என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்னேஷ்
    X
    விக்னேஷ்

    அரக்கோணம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்ம சாவு

    அரக்கோணம் அருகே என்ஜினீயரிங் மாணவர் கிணற்றில் பிணமாக கிடந்தார்.
    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுனமல்லி கிராமத்தை சேர்ந்தவர் எழுமலை. இவரது மகன் விக்னேஷ் (வயது 21). காஞ்சிபுரம் கிழம்பி பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற விக்னேஷ் இரவு நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை தந்தை விக்னேஷ் செல்போனுக்கு போன் செய்தார். விக்னேஷ் போனை எடுக்காததால், விக்னேஷ் வழக்கமாக குளிக்கும் கிணற்றுக்கு சென்று பார்த்தார்.

    பம்ப் செட்டுக்கு அருகில் உள்ள கிணற்றின் மேலே விக்னேஷனுடைய செல்போன், கண்ணாடி மற்றும் செருப்பு இருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர். 30 நிமிட தேடலுக்குப் பின்பு விக்னேசை பிணமாக மீட்டனர். 

    நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விக்னேஷின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா? என  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×