என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
தேவதானப்பட்டியில் மனைவியிடம் ரூ.18 லட்சம், நகை மோசடி செய்த கணவன்
- வெவ்வேறு சமூகம் என்பதால் பிரச்சினை ஏற்படும் என சில நாட்கள் கழித்து சொந்த ஊருக்கு அழைத்துச்செல்வ தாக கூறியுள்ளார்
- இந்தநிலையில் ஜெய ப்பிரகாசிற்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் பெங்களூரு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதா னப்பட்டி அருகே வேல்நகரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(42). இவருக்கும் பெங்களூரு சீனிவாச காலனியை சேர்ந்த மஞ்சுளா(35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூரில் திருமணம் நடைபெற்றது.
ஜெயப்பிரகாஷ் தங்கள் குடும்பத்தில் காதல் திருமணத்தை ஏற்று க்கொள்ள மாட்டார்கள். மேலும் வெவ்வேறு சமூகம் என்பதால் பிரச்சினை ஏற்படும். எனவே சில நாட்கள் கழித்து சொந்த ஊருக்கு அழைத்துச்செல்வ தாக கூறியுள்ளார். தான் சொந்த ஊரில் வீடு கட்டி வருவதாகவும், அதற்கு கடன் வாங்கியதாகவும் கூறியுள்ளார். எனவே மஞ்சுளாவிடம் இருந்து ரூ.18 லட்சம் பல தவணைகளில் பெற்றுள்ளார். மேலும் அவரிடம் 12 பவுன் நகையையும் நைசாக பேசி பெற்றுள்ளார்.
இந்தநிலையில் ஜெய ப்பிரகாசிற்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் பெங்களூரு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் ஜெயப்பிரகாஷ் சொந்தஊருக்கு திரும்பிவிட்டார். அவரை தேடி மஞ்சுளா வந்தபோது ஜெயப்பிரகாஷ், அவரது தம்பி மதுகுமார், தந்தை பழனிச்சாமி, உறவினர்கள் மலர், திருநாவுக்கரசு, முருகேசன் ஆகியோர் அவ தூறாக பேசி மஞ்சுளாவை தாக்கி வெளியேற்றினர்.
இதுகுறித்து ஜெய மங்கலம் போலீசில் மஞ்சுளா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






