என் மலர்
தேனி
- வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் தடைவிதித்தனர்.
- 9 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை யினர் தடைவிதித்தனர்.
தற்போது மழை குறைந்து சீரான நீர்வரத்து உள்ளது. இதனால் 9 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது காலாண்டு விடு முறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கும்பக்கரை வந்தனர்.
அவர்கள் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர். வனத்துறை யினர் நீர்வரத்தை கண்கா ணித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு அம்சங்க ளையும் மேம்படுத்தி வருகின்றனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.45 அடியாக உள்ளது. 509 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.62 அடியாக உள்ளது. 102 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.30 அடியாக உள்ளது. 46 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. விரைவில் முழுகொள்ள ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.70 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 25.4, தேக்கடி 26.2, கூடலூர் 0.8, சண்முகா நதி அணை 1, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 2, பெரி யகுளம் 3.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.- ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
- மேலும் விபரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நேரடி பயிற்சி வகுப்புகள் நாளை (30-ந் தேதி) முதல் தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடைபெறும். இப்பயிற்சியின் போது ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்கள் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். இது தொடர்பான விபரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- பணம் இரட்டிப்பு தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 51). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் வருசநாடு வாலிப்பாறையைச் சேர்ந்த பார்த்திபன் (42) தொழில் முறையில் அறிமுகமாகி உள்ளார்.
இவர்கள் பழக்கம் அதிகரித்த நிலையில் ரவிச்சந்திரனிடம் பார்த்திபன் தனக்கு ரூ.2 லட்சம் கொடுத்தால் அதனை 100 ரூபாய் நோட்டுகளாக ரூ.3 லட்சம் வரை கூடுதலாக தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதன்படி ரவிச்சந்திரன் ரூ.2 லட்சம் பணத்துடன் தாடிச்சேரி செல்லும் கரட்டுப்பாதை நாகம்மாள் கோவில் அருகே காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் ரவிச்சந்திரனிடம் பணத்தை பெற்றுக் கொண்டு கூறியபடி ரூ.3 லட்சம் பணம் தராமல் ஏமாற்றிச் சென்றனர்.
அதன் பிறகு பார்த்திபனிடம் செல்போனில் பேசிய போதும், அவர் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். அதன் பிறகுதான் பணத்தை பறித்துச் சென்றது பார்த்திபனின் கூட்டாளிகள் என தெரிய வந்தது.
இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ், சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட பார்த்திபன், கடமலைக்குண்டுவைச் சேர்ந்த சாம்சன் (46), வாலிப்பாறையைச் சேர்ந்த சின்னன் (48), பசும்பொன் (40), தர்மாபுரியைச் சேர்ந்த சுபாஷ் (43) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் இதே போல் வேறு யாரிடமாவது பண மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- குடிபோதையில் வாலிபரை மிரட்டி நகையை பறித்து சென்றவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்க ரையை சேர்ந்தவர் மாரிமுத்து (32). இவர் தனது குழந்தைக்கு பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், ராஜேஸ், சவுந்தர் ஆகியோர் குடிபோதையில் அவரை வழிமறித்து பணம் கேட்டனர்.
அதற்கு மாரி முத்து பணம் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்தனர்.
மேலும் இதுகுறித்து யாரிட மும் தெரிவிக்கக் கூடாது. மீறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதில் காயமடைந்த மாரி முத்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை காதலிப்பதாக கூறி வலை வீசியுள்ளனர்.
- பெண்ணிடம் மிரட்டி 600 கிராம் தங்க நகை, ரூ.35 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.
கூடலூர்:
இடுக்கி மாவட்டம் கட்டப்பணையைச் சேர்ந்தவர் மேத்யூ ஜோஸ் (வயது 36). ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் குமுளி செங்கரையைச் சேர்ந்த ஷகிர் (24) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை காதலிப்பதாக கூறி வலை வீசியுள்ளனர்.
இதில் திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களும் இவர்கள் வலையில் விழுந்துள்ளனர். அவர்களை தங்கள் இடத்துக்கு வரவழைத்து ஆபாசமாக வீடியோ எடுத்து பின்னர் அதனையே அவர்களிடம் காட்டி பணம் பறிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தனர்.
கடந்த ஜூன் மாதம் அரியானாவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 2 பேரும் நட்பாக பழகி பின்னர் தங்கள் வலையில் விழ வைத்தனர். அந்த பெண்ணை குமுளிக்கு வரவழைத்து லாட்ஜில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
மேலும் அதை வீடியோவாக எடுத்து அந்த பெண்ணிடம் மிரட்டி 600 கிராம் தங்க நகை, ரூ.35 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணை அதிகாரிகளாக இருந்த குமுளி இன்ஸ்பெக்டர் அனுப்மோன், டி.எஸ்.பி. குரியாகோஸ் ஆகியோர் குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் அவர்கள் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதை அறிந்ததும் அவர்கள் டெல்லிக்கு தப்பி ஓடினர். இருந்த போதும் அவர்கள் செல்போன் எண்களை ட்ரேஸ் செய்து 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் கடந்த மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது டி.எஸ்.பி. குரியாகோஸ் என்பவரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் .
- பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலை முளைப்பாரி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது
கூடலூர்:
கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் . அதன்படி நேற்று கோவில் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது . இதையொட்டி அதிகாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அதனைத் தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மேலும் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலை முளைப்பாரி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அத்துடன் பக்தர்கள் சிவன், முருகன், விநாயகர், கலைமகள், லட்சுமி , காளி தேவி உள்பட கடவுள் வேடம் அணிந்து டிராக்டர் வண்டிகளில் வந்தனர்.
