search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை சின்ன சுருளி அருவிக்கு மீண்டும் நீர்வரத்து
    X

    வறண்டு கிடந்த சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை சின்ன சுருளி அருவிக்கு மீண்டும் நீர்வரத்து

    • கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெறித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.
    • தற்போது பெய்து வரும் மழையால் நீண்ட நாட்களுக்கு பிறகு வறண்டு கிடந்த சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்தின்றி காணப்பட்டது.

    மேலும் வராகநதி, கொட்டக்குடி, மூலவைக யைாறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு காணப்பட்டது. கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெறித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. வருசநாடு அருேக உள்ள சின்ன சுருளி அருவிக்கு மேகமலையில் மழை பெய்யும் போது தண்ணீர் வரத்து இருக்கும். தற்போது பெய்து வரும் மழையால் நீண்ட நாட்களுக்கு பிறகு வறண்டு கிடந்த சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு ள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மூலவைகையாற்றுக்கு நீர்வரத்து இல்லை. மழை தொடரும் பட்சத்தில் தண்ணீர் வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.10 அடியாக உள்ளது. 199 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 47.41 அடியாக உள்ளது. 30 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்து திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.20 அடியாக உள்ளது. ஒரு கன அடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 3.6, கூடலூர் 1.2, சண்முகாநதி அணை 2, போடி 1.8, வைகை அணை 8.2, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 17, வீரபாண்டி 13.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×