என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். 

    அதன் விவரம் வருமாறு:-

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தார் ஹிந்துமதி கலவை தாலுகா அலுவலகம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரகவும், அங்கு பணியாற்றி வந்த தாசில்தார் ஜெயபிரகாஷ் அரக்கோணம் சிப்காட் பணப்பாக்கம் தொழிற்பூங்கா திட்டம் தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த காஞ்சனா வேலூர் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் தனி தாசில்தாராக (கோயில் நிலம்) நியமிக்கப்பட்டுள்ளார். 

    இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன் சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரகவும், சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த ராஜராஜசோழன் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அரக்கோணம் தாலுக்கா சிப்காட் பனப்பாக்கம் தொழிற் பூங்கா திட்டம் தனி தாசில்தார் குமரவேல் அரக்கோணம் தாலுகா மதுபான கிடங்கில் உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) காலி பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
    ராணிப்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த கல்மேல்குப்பம்ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் 7வது வார்டில் 250 குடும்பங்கள் உள்ளனர். மேற்கண்ட 7வது வார்டு மேட்டுத் தெருவில் கடந்த 6 வருடங்களாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது.
     
    இங்கு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் டேங்கில் தண்ணீர் சப்ளை இல்லை. பைப்புகள் அமைத்து அப்படியே உள்ளன. மொத்தத்தில் குடிநீர் சரிவர வழங்குவதில்லை என கூறப்படுகிறது. 

    இந்நிலையில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் நேற்று குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

     இதனையடுத்து போலீசார் தலைவர் துணைத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 20 நாட்களுக்குள் குடிநீர் தருவது என அறிவித்தனர்.

    இதையடுத்து பெயரில் பொதுமக்கள் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    வாலாஜாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    வாலாஜா:

    வாலாஜா தொட்டி நாகைய்யா தெருவைச் சேர்ந்தவர் ஹரிகரன்(19) டிப்ளமோ படித்துள்ளார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது ஹரிகரன் திடீரென மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிறுவர்களின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்காணிப்பாளர் இந்த கொடூர சம்பவம் குறித்து தனது மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் சமூக நலத்துறை சார்பில் அரசினர் சிறுவர் சீர்திருத்த பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சிறு குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் மற்றும் ஆதரவற்ற சிறுவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

    அவர்களுக்கு கல்வி விளையாட்டு ஒழுக்கம் கற்றுத் தரப்பட்டு 18 வயது ஆனவுடன் அவர்கள் உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

    இந்த பள்ளியில் வளர்க்கப்பட்ட சிறுவர்களில் பலர் அரசுப் பணிகள் உட்பட பல உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளனர் . முன்பு இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    காலப்போக்கில் இந்த பள்ளியின் பெயர் அரசினர் சிறுவர் இல்லம் என்று மாற்றப்பட்டது. மேலும் சிறுவர்களின் எண்ணிக்கை இப்போது நூற்றுக்கும் கீழ் குறைந்துள்ளது.

    இந்த இல்லத்தில் உள்ள சிறுவர்களில் சிலர் அதே வளாகத்தில் உள்ள தீரன் சத்தியமூர்த்தி நடுநிலைப்பள்ளியிலும், ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் படித்து வருகின்றனர். இந்த இல்லத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி மற்றும் இல்ல சிறுவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியராக செந்தில்குமார் (வயது 46), பணியாற்றி வருகிறார்.

    இவரின் சொந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடி, செந்தில்குமார் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களை தனது இச்சைக்கு இணங்கும்படி, வற்புறுத்தியும், மிரட்டியும் பலமுறை தகாத உறவு கொண்டுள்ளார்.

    உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் இல்லத்தில் பணியில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அங்குள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு வரும் மாணவர்களை மிரட்டி தொடக்கத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அவரது அத்துமீறல் தொடர்ந்தது. மாணவர்களை வேண்டுமென்றே உடற்பயிற்சி கூடத்திற்கு வரவழைத்து அங்கு வைத்து நீண்ட நேரம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவர்கள் படாதபாடுபட்டனர்.

    மாலை நேரங்களில் அங்குள்ள மைதானத்தில் உள்ள ஆலமரத்து அடியில் மாணவர்கள் விளையாடுவது வழக்கம். அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு உடற்கல்வி ஆசிரியர் தனது லீலைகளை தொடர்ந்தார். மைதானத்திற்கு அருகே விளையாடும் மாணவர்களை தனியாக அழைத்து மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். பல ஆண்டுகளாக இப்படியே ஆசிரியர் செந்தில்குமாரின் அட்டகாசம் தொடர்ந்தது.

    குறிப்பாக தாய் தந்தை இல்லாத மாணவர்களை குறிவைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக அவர்கள் இந்த கொடூரத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

    பல ஆண்டுகளாக இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது . இதை சிறுவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் உடல் உபாதையுடனும், அச்சத்துடனும் இருந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் சிறுவர்களிடம் ஏற்பட்டுள்ள மாறுதல் மற்றும் அவர்களின் நிலைமை குறித்து அரசல், புரசலாக அறிந்த சிலர் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர் .

    இதையடுத்து விஜயகுமார், பாதிக்கப்பட்ட சிறுவர்களை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினார்.

