என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னல் தாக்கி விபத்து"

    • மின்ஒயர்கள் தீப்பற்றி எரிந்தது
    • சிவாச்சாரியார்கள் பரிகார பூஜைகளை செய்தனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை 7 மணியளவில் நெமிலி, பனப்பாக்கம் பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது.

    இதனால் வெப்பம் தணிந்ததால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தின் மற்ற இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

    இதற்கிடையே நெமிலி அடுத்த மேலேரி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் குடமுழுக்கு நடக்க உள்ளதால் கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.நேற்று காலை மழை பெய்தபோது திடீரென மூலவர் சன்னதி கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியது.இதனால் கோபுரத்தின் பக்கவாட்டில் இருந்த அம்மன் சிலை உடைந்து கீழே விழுந்து சேதம் அடைந்தது.

    கோபுரத்தின் மீது பெரிய விரிசலும் ஏற்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள மின்ஒயர்கள் தீப்பற்றி எரிந்து கருகின. இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் மின்னல் தாக்கி சேதமடைந்த கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து மின்னல் தாக்கி அம்மன் சிலை கீழே விழுந்ததால் கோவிலில் சிவாச்சாரியார்கள் பரிகார பூஜைகளை செய்தனர்.

    ×