என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 17 lakh"

    • வாலிபர் வங்கி பாஸ்வேர்டை பயன்படுத்தி சிறிதுசிறிதாக ரூ.17 லட்சத்து 27,500 பணத்தை திருடிய்து தெரியவந்தது.
    • புகாரின்பேரில் ராஜஸ்தான் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனியை சேர்ந்த மதன்சிங்(37) என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்த தூதாராம்(21) என்பவர் ரூ.3லட்சம் அட்வான்ஸ் கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளார். மதன்சிங்கின் தந்தை உடல்நிலை மோசமடையவே அவரை கவனித்து கொள்வதற்காக சொந்தஊருக்கு சென்றுவிட்டார்.

    இதனை பயன்படுத்தி தூதாராம் தனது உரிமையாளரான மதன்சிங் வங்கி பாஸ்வேர்டை பயன்படுத்தி சிறிதுசிறிதாக ரூ.17 லட்சத்து 27500 பணத்தை திருடினார். இதுகுறித்து மதன்சிங்கிற்கு தெரியவரவே அவர் தனது பணத்தை திருப்பி தருமாறு தூதாராமிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்குள் அவர் ராஜஸ்தான் சென்றுவிட்டது தெரியவந்தது.

    தன்னிடம் பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாக போனிலேயே மிரட்டியுள்ளார். இதுகுறித்து மதன்சிங் தேனி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின்பேரில் தேனி இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×