சத்தியமங்கலத்தில் நர்சிங் படித்து வந்தார். சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லை எனக்கூறி சொந்தஊருக்கு வந்தார். வீட்டில் இருந்த மாரீஸ்வரி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருநாக்கமுத்தன்பட்டி இந்திராகாலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லபாண்டி மனைவி மதுபாலா(24). இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. செல்லபாண்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அப்போதுமுதல் குழந்தை அவரது தாத்தா வீட்டில் வசித்து வந்தது.

    சம்வத்தன்று மதுபாலா ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசிபோட்டு வருவதாக கூறிச்சென்று மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை மச்சக்காளை கொடுத்த புகாரின்பேரில் கூடலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளி நுழைவாயிலில் காய்கறி மார்க்கெட் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள இறைச்சி கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு வருகின்றன.
    • அவ்வப்போது மழை பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகரின் மையப்பகுதியில் அரசு உதவிபெறும் ஆரம்பபள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி காய்கறி மார்க்கெட் அருகில் செயல்படுகிறது. 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி நுழைவாயிலில் காய்கறி மார்க்கெட் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள இறைச்சி கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு வருகின்றன.

    இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.

    இதனால் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. பள்ளியின் அருகிலேயே 200 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகமும் குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் , மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாமரைக்குளம் பகுதியில் ஒருவீட்டில் பணம் மற்றும் பழமையான முருகன், வள்ளி-தெய்வானை சிலைகளை திருடிச்சென்றனர்.
    • கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகை மற்றும் தடயங்களை கொண்டு ஆய்வு செய்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டில் புகுந்த திருட்டுகும்பல் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதனைதொடர்ந்து தாமரைக்குளம் பகுதியில் பழனிவேல் என்பவரது வீட்டில் பணம் மற்றும் பழமையான முருகன், வள்ளி-தெய்வானை சிலைகளை திருடிச்சென்றனர்.

    இதுகுறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தனிப்படை அமைத்து கைவரிசை காட்டிய கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகை மற்றும் தடயங்களை கொண்டு ஆய்வு செய்தனர். மேலும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய 5 நபர்களின் விபரங்களை சேகரித்த போது அவர்கள் வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து 2 சிறுவர்கள் மற்றும் மதுசூதனன்(22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் மதுசூதனன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 சிறுவர்களையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். அவர்களிடமிருந்து சிலைகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட சிலைகள் கோவில்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதா என உண்மை தன்னை அறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னரே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • அரசு உதவிபெறும் கல்வி நிறுவனமான இந்த பள்ளி கடந்த 1981-ம் ஆண்டு முதல் தேவேந்திரகுல உறவின்முறை நிர்வாகத்தில் இருந்து வருகிறது.
    • இந்த பள்ளிக்கு பட்டா வழங்கக்கோரி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் ஆலமரம் அருகே கடந்த 1955-ம் ஆண்டு திருவள்ளுவர் தொடக்கப்பள்ளி புறம்போக்கு நிலத்தில் தொடங்கப்பட்டது. அரசு உதவிபெறும் கல்வி நிறுவனமான இந்த பள்ளி கடந்த 1981-ம் ஆண்டு முதல் தேவேந்திரகுல உறவின்முறை நிர்வாகத்தில் இருந்து வருகிறது.

    இந்த பள்ளிக்கு பட்டா வழங்கக்கோரி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ திருவள்ளுவர் தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் கோப்புகளை விரிவாக பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்த ஆய்வின்போது சின்னமனூர் வி.ஏ.ஓ மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் உடனிருந்தனர்.

    • பொதுமக்கள் கூறுகையில், கன்னியம்பட்டி மட்டுமல்லாது சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
    • இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடனேயே சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே கன்னியம்பட்டி நடுத்தெரு பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதில் ஒரு நாய்க்கு வெறிபிடித்து சாலையில் ஆவேசமாக ஓடியது.

    அந்த பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ரியாசினி மற்றும் வெள்ளத்தாய் என்ற 70 வயது மூதாட்டி உள்பட 4 பேரை கடித்து குதறியது. இதனைதொடர்ந்து அவர்கள் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ரியாசினிக்கு காயம் பெரியஅளவில் இருந்ததால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கன்னியம்பட்டி மட்டுமல்லாது சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடனேயே சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் ஆட்டோவில் பயணிக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது. தெருநாய்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

    எனவே இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    • நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வழிகாட்டும் ஒரு அருமையான சிகிச்சை முறை. ஒவ்வொரு மருத்துவ முறைகளிலும் உள்ள தனித்துவம், அந்தந்த முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும்.
    • இந்த ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையில், இந்திய மருத்துவமுறைகளில் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய முறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படும்.

