என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகுதி நேர ரேசன் கடையை அமைச்சர் காந்தி திறந்துவைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கிய காட்சி.
    X
    பகுதி நேர ரேசன் கடையை அமைச்சர் காந்தி திறந்துவைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கிய காட்சி.

    வாலாஜாவில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு

    வாலாஜா அடுத்த மலைமேடு கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சி மலைமேடு கிராமத்தில் பகுதிநேர ரேசன் கடை திறப்பு விழா கடந்த 20ம் தேதி நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். துணை பதிவாளர் சந்திரன் வரவேற்றார். 

    ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், துணைத்தலைவர் சபரி கிரிசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பகுதிநேர நியாய விலை கடை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினர். 

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி பாண்டியன், ஜான் ஜெயபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி மோகன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    முடிவில் ராணிப்பேட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மணிமேகலை நன்றி கூறினார்.
    Next Story
    ×