என் மலர்
ராணிப்பேட்டை
- வீடு, வீடாக சென்று வழங்கினர்
- தொற்று நோய்கள் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் இந்த பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பேரூராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு)முத்து உத்தரவின் பேரில் மேற்பார்வையாளர் (பொறுப்பு) அரங்கநாதன் தலைமையில் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கினர்.
அப்போது, டெங்கு கொசுக்கள் உற்பத்தி மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டுவதற்கும், ஆற்காடு பழைய பஸ் நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிக்கும் என மொத்தமாக ரூ.9.48 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
ஆற்காடு எம்.எல்.ஏ.ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகரமன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டியும், கட்டிட, பணிகளை தரமாக மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டுமெனவும் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி பொறியா ளரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தனலட்சுமி, நகரமன்றத் துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணாராம், நகராட்சி பொறியாளர் எழிலரசன், நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.4 கோடியில் கட்டப்பட உள்ளது
- விரைந்து முடிக்க எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரைப்பெ ரும்பாக்கம் பகுதியில், கொசத்தலை ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய உயர் மட்ட மேம்பால பணிக்கு பூமி பூஜை விழா இன்று காலை நடைபெற்றது.
நிகழ்சிக்கு சோளிங்கர் ஏ. எம்.முனிரத்தினம் எம்.எல்ஏ. தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
அப்போது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த, இந்த உயர் மட்ட மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இதில் ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சைபுத்தீன், வெங்கடேசன், பேரூராட்சி துணை தலைவர் தீபிகாமு ருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள், செல்லக்கிளி மூர்த்தி, திவ்யபாரதி தினேஷ் காந்தி, சுலோச்சனா பிரகாஷ், பேரூராட்சி கவுன்சிலர் இந்திரா, மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி, காங்கிரஸ் கட்சி ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பிரகாஷ், நகர செயலாளர் தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலவை போலீஸ் நிலையம் சார்பில் நடந்தது
- விற்பனை செய்வது தெரியவந்தால் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்
கலவை:
கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கலவை போலீஸ் நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், சப்- இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, உஷா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பல தீய செயல்களை செய்கின்றனர்.
இதை தடுக்க போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் போதை பொருள்களை பயன்படுத்தக் கூடாது.
தங்களது பகுதிகளில்போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் போலீசார் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
இதேபோல் பாணாவரம் அருகே சூரை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் போதை பொருள் தடுப்பு விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- சோளிங்கரில் நாளை நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
சோளிங்கரில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைகள் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
சோளிங்கரில் எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசினர் மாதிரி மகளிர் மேநிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில் முன்னணி நிறுவனங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட தனி யார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12 ம் வகுப்புகள்,ஐ.டி.ஐ., டிப்ளமோ , டிகிரி, நர்சிங், என்ஜினீயரிங் உள்ளிட்ட கல்வித் தகுதிகளை உடைய வேலை தேடுவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த சிறப்பு முகாமில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- நேரடியாக வீடு வீடாகச் சென்று மேலாய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது
- கூடுதல் தகவல்கள் தேவைப்படும் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே மேல்விஷாரம் ரஷீத் பேட்டை பகுதியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான நபர்கள் குறித்தும், கூடுதல் தகவல்கள் தேவைப்படும் விண்ணப்பங்கள் மீது நேரடியாக வீடு வீடாகச் சென்று மேலாய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் வெங்கடேசன் உடனிருந்தார்.
- ரூ.2 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜா நகரில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு பங்க் கடையில் சோதனை நடத்தினர்.
சோதனையில் கடையில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது அதை தொடர்ந்து போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் சேட்டு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, கடைக்கு சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல்நலம் பாதித்து மாணவர்கள் படிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது
- சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
நெமிலி
நெமிலி அருகே அரசு பஸ் வசதியில்லாததால், தினமும் சுமார் 5 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள்,பள்ளி நேரத்திற்கு அரசு பஸ் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்வீதி, வேப்பேரி, கொந்தங்கரை, காபிகள்ஓடை ஆகிய கிராமங்களில் சேர்ந்த பள்ளி மாணவர்கள் காலை நேரங்களில் பஸ் வசதி இல்லாததால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். அதேபோல் மாலை நேரங்களில் பள்ளி முடிந்து நடந்து வருவதால் மாணவர்கள் சோர்வடைந்து விடுகின்றனர்.
