என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை மறுதினம் ஏலம் விடப்பட உள்ளதாக எஸ்.பி தெரிவித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

    இந்த வாகனங்கள் வருகிற 29&ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் போலீஸ் நிலைய வளாகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. 

    ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.15 ஆயிரம் முன் வைப்புத்தொகையை ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள அலுவலரிடம் செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். 

    ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். 

    வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினை சேர்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்தார்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்தையும் விரைவாக முடிக்க வேண்டும் என கண்காணிப்பு அதிகாரி பேசினார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத் துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. 

    மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் உரம் இருப்பு குறித்தும், தோட்டக்கலைத் துறையில் செயல் நிலவரங்களையும், வேளாண் விற்பனை மையத்தின் மூலம் உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்தும், விவசாயிகள் உடைய வருகை பயன்பாடு குறித்தும் கேட்டறியப்பட்டது.கால்நடைத்துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை, அரசிற்கு நெல் அரவை செய்து கொடுக்கும் அரிசி ஆலைகளில் ஆய்வு குறித்தும், அரிசியின் தரம் மற்றும் ஆய்வுகள் குறித்தும் கேட்டு அறியப்பட்டது. 

    சுகாதாரத்துறை மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதும், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களின் நிலவரங்களையும், மாவட்ட தொழில் மையம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும், பள்ளிக் கல்வித் துறையின் மூலம் இல்லம் தேடி கல்வியின் செயல்பாடுகள் குறித்தும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் செயல்பாடுகள் குறித்தும், வருவாய்த்துறையின் மூலம் நிலுவையில் இருந்து வரும் நிலப் பரிமாற்றங்கள், நில ஒப்படைப்பு பட்டாக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டு அறியப்பட்டது.

    மேலும் கண்காணிப்பு அலுவலர் பேசுகையில், பிறந்த நிலையில் உள்ள பணிகள் அனைத்தையும் விரைவாக முடிக்க வேண்டும், தமிழக அரசிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கு நிதி பெறுவதற்கு காலதாமதம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்துவதற்கான நிதிகள் குறித்தும், சம்பந்தப் பட்ட துறைகள் கலெக்டர் மூலமாக கடித வரைவு வழங்கி அதனை விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேவையான உதவிகளை அரசிடமிருந்து பெற்று திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக பெற்று தரப்படும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    காவேரிப்பாக்கம் அருகே வேளாண் மாணவிகள் கண்காட்சி நடந்தது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம்காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டைசேரியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன் போஸ்கோ வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் கிராமத்தில் இருக்கும் பள்ளியில் தங்கி கிராம வேளாண் பயிற்சி முகாமை நடத்தி வருகின்றனர்.

    இந்த வேளாண் பயிற்சி முகாமிற்கு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு முகாமில் தங்கி உள்ள கல்லூரி மாணவிகள் தாங்கள் விவசாயம் சம்பந்தப்பட்ட உரம் நெல் பயிர்கள் மற்றும் அனைத்து பொருட்கள் தயாரித்தை கலெக்டரின் எடுத்துரைத்து கூறினார்.

    பின்னர் மேடையில் பேசிய மாவட்ட ஆட்சியர் விவசாயம் என்பது நாம் கற்றறிந்த விஷயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்கனும் அதே நேரத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ந்து கொண்டு இருக்கின்றது அதை நாம் விவசாயத்தோடு புகுத்தனும் என்றும் கூறினார். மேலும் இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் பேசிய ஆட்சியர் விவசாயம் வந்த பின்புதான் மனிதனுக்கு நாகரிகம் வளர்கின்றது இன்றைக்கு பார்த்தால் தொழில்மனதால் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதன் வளர்ச்சிகள் விவசாயத்தைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது.

    பொருளாதாரத்திலும் அதில் பணிபுரியும் நபர்களின் சதவீதத்திலும் அதிகம் இடம் பெற்றிருந்தாலும் கூட விவசாயிகள் இல்லை என்றால் நாம் நிச்சயம் இல்லை என்று கூறினார்.

    மேலும் மேடையில் இருந்த மாவட்ட ஆட்சியர் உடன் தூய்மைப் பணியாளர்கள் ஊரக வளர்ச்சித்துறை பெண்கள் வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவரும் மாவட்ட ஆட்சியருடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர்..

    பின்னர் பள்ளியின் உள்ளே சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு இருக்கும் மாணவ மாணவிகளிடம் கல்வியை பதில் உங்கள் வாழ்க்கையில் நன்றாக முன்னேறுங்கள் எதிர்காலத்தில் என்ன ஆகப் போகிறீர்கள் என்று படித்து முன்னேறுவேன் என்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    அதன் பின்னர் பள்ளியில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் தனது நோட்டுப் புத்தகத்தில் ஆட்டோகிராப்பை பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    இந்த நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம் நெமிலி வட்டாட்சியர் ரவி கல்லூரியின் முதல்வர் மரியசூசை அய்யம்பேட்டைசேரி ஊராட்சி மன்ற தலைவர் ரமணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடருக்கு மண்டல பூஜையுடன் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சென்ற 6.2.2022 ஞாயிற்றுக்கிழமை 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

    இதனை முன்னிட்டு இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மண்டல பூஜைடன் ஹோமங்கள் மற்றும 9 வகையான திரவியங்களை கொண்டு மூலவர் ஸ்ரீ கருட தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    ராணிப்பேட்டையை குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் தூய்மைப் பணி திட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சி நெகிழி (பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள்) இல்லாத மாவட்டமாக ராணிப்பேட்டையை மாற்றும் சிறப்பு தூய்மைப் பணி திட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் ராணிப்பேட்டை வாலாஜா சாலையோரம் உள்ள குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தனர்.

