என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
சீர்திருத்த பள்ளியில் 7 சிறுவர்களை மிரட்டி தகாத உறவு- உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது
சிறுவர்களின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்காணிப்பாளர் இந்த கொடூர சம்பவம் குறித்து தனது மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் சமூக நலத்துறை சார்பில் அரசினர் சிறுவர் சீர்திருத்த பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சிறு குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் மற்றும் ஆதரவற்ற சிறுவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு கல்வி விளையாட்டு ஒழுக்கம் கற்றுத் தரப்பட்டு 18 வயது ஆனவுடன் அவர்கள் உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.
இந்த பள்ளியில் வளர்க்கப்பட்ட சிறுவர்களில் பலர் அரசுப் பணிகள் உட்பட பல உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளனர் . முன்பு இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
காலப்போக்கில் இந்த பள்ளியின் பெயர் அரசினர் சிறுவர் இல்லம் என்று மாற்றப்பட்டது. மேலும் சிறுவர்களின் எண்ணிக்கை இப்போது நூற்றுக்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்த இல்லத்தில் உள்ள சிறுவர்களில் சிலர் அதே வளாகத்தில் உள்ள தீரன் சத்தியமூர்த்தி நடுநிலைப்பள்ளியிலும், ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் படித்து வருகின்றனர். இந்த இல்லத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி மற்றும் இல்ல சிறுவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியராக செந்தில்குமார் (வயது 46), பணியாற்றி வருகிறார்.
இவரின் சொந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடி, செந்தில்குமார் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களை தனது இச்சைக்கு இணங்கும்படி, வற்புறுத்தியும், மிரட்டியும் பலமுறை தகாத உறவு கொண்டுள்ளார்.
உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் இல்லத்தில் பணியில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அங்குள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு வரும் மாணவர்களை மிரட்டி தொடக்கத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அவரது அத்துமீறல் தொடர்ந்தது. மாணவர்களை வேண்டுமென்றே உடற்பயிற்சி கூடத்திற்கு வரவழைத்து அங்கு வைத்து நீண்ட நேரம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவர்கள் படாதபாடுபட்டனர்.
மாலை நேரங்களில் அங்குள்ள மைதானத்தில் உள்ள ஆலமரத்து அடியில் மாணவர்கள் விளையாடுவது வழக்கம். அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு உடற்கல்வி ஆசிரியர் தனது லீலைகளை தொடர்ந்தார். மைதானத்திற்கு அருகே விளையாடும் மாணவர்களை தனியாக அழைத்து மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். பல ஆண்டுகளாக இப்படியே ஆசிரியர் செந்தில்குமாரின் அட்டகாசம் தொடர்ந்தது.
குறிப்பாக தாய் தந்தை இல்லாத மாணவர்களை குறிவைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக அவர்கள் இந்த கொடூரத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
பல ஆண்டுகளாக இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது . இதை சிறுவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் உடல் உபாதையுடனும், அச்சத்துடனும் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுவர்களிடம் ஏற்பட்டுள்ள மாறுதல் மற்றும் அவர்களின் நிலைமை குறித்து அரசல், புரசலாக அறிந்த சிலர் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர் .
இதையடுத்து விஜயகுமார், பாதிக்கப்பட்ட சிறுவர்களை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது 7 சிறுவர்கள் தங்களுக்கு நடந்து வரும் கொடுமை குறித்து கதறி அழுது விஜயகுமாரிடம் கூறியுள்ளனர். சிறுவர்களின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்காணிப்பாளர் இந்த சம்பவம் குறித்து தனது மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக செந்தில்குமார் மீது போலீசில் புகார் செய்யும்படி உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து விஜயகுமார் ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story