என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • தி.மு.க செயற்குழு கூட்டம்
    • அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு

    ராணிப்பேட்டை,

    ராணிப்பேட்டையில் மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம் தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நூற்றாண்டு விழா

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    முன்னாள் தி.மு.க தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். அண்ணா, பெரியார், கலைஞர் எண்ணங்களை நிறைவேற்றுகிற முதல்வராக மு.க. ஸ்டாலின் உள்ளார்.

    நூற்றாண்டு விழாவை ஓராண்டிற்கு கொண்டாட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் ஜூன் 3ம் தேதிக்குள் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் 2 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். இதுவரை ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூன் 3-ந்் தேதி கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அனைத்து நகராட்சிகளில் உள்ள வார்டுகளிலும் அனைத்து கிராமங்களிலும் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்க வேண்டும்.

    சாதனை விளக்க கூட்டம்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 இடங்களில் இரண்டு ஆண்டு சாதனைகள் விளக்க கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இளைஞர் அணி சார்பில் 51 இடங்களில் 31-ந் தேதி வரை தெருமுனை பிரச்சாரங்களை வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா வேறு எங்கும் நடக்காத அளவிற்கு சிறப்பாக ராணிப்பேட்டை மாவட்டம் நடத்திட வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    • கொடி மரத்துக்கு கலசபுனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை
    • வருகிற 30-ந்தேதி தேர் திருவிழா

    சோளிங்கர்:

    சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள சோழபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றம் நேற்று நடந்தது.

    இதனை முன்னிட்டு சோழபுரீஸ்வரர் கனககுஜம் அம்பாள், கங்காதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம்,அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து மங்கல வாத்தியங்களுடன் கொடி மரத்துக்கு கலசபுனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை செய்து நந்தி திருவுருவம் படத்துடன் கொடியேற்றப்பட்டு பிரமோற்சவம் தொடங்கியது. உற்சவ சுவாமிக்கும் கொடி மரத்திற்கும் கும்ப தீபாராதனை நடைபெற்றது.

    உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் தனித்தனி வாகனத்தில் சோழபுரீஸ்வரர், கனககுஐம்பாள், கங்காதேவி சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள் வருகிற 30-ந் தேதி அன்று தேர் திருவிழா நடைபெறுகிறது.

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான தற்காலிக வாரச்சந்தை கடைகள் இயங்கி வரு கிறது. இதில் ஒரு கடையின் முன்பு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தூக்கில் தொங் கியவர் சோளிங்கர் கணபதி முதலி தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முகமதுஅலி என்பது தெரிய வந்தது.

    இவர் தற் கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • வாகனம் பறிமுதல்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த நீலகண்டராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சகுந்தலா (வயது 50), அருண்குமார் (26). இருவரும் கூலித் தொழிலாளர்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சகுந்தலா வீட்டில் ஒரு பவுன் நகை, வெள்ளி கொலுசு, சாவி கொத்து, ரூ.6 ஆயிரம் ஆகியவற்றையும், அருண்குமார் வீட்டில் 2 பவுன் நகை, 2 ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றையும் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.

    இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி அருகே சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் வாலாஜா அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45), காட்பாடி அடுத்த கீழ்மோட்டூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (47) என்பதும் சகுந்தலா, அருண்குமார் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 3 பவுன் நகை, 4 ஜோடி வெள்ளி கொலுசு, சாவி கொத்து, ரூ.2,500 மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • வருகிற 11-ந் தேதி நடக்கிறது
    • ஐயப்ப பக்தர்கள் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்

    ராணிப்பேட்டை:

    சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் வேலூர் மண்டலத்தில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா மற்றும் குரு வந்தனம் அழைப்பு நிகழ்ச்சி வருகிற ஜூன் 11-ந்தேதி ரத்தினகிரி அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள ரமணி சங்கர் மஹாலில் நடைபெறகிறது.

    இந்த நிகழ்ச்சியில் வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகள் சேவா சமாஜத்தின் நிர்வாகிகள், குருமார்கள், ஐயப்ப பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாநில நிர்வாகிகள், குருமார்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர், ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு தேசிய கமிட்டி நிர்வாகிகள், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ தேசிய பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஐயப்ப பக்தர்கள் என 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்த தகவலை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் வட தமிழ்நாட்டின் மாநில தலைவரும் சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோவில் குருசாமியுமான ஜெயச்சந்திரன் ெதரிவித்துள்ளார்.

    • 21 மனுக்களில் தீர்வு காணப்பட்டது
    • ஓய்வூதியதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியதார்களுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடந்த முறை வரப்பெற்ற 21 மனுக்களில் தீர்வு காணப்பட்ட 15 மனுக்கள் மற்றும் நிலுவையிலுள்ள 6 மனுக்கள் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு கலெக்டர் ஆய்வு செய்தனர்.

