என் மலர்
ராணிப்பேட்டை
- இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
- கலெக்டர் வளர்மதி தகவல்
ராணிப்பேட்டை:
கோவிட்-19 (கொரோனா) பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு "புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்" என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம்.
அவர்கள் கோவிட்-19 பெருந்தொற்று பரவலினால் 01.01.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழகம் திரும்பியவராக இருக்க வேண்டும், குறைந்தது 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,பொது பிரிவினருக்கு வயது 18 க்கு மேலாகவும் 45 க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
சிறப்பு பிரிவினருக்கு (பெண்கள், SC, ST, BC, MBC, சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு) வயது 18 க்கு மேலாகவும் 55 க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சம் ஆகவும் உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சம் வரை திட்ட மதிப்பீடாக இருக்க வேண்டும்.
பயனாளர்கள் பங்காக பொது பிரிவு பயனாளர்கள் எனில் திட்ட தொகையில் 10 சதவிகிதம் மற்றும் பெண்கள், இடஒதுக்கீட்டு பிரிவினர் உள்ளட்ட சிறப்பு பிரிவினர் எனில் 5 சதவிகிதம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும். அரசு, திட்டத் தொகையில் 25 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.2.5 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டம், மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmeonline.tn.gov.in/meap என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பத்தினை இரு நகல்களாக சமர்பிக்க வேண்டும்.
எனவே, இந்த வாய்ப்பினை வெளிநாடுகளிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும், தொழில் துவங்க ஆர்வமும் கொண்டோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் வளர்மதி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எண்.5, தேவராஜ் நகர்,ராணிப்பேட்டை அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது கீழ் கண்ட தொலைபேசி எண்கள் 04172-270111/270222. மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
- குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி வழங்கினார்
- மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் வளர்மதி தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள்.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பொதுப்பிரச்சினைகள் குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 201 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றார்.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு தெரிவித்திட உத்தரவிட்டார்.
முன்னதாக ராணிப்பேட்டை மாவட்ட அரசுப் பள்ளிகளில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுக்காக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கொண்டு வட்டார அளவில் போட்டி கள் நடத்தப்பட்டடது.
இதில் வெற்றி பெற்ற 72 மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வளர்மதி வழங்கினார். இதில் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாதுளை பழ முத்துக்களால் அர்ச்சனை நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்
நெமிலி:
நெமிலியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று பூ அங்கி சமர்ப்பண விழா நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி. பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பூக்களால் அங்கி உடுத்தி, மாதுளை பழ முத்துக்களால் அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.
இதில் நெமிலி, ரெட்டிவலம், சேந்த மங்கலம், பனப்பாக் கம். சயனபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கலெக்டர் வளர்மதி தகவல்
- வருகிற 31-ந் தேதி கடைசி நாள்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் மணிமேகலை விருதுக்கு மகளிர் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ஊரகப் பகுதிகளில் சிறப் பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மக ளிர் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்ட மைப்புகள் மற்றும் நகர அள விலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மாநில மற் றும் மாவட்ட அளவில் மணி மேகலை விருதுகள் வழங்கப் பட உள்ளது.
2022-23-ம் ஆண்டிற்கு மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மகளிர். சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 லட்சம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.3 லட்சம், வட்டார அளவிலான கூட்ட மைப்பிற்கு ரூ.5 லட்சம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.1 லட்சம், நகரப் பகுதிக ளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட் சம், பகுதி அளவிலான கூட்ட மைப்பிற்கு ரூ.3 லட்சம், நகர அளவிலான கூட்டமைப் பிற்கு ரூ.5 லட்சம், மாவட்ட, அளவில் சிறப்பாக செயல் படும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம், ஊராட்சி அளவிலான கூட் டமைப்பிற்கு ரூ.1 லட்சம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.50 ஆயிரம், நகரப் பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம், பகுதி அளவி லான கூட்டமைப்பிற்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை யாக வழங்கப்பட உள்ளது.
எனவே சிறப்பாக செயல்படும் அமைப்புகளிடம் விண் ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது. தகுதி வாய்ந்த அமைப் புகள், தங்கள் பகுதிகளில் அமைந்துள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு, நகராட்சி அல்லது பேரூ ராட்சி அலுவலகங்களில் செயல்படும் மகளிர் திட்டப் பிரிவில் வருகிற 31-ந் தேதிக் குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- மின்ஒயர்கள் தீப்பற்றி எரிந்தது
- சிவாச்சாரியார்கள் பரிகார பூஜைகளை செய்தனர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை 7 மணியளவில் நெமிலி, பனப்பாக்கம் பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்ததால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தின் மற்ற இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.
இதற்கிடையே நெமிலி அடுத்த மேலேரி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் குடமுழுக்கு நடக்க உள்ளதால் கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.நேற்று காலை மழை பெய்தபோது திடீரென மூலவர் சன்னதி கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியது.இதனால் கோபுரத்தின் பக்கவாட்டில் இருந்த அம்மன் சிலை உடைந்து கீழே விழுந்து சேதம் அடைந்தது.
கோபுரத்தின் மீது பெரிய விரிசலும் ஏற்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள மின்ஒயர்கள் தீப்பற்றி எரிந்து கருகின. இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் மின்னல் தாக்கி சேதமடைந்த கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து மின்னல் தாக்கி அம்மன் சிலை கீழே விழுந்ததால் கோவிலில் சிவாச்சாரியார்கள் பரிகார பூஜைகளை செய்தனர்.