    அப்போது 7 சிறுவர்கள் தங்களுக்கு நடந்து வரும் கொடுமை குறித்து கதறி அழுது விஜயகுமாரிடம் கூறியுள்ளனர். சிறுவர்களின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்காணிப்பாளர் இந்த சம்பவம் குறித்து தனது மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து உடனடியாக செந்தில்குமார் மீது போலீசில் புகார் செய்யும்படி உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து விஜயகுமார் ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    வாலாஜா அடுத்த மலைமேடு கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சி மலைமேடு கிராமத்தில் பகுதிநேர ரேசன் கடை திறப்பு விழா கடந்த 20ம் தேதி நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். துணை பதிவாளர் சந்திரன் வரவேற்றார். 

    ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், துணைத்தலைவர் சபரி கிரிசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பகுதிநேர நியாய விலை கடை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினர். 

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி பாண்டியன், ஜான் ஜெயபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி மோகன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    முடிவில் ராணிப்பேட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மணிமேகலை நன்றி கூறினார்.
    ராணிப்பேட்டையில் வருகிற 29-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 

    கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சித்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 

    கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சார துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். 

    எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கள பிரசனைகளை களைத்திட கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை வாயிலாகவும் தனிநபர் பிரச்சினைகள் மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.
    அரக்கோணம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
    நெமிலி:

    தக்கோலம் அடுத்த நகிரி குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது26). பெயிண்டர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று விஷத்தை மதுவில் கலந்து குடித்ததில் மயங்கி விழுந்தார்.

     இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் கார்த்தியை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். கார்த்தி இறந்ததற்கான காரணம் குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம் சுடுகாட்டில் திடீரென பற்றி எரிந்த தீயால் பரபரப்பு ஏற்பட்டது.
    நெமிலி:

    அரக்கோணம் நேருஜி நகர் பகுதியில் எரிவாயு தகன மேடை பகுதியின் எதிரே உள்ள ஒரு பகுதி இடுகாடு உள்ளது. 

    நேற்று மாலை சுமார் 7 மணியளவில் சுடுகாடு பகுதியில் உள்ள புதருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. 

    சுடுகாடு பகுதி சுற்றிலும் குடியிருப்புகளும், டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் உயர் அழுத்த மின்சார வயர்கள் செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். 

    இதுகுறித்து மின்சார ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.
     
    பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    அரக்கோணம் அருகே ரெயில் மோதி கல்லூரி மாணவர் பரிமதாபமாக இறந்தார்.
    நெமிலி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சீக்கராஜ குப்பம் பகுதியை சோர்ந்தவர் ஜீவானந்தம் மகன் தோனி என்கின்ற தோனீஸ்வரன் (வயது 19). திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 

    நேற்றிரவு பொன்பாடி ரெயில் நிலையம் அருகே வந்த போது காரைக்காலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் படுகாயமடைந்து தோனி பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும், இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
    அரக்கோணம் அருகே என்ஜினீயரிங் மாணவர் கிணற்றில் பிணமாக கிடந்தார்.
    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுனமல்லி கிராமத்தை சேர்ந்தவர் எழுமலை. இவரது மகன் விக்னேஷ் (வயது 21). காஞ்சிபுரம் கிழம்பி பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற விக்னேஷ் இரவு நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை தந்தை விக்னேஷ் செல்போனுக்கு போன் செய்தார். விக்னேஷ் போனை எடுக்காததால், விக்னேஷ் வழக்கமாக குளிக்கும் கிணற்றுக்கு சென்று பார்த்தார்.

    பம்ப் செட்டுக்கு அருகில் உள்ள கிணற்றின் மேலே விக்னேஷனுடைய செல்போன், கண்ணாடி மற்றும் செருப்பு இருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர். 30 நிமிட தேடலுக்குப் பின்பு விக்னேசை பிணமாக மீட்டனர். 

    நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விக்னேஷின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா? என  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோளிங்கர் அருகே பஸ் மீது கல் வீசி தாக்கிய 3 வாலிபர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    ராணிபேட்டை:

    சோளிங்கரில் கடந்த 2018-ம் ஆண்டு அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக 3 வாலிபர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து அரக்கோணத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே 29-ந்தேதி மாலை அரசு பஸ் இயக்கப்பட்டது. 
    பஸ்சின் டிரைவராக திருத்தணியை சேர்ந்த சண்முகம் என்பவரும், சோளிங்கரை சேர்ந்த சக்திவேல் கண்டக்டராகவும் இருந்தனர். 

    இந்த பஸ் பாராஞ்சி மயானம் அருகே சென்றபோது பைக்கில் வந்த 3 பேர், தங்கள் கையில் வைத்திருந்த கல்லை வீசினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது.

    இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் அரக்கோணத்தை சேர்ந்த சண்முகம் (25), ராகுல் (25), வெங்கடேசன் (25) ஆகியோரை கைது செய்தனர். 

    இந்த வழக்கின் விசாரணை வேலூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் நடைபெற்றது. 

    இதில் தீர்ப்பளித்த நீதிபதி, பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 3 பேருக்கும் தலா ஓராண்டு சிறையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். 

    இதையடுத்து 3 பேரையும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.
    ஆற்காடு அருகே கர்ப்பிணி திடீரென இறந்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி அடுத்த கனியனூரைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 24) வேன் டிரைவர். 

    இவரது மனைவி வாணிஸ்ரீ (21). இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 

    இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. வாணிஸ்ரீ மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் அடிக்கடி வாந்தி ஏற்பட்டு சரியாக சாப்பிடுவதில்லை என கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி இரவு வாணிஸ்ரீக்கு வலிப்பு ஏற்பட்டு இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி விசாரணை நடத்தி வருகிறார்.
    ×