    நேற்றைய கூட்டத்தில் பெறப்பட்ட 29 கோரிக்கை மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக மனுவின் மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டரிந்தார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

    இனிவரும் காலங்களில் நடைபெறும் ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு சார்பு அலுவ லர்களை அனுப்பாமல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டு மென கலெக்டர் உத்தர விட்டார்.

    கூட்டத்தில் கருவூல மண்டல இணை இயக்குநர் சாந்தி மணி உள்பட ஓய்வூதியதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சி.சி.டி.வி. ேகமிராவில் சிக்கினார்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஜேக்கப்.

    தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்றிரவு தனது பேரனுக்கு சாலையில் வேடிக்கை காட்டி சாப்பாடு ஊட்டியுள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர் ஒருவர் ஜேக்கப், கையிலிருந்த செல்போனை திடீரென பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இந்த வீடியோ காட்சிகள் அருகே உள்ள வீட்டில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத ளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஆற்காடு நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை - பெங்களூர் சாலையில் அடிக்கடி செல்போன் பறிப்பு சம்பவம் நடக்கிறது.

    இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் நடந்தது
    • கலெக்டர் வளர்மதி வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் 100 மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகாதார பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி சுகாதார பெட்டகங்களை வழங்கி ேபசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூய்மை பணியாளர்களின் ேசவை மிகவும் போற்றுதலுக்குரியது. தூய்மைப் பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். முறையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். தன் சுத்தம் கடைபிடிப்பதையும் பின்பற்றுவதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணி தாய்மார்கள், பெண்கள், குழந்தைகள் மாறிவரும் இந்த நவீன யுகத்தில் தன் சுத்தம் பேணுதல்.

    கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

    பள்ளிக் குழந்தைகளுக்கு அடிக்கடி கைகள் கழுவுவதை பழக்கப்படுத்த வேண்டும். குறிப்பாக பெண்கள் வலிமைமிக்க நோயான புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

    ேமலும் ஆரோக்கியமாக வாழ விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் இன்று வழங்கும் இந்த சுகாதாரப் பெட்டகத்தினை பயன்படுத்தி தொடர்ந்து தங்கள் சுத்தத்தை பேணிக்காக்க முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் விஜயா முரளி, இந்தியன் ரெட் கிராஸ் சங்க அவைத்தலைவர் பொன்.சரவணன், மாவட்ட செயலாளர் ரகுநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.உஷா நந்தினி உள்பட ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கணவன் மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50), பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

    அதைத்தொடர்ந்து பெருமாள் தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பெருமாள் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சோதனையில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட் டம், ஓச்சேரி அடுத்த பொய்கைநல்லூர் பகுதியில் உள்ள கடைகளில் புகை யிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என அவளுர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையி லான போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது பொய்கை நல்லூர் ரோடு தெருவில் வசிக்கும் சீனிவாசன் (வயது 73) என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றியதால் ஆத்திரம்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த காவனூர் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துதர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதன்படி புதியதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் போதிய இடம் வசதி இல்லை எனக்கூறி காவனூர் கிராமத்தில் கட்ட வேண்டிய கட்டிடம், புங்கனூர் கிராமத்தில் கட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த கிராம மக்கள், இன்று காலை 7 மணி முதல் காவனூர் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாசில்தார் வசந்தி, திமிரி போலீசார், அதிகாரிகள் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாரிகள் காவனூர் கிராமத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது புங்கனூர் கிராமத்தில் கட்டப்படுகிறது என தெரிவித்தனர். உடனே கிராம மக்கள் காவனூர் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் அதிகளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டால் இதற்கான தீர்வு கிடைத்துவிடும். இதற்கான நடவடிக்கை எடுக்கும் வரை, நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் எனக்கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் ஆற்காடு - கண்ணமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை
    • செயின் 2 துண்டானது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா செளடேகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 70). இவர் அப்பகுதியில் மாரியம்மன் கோயில் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று பைக்கில் 2 மர்ம கும்பல் கடைக்கு வந்தனர்.

    பின்னர் தண்ணீர் பாட்டில் வாங்கினர். பிறகு சிகரெட் கேட்டுள்ளனர் அப்போது கோவிந்தம்மாள் உள்ளே சென்றபோது திடீரென அவர் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்துள்ளனர்.

    சுதாரித்துக் கொண்ட கோவிந்தம்மாள் செயினை இறுக்கி பிடித்துள்ளார். செயின் 2 துண்டாகியுள்ளது.

    ஒரு துண்டு கோவிந்தம்மாள் கையிலும் மற்றொரு துண்டு கீழே விழுந்தது உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம கும்பல் அந்த துண்டான செயினை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×