    தேனி:

    தமிழக முதல்-அமைச்சர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

    ஆயுர்வேத மருத்துவம் மிக பழமையானது. நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வழிகாட்டும் ஒரு அருமையான சிகிச்சை முறை. ஒவ்வொரு மருத்துவ முறைகளிலும் உள்ள தனித்துவம், அந்தந்த முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். ஆயுர்வேத முறையில் அதிக அளவில் மூலிகைச் செடிகளை வைத்து மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கென மருத்துவமனை வளாகத்தில் மூலிகைத் தோட்டம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையில், இந்திய மருத்துவமுறைகளில் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய முறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படும். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஆயுஷ் மருத்துவமனை ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் மூன்று தளங்களுடன், வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர் பிரிவுகளுடன் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 50 படுக்கைகளுடன் 35,198 சதுர அடி பரப்பில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

    இம்மருத்துவமனை கட்டிடத்தில் சித்த மருத்துவம் மற்றும் மருத்துவப் பிரிவுகளின் வெளிநோயாளர் பிரிவு, மூலம் பவுத்திரம், கட்டிகள் போன்றவற்றிற்கு செய்யப்படும் சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், பக்கவாதம் மறுவாழ்வு மையம், தெரபி மற்றும் தொக்கணம் அறை, மருந்தகம், அவசர சிகிச்சை அறை, ஆய்வறை, வர்ம சிகிச்சை, யோகா அக்குபஞ்சர் சிகிச்சை, மண் குளியல், சூரியக்குளியல், யோகா பயிற்சிக் கூடம், பெண்கள் இயற்கை மருத்துவ பிரிவு, கிரியா கூடம், உணவு விடுதி, கூட்டரங்கம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ பிரிவு போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திருநாவுக்கரசு, இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்பாபு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெறித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.
    • தற்போது பெய்து வரும் மழையால் நீண்ட நாட்களுக்கு பிறகு வறண்டு கிடந்த சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்தின்றி காணப்பட்டது.

    மேலும் வராகநதி, கொட்டக்குடி, மூலவைக யைாறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு காணப்பட்டது. கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெறித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. வருசநாடு அருேக உள்ள சின்ன சுருளி அருவிக்கு மேகமலையில் மழை பெய்யும் போது தண்ணீர் வரத்து இருக்கும். தற்போது பெய்து வரும் மழையால் நீண்ட நாட்களுக்கு பிறகு வறண்டு கிடந்த சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு ள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மூலவைகையாற்றுக்கு நீர்வரத்து இல்லை. மழை தொடரும் பட்சத்தில் தண்ணீர் வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.10 அடியாக உள்ளது. 199 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 47.41 அடியாக உள்ளது. 30 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்து திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.20 அடியாக உள்ளது. ஒரு கன அடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 3.6, கூடலூர் 1.2, சண்முகாநதி அணை 2, போடி 1.8, வைகை அணை 8.2, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 17, வீரபாண்டி 13.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • முதலாம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிள் மாயமானார்கள்.
    • போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள கோட்டைப்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி மகள் கவுசல்யா(17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல தயார்நிலையில் இருந்தார். சம்பவத்தன்று குடும்பத்தினர் அனைவரும் விஷேசத்திற்கு சென்றனர். மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது மகள் கவுசல்யாவை காண வில்லை. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    போடி அருகில் உள்ள ஜே.கே.பட்டி அய்யனார் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி(21). இவர் போடியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று டி.சி வாங்கி வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது தாய் அமிர்தவள்ளி போடி டவுன் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை ேதடி வருகின்றனர்.

    • கடந்த பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த போது அடக்க முயன்ற வர்களுடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    • தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சுரேஷ்கு மார் மகன் சந்துரு (19). இவரது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். கடந்த பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த போது அடக்க முயன்ற சந்துரு, சந்தோஷ், கண்ணன், தினேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு வந்த மேற்படி கும்பல் ஜல்லிக்கட்டு மாட்டை இப்போது அவிழ்த்து விடு. அடக்கி காட்டுகிறோம் என தகராறு செய்தனர். இதனை தட்டிக்கேட்ட சந்துரு மற்றும் அவரது அண்ணன் லிவின்கு மாரை அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த 2 பேரும் பெரிய குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர்.

    இதுகுறித்து தேவதா னப்பட்டி போலீஸ் நிலைய த்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×