ஓய்வூதியதாரர்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

21 மனுக்களில் தீர்வு காணப்பட்டது ஓய்வூதியதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்
ஓய்வூதியதாரர்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியதார்களுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடந்த முறை வரப்பெற்ற 21 மனுக்களில் தீர்வு காணப்பட்ட 15 மனுக்கள் மற்றும் நிலுவையிலுள்ள 6 மனுக்கள் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு கலெக்டர் ஆய்வு செய்தனர்.

நேற்றைய கூட்டத்தில் பெறப்பட்ட 29 கோரிக்கை மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக மனுவின் மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டரிந்தார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

இனிவரும் காலங்களில் நடைபெறும் ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு சார்பு அலுவ லர்களை அனுப்பாமல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டு மென கலெக்டர் உத்தர விட்டார்.

கூட்டத்தில் கருவூல மண்டல இணை இயக்குநர் சாந்தி மணி உள்பட ஓய்வூதியதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com