    இந்த தூய்மைப்பணி ராணிப்பேட்டை நகராட்சிக் குட்பட்ட 30 வார்டுகளிலும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் அங்குலஷ்மி, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெய்ந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகர்மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத்தலைவர் கருணாமூர்த்தி, நகர பொறுப்பாளர் பூங்காவனம், வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் தூய்மைப் பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    இதேபோன்று வாலாஜா நகரத்தில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றும் பணி நடந்தது.
    ராணிப்பேட்டையில் தொழிற்சாலை நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தொழிற்சாலை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமை தாங்கினார். 

    கூட்டத்தில், தொழிற்சாலைகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெருகிவரும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், தொழிற்சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைப்பு அதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

    மேலும் பாதுகாப்பான தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக ராணிப்பேட்டை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டு கொண்டார். 

    கூட்டத்தில்போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்கருப்பன் (சைபர் குற்றப்பிரிவு), பிரபு (ராணிப்பேட்டை), புகழேந்தி கணேஷ் (அரக்கோணம்) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தொழிற்சாலைகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    ராணிப்பேட்டை சிப்காட் அருகே பாலத்தில் பைக் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையை அடுத்த புதிய அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 41). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சென்னையை சேர்ந்தவர் கார்த்திக் (40) இவர் சென்னையில் நெட் சென்டர் நடத்தி வந்தார்.

    ஆனந்தனும், கார்த்திக்கும் நண்பர்கள். இவர்கள் இருவரும் வேலை சம்பந்தமாக திருவலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது அக்ராவரம் பெல் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி மேம்பால தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் 2 பேரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தன், கார்த்திக் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கத்தியை காட்டி மிரட்டி மாணவியிடம் கவரிங் செயினை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த (வயது 19) மாணவி சென்னை பூந்தமல்லி அருகேஉள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். 

    இவர் நேற்று காலை கல் லூரிக்கு செல்வதற்காக அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதிக்கு வந்துள்ளார். 

    அப்போது வாலிபர் ஒருவர் மாணவியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, மாணவி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயினை பறித்து சென்றார். 

    இது குறித்து மாணவி அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை மிரட்டி, கவரிங் நகையை பறித்து சென்ற அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த சோபன் (வயது 24) என்பவரை கைதுசெய் தனர். 

    விசாரணையில் இவர் கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ராணிப்பேட்டையில் வருகிற 30-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 2022-22-ம் ஆண்டிற்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் வருகிற 30.3.22-  ந் தேதி முதல் 1.4.22-ந் தேதி வரை (3 நாட்கள்) நடைபெற உள்ளது. 

    கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே மாவட்டம் முழுவதும் செல்ல வழங்கப்பட்டுள்ள பஸ் பாஸ் புதுப்பிக்கவும், கை, கால்கள் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர் பணியிடத்திற்கு செல்ல பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து பணிபுரியும் சான்றும், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி சென்று வருவதற்கான சிறப்பு பள்ளியில் இருந்து சான்று மற்றும் சிகிச்சை தொடர்பாக மருத்து வமனைக்கு சென்று வருவதற்கான மருத்துவ சான்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், புகைப்படம் - 3 மற்றும் யூ.டி.ஐ.டி. அட்டை அசல் மற்றும் நகலுடன் நேரில் வந்து இலவச பயணஅட்டை பெற்றுக் கொள்ளலாம். 

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    நெமிலி:

    சென்னை சென்டரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் ரெயில் நிலையம் வரை உள்ள அனைத்து நிலையங்களிலும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    ரெயில் பயணிகளுக்கு கிருமி நாசினி, முககவசம் அணிவது, சமுக இடைவெளி பின் பற்றுதல் மற்றும் பயணிகள், மாணவர்கள் ஒடும் ரெயில் ஏறுவதும், இறங்குவதால் அதனால் ஏற்பட கூடிய பாதிப்புகள் பற்றி எடுத்து கூறி ரெயில் பயணிகளிடையே சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டி, துணை சூப்பிரண்டு முத்துகுமார் மற்றும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

    அப்போது சப்- இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
    ராணிப்பேட்டை சிப்காட் அருகே பாலத்தில் பைக் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையை அடுத்த புதிய அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 41). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சென்னையை சேர்ந்தவர் கார்த்திக் (40) இவர் சென்னையில் நெட் சென்டர் நடத்தி வந்தார்.

    ஆனந்தனும், கார்த்திக்கும் நண்பர்கள். இவர்கள் இருவரும் வேலை சம்பந்தமாக திருவலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அக்ராவரம் பெல் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி மேம்பால தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் 2 பேரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தன், கார்த்திக் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மூர் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சி மன்றத்தின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். 

    துணைத்தலைவர் உஷாராணி அண்ணாதுரை பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமன் மற்றும் 15 வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் 27 தீர்மானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வாசிக்கப்பட்டன. 

    அப்போது அதிமுகவை சேர்ந்த 5 கவுன்சிலர்கள் எழுந்து நின்று தீர்மானங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    இதனை தொடர்ந்து தலைவர் துணைத் தலைவர் உட்பட 8பேர் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர். 

    பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    ×