இதனால் உடல்நலம் பாதித்து மாணவர்கள் படிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், மாணவர்கள் கூறுகையில்:-
பாணாவரம் பகுதியில் இருந்து கீழ்வீதி வழியாக நெமிலிக்கு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக அந்த அரசு பஸ் வருவதில்லை.
இதுதொடர்பாக சோளிங்கரில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நேரில் சென்று கோரிக்கை வைத்தும். இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் கீழ்வீதி பகுதியில் இருந்து வேப்பேரி வழியாக நெமிலிக்கு செல்லும் சாலையில் நெமிலி அருகே சென்னை- பெங்களூர் தேசிய அதிவிரைவு சாலை பணி நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் அதிகளவில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் அந்த தார்சாலை முழுவதும் சிதலமடைந்து காணப்படுகிறது.
அந்த வழியாக நடந்து மற்றும் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மாணவ, மாணவிகளின் நலன் கருதி காலை 8 மணி மற்றும் மாலை 5 மணிக்கு பாணாவரம் பகுதியில் இருந்து கீழ்வீதி வழியாக நெமிலிக்கு அரசு பஸ் வசதியை செய்து தர வேண்டும். கீழ்வீதி கிராமத்தில் இருந்து வேப்பேரி வழியாக நெமிலிக்கு செல்லும் சேதமடைந்த சாலைகளை விரைவில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
கலவை,
ஆற்காடு அருகே தாழனூர் இந்திராநகரை சேர்ந்தவர் வெங்கடேசன் கட்டிடமேஸ்திரி. இவரது மனைவி மகேஸ்வரி(வயது 39).கண்பார்வை குறைபாடு உடையவர் என கூறப்படுகிறது.
வீட்டின் அருகே உள்ள தொட்டியில் தண்ணீர் எடுக்க மகேஸ்வரி சென்றார்.
அப்போது கால் தவறி தொட்டியில் விழுந்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மகேஸ்வரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாசில்தார் பணிநீக்கம் எதிரோலியாக நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், விஜயசேகரன், வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாசில்தார் மனோஜ் முனியன் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதில் வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
- ஓமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை
சோளிங்கர் அடுத்த பரவத் தூரில் ஒருவர் ஓமியோபதி படித்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தது.
அதைத்தொ டர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் சோளிங்கர் அரசு மருத் துவமனை தலைமை மருத்துவர் பாஸ்கர், டாக்டர் கருணாகரன், மருந்தாளுனர் சேகர் ஆகியோர் பெரியவைலம்பாடி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் பெரிய தெருவை சேர்ந்த விஜய் (வயது 29) என்பவர் ஓமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அங்கி ருந்த ஊசிகள் மற்றும் ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்த னர். விஜயை சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.
இது குறித்து சோளிங் கர் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலை பள்ளிக்கு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் சமூக பாதுகாப்புத்துறையின் சார்பில் சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லம் காரை கூட் ரோடு பகுதியில் இயங்கி வருகிறது.
இந்த இல்லத்தில், பெற்றோரால் கைவிடப்பட்ட, பெற்றோர் இல்லாத, மாணவர்கள் 33 பேர் தங்கி சுற்றுப்புறங்களில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இவர்கள் பள்ளிக்கு சென்று மீண்டும் இல்லத்திற்கு திரும்பாமல் மாயமாகி வருவது தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் , மறைமலை நகர் பகுதியை சேர்ந்த மாணவன் சிவக்குமார் (வயது 16) ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து பள்ளிக்கு சென்று வந்தான்.
நேற்று காலை பள்ளிக்கு சென்ற சிவக்குமார் மாலை இல்லத்திற்கு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்காததால் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கோமதி ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஒரு மாணவன் மாயமாகிய நிலையில் மீண்டும் ஒரு மாணவன் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






