என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ராணிப்பேட்டையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை மறுதினம் ஏலம்
ராணிப்பேட்டையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை மறுதினம் ஏலம் விடப்பட உள்ளதாக எஸ்.பி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் வருகிற 29&ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் போலீஸ் நிலைய வளாகத்தில் ஏலம் விடப்பட உள்ளது.
ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.15 ஆயிரம் முன் வைப்புத்தொகையை ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள அலுவலரிடம் செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினை சேர்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்தார்.
Next Story






