என் மலர்
நீங்கள் தேடியது "The teenager who stole the cell phone"
- சி.சி.டி.வி. ேகமிராவில் சிக்கினார்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஜேக்கப்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்றிரவு தனது பேரனுக்கு சாலையில் வேடிக்கை காட்டி சாப்பாடு ஊட்டியுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர் ஒருவர் ஜேக்கப், கையிலிருந்த செல்போனை திடீரென பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இந்த வீடியோ காட்சிகள் அருகே உள்ள வீட்டில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத ளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆற்காடு நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை - பெங்களூர் சாலையில் அடிக்கடி செல்போன் பறிப்பு சம்பவம் நடக்கிறது.
இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