மேலும் தப்பாட்டம், தேவராட்டம் , கேரள செண்டை மேளம் , பேண்டு வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கூடலூர் ஒக்கலிகர் (காப்பு) மகாஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்த ஊழியர் படுகாயமடைந்தார்.
- ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே தேவாரம் தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரபு (39). இவர் போடியில் உள்ள வங்கியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். தேவாரம் சாலை கோணம்பட்டி தண்ணீர்தொட்டி பகுதியில் வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்தது.
இதனால் நிலைதடுமாறிய பிரபு பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கும், அங்கிருந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போடி தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் வங்கி பாஸ்வேர்டை பயன்படுத்தி சிறிதுசிறிதாக ரூ.17 லட்சத்து 27,500 பணத்தை திருடிய்து தெரியவந்தது.
- புகாரின்பேரில் ராஜஸ்தான் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனியை சேர்ந்த மதன்சிங்(37) என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்த தூதாராம்(21) என்பவர் ரூ.3லட்சம் அட்வான்ஸ் கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளார். மதன்சிங்கின் தந்தை உடல்நிலை மோசமடையவே அவரை கவனித்து கொள்வதற்காக சொந்தஊருக்கு சென்றுவிட்டார்.
இதனை பயன்படுத்தி தூதாராம் தனது உரிமையாளரான மதன்சிங் வங்கி பாஸ்வேர்டை பயன்படுத்தி சிறிதுசிறிதாக ரூ.17 லட்சத்து 27500 பணத்தை திருடினார். இதுகுறித்து மதன்சிங்கிற்கு தெரியவரவே அவர் தனது பணத்தை திருப்பி தருமாறு தூதாராமிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்குள் அவர் ராஜஸ்தான் சென்றுவிட்டது தெரியவந்தது.
தன்னிடம் பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாக போனிலேயே மிரட்டியுள்ளார். இதுகுறித்து மதன்சிங் தேனி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின்பேரில் தேனி இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மஞ்சளாறு அணை 53 அடியை கடந்துள்ளதால் 2-ம் கட்ட ெவள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சளாற்று கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. 57 அடிஉயரம் கொண்ட அணையில் 55 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. சில நாட்களுக்கு முன்பு 51 அடியை கடந்ததும் முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் தற்போது 53 அடியை கடந்துள்ளதால் 2-ம் கட்ட ெவள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சளாற்று கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றில் இறங்கி செல்ல கூடாது, கால்நடைகளை குளிப்பாட்டக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53.10 அடியாக உள்ளது. 57 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.
முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. அணைக்கு 301 கனஅடிநீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.62 அடியாக உள்ளது. 102 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.21 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிற நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக யானைகள் முகாமிட்டதால் சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர். இதனைதொடர்ந்து 3 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சாரல்விழா நடைபெறுவதால் விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகளுக்கான தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
பெரியாறு 1, தேக்கடி 1.2, வைகை அணை 2.2, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 2.8, அரண்மனைப்புதூர் 4, ஆண்டிப்பட்டி 4.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- பாலியல் தாக்குதல்-வன்முறை, பாலியல் துன்புறுத்தல்-சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக போக்சோ சட்டத்தில் முன் வைக்கிறது.
- தேனி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தினை மாவட்ட அமர்வு நீதிபதி அறிவொளி , மாவட்ட கலெக்டர்ஷஜீவனா தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீண் உமேஷ் டோங்கரே முன்னிலையில் திறந்து வைத்தார்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 என்பது இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும்.
18 வயதுக்கு குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். பாலியல் தாக்குதல்-வன்முறை, பாலியல் துன்புறுத்தல்-சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.
30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு.
இதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பின்னர், இந்த புதிய நீதிமன்றத்தின், முதல் வழக்கு விசாரணையை நீதிபதிகணேசன் தொடங்கிவைத்தார்.
இதில் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நடுவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- ஆக்கிரமிப்புகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனியில் நடை பெற்றது.
- கூட்டத்தில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் நகராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொது இடங்க ளில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இருந்து உருவாகும் குப்பைகளை கொட்டுதல், சாலை யோ ரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துதல், நகராட்சி பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தல் மற்றும் தடை செய்யப்பட்ட பிளா ஸ்டிக் பொருட்கள் விற்ப னை மற்றும் பயன்படுத்து தல் போன்றவை குறித்து ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனியில் நடை பெற்றது. கூட்டத்திற்கு தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன், தேனி டி.எஸ்.பி., பார்த்தீபன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தேனி தாசில்தார் சர வணபாபு, நெடுஞ்சாலை த்துறை தேனி உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, நகராட்சி சுகாதார அலு வலர் அறிவுச்செல்வம், நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார் உள்பட வர்த்தக சங்கம், ஓட்டல் சங்கம், சிறு வியாபாரிகள் சங்கம், பிளக்ஸ் போர்டு தயாரிப்பாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுனர்கள் சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
- மாயமான வாலிபர் ஒட்டாங்குளத்தில் வாலிபர் பிணம் கிடந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் மணிகண்டன் (வயது 35). இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வெளியே சென்ற அவர் மாயமானார்.
அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒட்டாங்குளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின்படி கூடலூர் தெற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர்.
விசாரணையில் இறந்த நபர் மணிகண்டன் என தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.