- வாகன சோதனையில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே உள்ள வில்வநாதபுரத்தை சேர்ந்த வர் மகேஷ்பாபு (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 19-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்தார். அதை யாரோ மர்ம கும்பல் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து மகேஷ் பாபு ராணிப்பேட்டை போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று ராணிப்பேட்டை போலீசார் ராணிப் பேட்டை பாலாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட, சோளிங்கர் அருகே உள்ள கொடைக்கல் காலனி பகுதியை சார்ந்த ஆகாஷ் (21) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் மகேஷ் பாபுவின் மோட்டார் சைக்கிளை திரு டியதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- கலெக்டர் தகவல்
- நாளை முதல் நடைபெற உள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தவறிய மாணவர்கள் மறுதேர்வு எழுத சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், ஆதிதிராவிடர் நல உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தவறிய மாணவர்கள் மறுதேர்வு எழுத சிறப்பு முகாம் அந்தந்த பள்ளிகளில் நாளை 22-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் நடைபெற உள்ளது.
மாணவர்கள் தாங்கள் தவறிய பாடங்களுக்கு மறுதேர்விற்கு விண்ணப்பிக்கவும், மறுதேர்விற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள, ஆலோசனைகள் பெறவும், மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெறவும் அந்தந்த பள்ளிகளிலேயே பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் இதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்து தங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டவும், அவர் களுக்கு நம்பிக்கையூட்டி மறுதேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- v
ஆற்காடு:
ராணிப்பேட்டை மகாவீர் நகரை சேர்ந்தவர் விஜயகு மார் (வயது 36). இவர் விளாப்பாக்கத்தில் உள்ள மின்சார வாரியத் தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சென்று விட்டு இரவு ராணிப்பேட்டை நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்தார்.
ரத்தினகிரியை அடுத்த அரப் பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது பின்னால் வந்த லாரி விஜயகுமார் ஓட்டி வந்த மோட் டார் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி கீழேவிழுந்தார். பலத்த காயம் அடைந்து விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக் பறிமுதல்
- போலீசார் வாகன சோதனையில் சிக்கினர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்-திருவள்ளூர் சாலையில் உள்ள சில்வர்பேட்டை சோதனை சாவடியில் அரக்கோணம் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையை சேர்ந்த டேவிட் ஜிந்தா (வயது 48), அரக்கோணம் சுவால்பேட் டையை சேர்ந்த சோபன் (23) என்பது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் ஓட்டி வந்த ஸ்கூட்டரில் சோதனை செய்ததில் 4 கிலோ கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கஞ்சாவையும், ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
- 3 பேர் கைது
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலால் போலீசார் முத்துக்கடையில் இருந்து மாந்தாங்கல் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
அவர்களிடம் சோதனை நடத்திய போது போதையை ஏற்படுத்தக்கூடிய 300 மாத்திரைகள் வைத்தி ருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போதை மாத்திரைகள் வைத்திருந்த ராணிப்பேட்டை நவல்பூரை சேர்ந்த பால் சுனில் (23), ராணிப்பேட்டை முகமது சுனில் (19), தனுஷ் (19) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உதவி கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது
- கலெக்டர் வளர்மதி தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் வருகிற 24-ந் தேதி முதல் 31 -ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.
இதன்படி கலவை தாலுகா அலுவலகத்தில் வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், அதே தேதிகளில் சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும் நடக்கிறது. வாலாஜா தாலுகா அலுவலகத்தில் 24, 25, 26, 30 ஆகிய தேதிகளில் கலால் உதவி ஆணையர் தலைமையிலும், 24 ,25, 26, 30, 31 ஆகிய தேதிகளில் ஆற்காடு தாலுகா அலுவல கத்தில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் தலைமை யிலும் நடைபெறுகிறது.
நெமிலி தாலுகா அலுவலகத்தில் அரக்கோணம் உதவி கலெக்டர் தலைமையிலும், அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், அரசு நலத்திட்டங்களின் கீழ் உதவி கோருதல், கிராம வளர்ச்சிக்கான திட்ட பணிகள், குடிநீர் சாலை வசதி மற்றும் இதர தேவைகள் தொடர்பான மனுக்கள் ஜமாபந்தி அலுவலரால் பெறப்படும். ஒரு கிராமத்தில் சம்பந்தப்பட்ட மனுக்கள் கிராம கணக்குகள் தணிக்கை நாள் அன்று அளிக்க வேண்டும்.
முன்னதாக கொடுக்கப்படும் மனுக்கள் அந்த கிராம தணிக்கை நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் .
தபால் மூலமாக மனு அனுப்ப விரும்புவர்களும் ஜமாபந்தி அலுவலருக்கோ அல்லது தாசில்தாருக்கோ அனுப்பலாம். இந்த தகவலை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- குளிக்க சென்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த சாத்தம்பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யோகானந்தன்(25). கூலி தொழிலாளி.
நேற்று மதியம் யோகானந்தன் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி சேற்றில் சிக்கிக் கொண்டார்.
இதனை கண்ட அப்பகுதியினர் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) வேலு தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இருந்து யோகானந்தன் உடலை மீட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் யோகானந்தன் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






