என் மலர்
நீங்கள் தேடியது "பெற்றோர்கள் உறுதுணை"
- கலெக்டர் தகவல்
- நாளை முதல் நடைபெற உள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தவறிய மாணவர்கள் மறுதேர்வு எழுத சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், ஆதிதிராவிடர் நல உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தவறிய மாணவர்கள் மறுதேர்வு எழுத சிறப்பு முகாம் அந்தந்த பள்ளிகளில் நாளை 22-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் நடைபெற உள்ளது.
மாணவர்கள் தாங்கள் தவறிய பாடங்களுக்கு மறுதேர்விற்கு விண்ணப்பிக்கவும், மறுதேர்விற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள, ஆலோசனைகள் பெறவும், மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெறவும் அந்தந்த பள்ளிகளிலேயே பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் இதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்து தங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டவும், அவர் களுக்கு நம்பிக்கையூட்டி மறுதேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






