என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை மறியல் செய்த காட்சி.
    X
    சாலை மறியல் செய்த காட்சி.

    ராணிப்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

    ராணிப்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த கல்மேல்குப்பம்ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் 7வது வார்டில் 250 குடும்பங்கள் உள்ளனர். மேற்கண்ட 7வது வார்டு மேட்டுத் தெருவில் கடந்த 6 வருடங்களாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது.
     
    இங்கு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் டேங்கில் தண்ணீர் சப்ளை இல்லை. பைப்புகள் அமைத்து அப்படியே உள்ளன. மொத்தத்தில் குடிநீர் சரிவர வழங்குவதில்லை என கூறப்படுகிறது. 

    இந்நிலையில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் நேற்று குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

     இதனையடுத்து போலீசார் தலைவர் துணைத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 20 நாட்களுக்குள் குடிநீர் தருவது என அறிவித்தனர்.

    இதையடுத்து பெயரில் பொதுமக்கள் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×