என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insist on garbage disposal"

    • பள்ளி நுழைவாயிலில் காய்கறி மார்க்கெட் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள இறைச்சி கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு வருகின்றன.
    • அவ்வப்போது மழை பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகரின் மையப்பகுதியில் அரசு உதவிபெறும் ஆரம்பபள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி காய்கறி மார்க்கெட் அருகில் செயல்படுகிறது. 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி நுழைவாயிலில் காய்கறி மார்க்கெட் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள இறைச்சி கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு வருகின்றன.

    இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.

    இதனால் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. பள்ளியின் அருகிலேயே 200 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகமும் குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் , மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×