என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து இல்லை மாணவர்கள் அவதி"

    • உடல்நலம் பாதித்து மாணவர்கள் படிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது
    • சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

    நெமிலி

    நெமிலி அருகே அரசு பஸ் வசதியில்லாததால், தினமும் சுமார் 5 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள்,பள்ளி நேரத்திற்கு அரசு பஸ் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்வீதி, வேப்பேரி, கொந்தங்கரை, காபிகள்ஓடை ஆகிய கிராமங்களில் சேர்ந்த பள்ளி மாணவர்கள் காலை நேரங்களில் பஸ் வசதி இல்லாததால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். அதேபோல் மாலை நேரங்களில் பள்ளி முடிந்து நடந்து வருவதால் மாணவர்கள் சோர்வடைந்து விடுகின்றனர்.

    இதனால் உடல்நலம் பாதித்து மாணவர்கள் படிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது.

    இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், மாணவர்கள் கூறுகையில்:-

    பாணாவரம் பகுதியில் இருந்து கீழ்வீதி வழியாக நெமிலிக்கு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக அந்த அரசு பஸ் வருவதில்லை.

    இதுதொடர்பாக சோளிங்கரில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நேரில் சென்று கோரிக்கை வைத்தும். இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் கீழ்வீதி பகுதியில் இருந்து வேப்பேரி வழியாக நெமிலிக்கு செல்லும் சாலையில் நெமிலி அருகே சென்னை- பெங்களூர் தேசிய அதிவிரைவு சாலை பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் அப்பகுதியில் அதிகளவில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் அந்த தார்சாலை முழுவதும் சிதலமடைந்து காணப்படுகிறது.

    அந்த வழியாக நடந்து மற்றும் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மாணவ, மாணவிகளின் நலன் கருதி காலை 8 மணி மற்றும் மாலை 5 மணிக்கு பாணாவரம் பகுதியில் இருந்து கீழ்வீதி வழியாக நெமிலிக்கு அரசு பஸ் வசதியை செய்து தர வேண்டும். கீழ்வீதி கிராமத்தில் இருந்து வேப்பேரி வழியாக நெமிலிக்கு செல்லும் சேதமடைந்த சாலைகளை விரைவில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×