என் மலர்
ராணிப்பேட்டை
- இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை
- ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் காவலராக வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் திடீர் ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள்தான் 2-வது பெற்றோர்கள். அவர்கள் நண்பர்களாக பழகி மாணவ ர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், மேலும் போலீசாருக்கு அரசு அறிவித்த விடுமுறையை உரிய நேரத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டும் விடுப்பு வழங்க வாய்ப்புகள் இருந்தும் அதை வழங்காத இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் காவலராக வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ், இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
- மயக்கம் ஏற்பட்டதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் சேர்ந்தவர் பாலாஜி (35) இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றது.
பாலாஜி வாலாஜா பேட்டையில் அணைக்கட்டு ரோட்டில் உள்ள சிவில் சப்ளை குடோனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று சக்கரை மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு அருகில் இருக்கும் மேம்பாலம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள குட்டை அருகே சென்ற போது திடீரென மயக்கம் ஏற்பட்டதில் அந்த குட்டையில் விழுந்து மூச்சு திணறி இறந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோளிங்கர் சுப்பிரமணிய சாமி கோவிலில் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
சோளிங்கர்:
சோளிங்கரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி பத்து நாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. 7-வது நாள் அன்று சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் கற்பூர ஆரத்தி காண்பித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என புகார்
- கலெக்டர் சமாதானம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது, 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அங்குவந்து, வேலுார், திருப்பத்தூர் மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலமுறை மனு கொடுத்தும் வீட்டு மனை வழங்கவில்லை என கூறினர்.
பின்னர் தங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும்கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரத்துக்கு பிறகு, எல்லாரும் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கலெக்டர் கார் அருகில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த துணை கலெக்டர் தாரகேஸ்வரி அங்குவந்து திருநங்கைகளை சமா தானம் செய்யமுயன்றார்.
மேலும், அலுவலகத்து க்குள் வந்து கலெக்டரை சந்திக்கும்படி கூறினார். ஆனாலும், அதை ஏற்க மறுத்து, தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.அத ன்பேரில், இன்ஸ்பெக்டர் (திமிரி) மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் அங்கு வந்து திருநங்கைகளை ஓரமாக சென்று அமரும்படி கூறினார்.
மேலும், அவர்களில் 4 பேர் மட்டும் கலெக்டரை சந்தித்து முறையி டலாம் என அறிவுறுத்தி னார். அதை மீறி தொடர்ந்து போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என போலீசார் எச்சரித்தனர்.
இதைய டுத்து, திருநங்கைகள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்களில் 4பேர் மட்டும் கலெக்டரை சந்தித்தனர். அப்போது கலெக்டர் திருநங்கை களின் மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், தகுதியான வர்களுக்கு அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
- 800-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்
- நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த சகாயத் தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள தொன்பாஸ்கோ வேளாண்மை கல்லூரியில் மென் இன் ஒயிட் மற்றும் போர்டிஸ் ஆஸ்பத்திரி இணைந்து மாபெரும் மருத்துவ முகாமை பேராயர் ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்றது.
முகாமில் டாக்டர் குகநாத் சிவ கடாசம் கலந்து கொண்டார். இந்த மருத்துவ முகாமில் 800-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
உடன் மென் இன் ஒயிட் நிர்வாகிகள் ஜோசப், கென்னடி, தீபு ஆண்டனி, டாக்டர் பாஸ்கர்ராஜ், டாக்டர் இம்தியாஸ் ரிபாயி, வீரா பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
- சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை தனிப்படை ஆய்வு
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த கீழ் குப்பம் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகி ராமன். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு தீபா என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் உள்ளனர். சதீஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
மகனை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வித்யா வீட்டை பூட்டிக் கொண்டு குடும்ப த்துடன் சென்னைக்குச் சென்றார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்க ப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 15 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை யடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வித்யா அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அரக்கோணம் ஏ எஸ் பி யாதவ் கிரீஸ் அசோக் மற்றும் போலீசார் கொள்ளை போன வீட்டிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
இதே போல அரக்கோணம் சோளிங்கர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மனைவி நிர்மலா வயது (49). இவர் சம்ப வத்தன்று அரக்கோணம் கணேஷ் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் இரவு தனது மொபட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது கணேஷ் நகர் பகுதி அருகே வரும்போது ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் நிர்மலாவின் கழுத்தில் இருந்த தாலி செயின் உள்பட 10 பவுன் நகைகளை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்மலா கூச்சலிடவே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் மின்னல் வேகத்தில் நகைகளை பறித்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.
இது சம்பந்தமாக அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் இந்த 2 சம்பவங்கள் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
ராணிப்பேட்டைமாவட்டம் அரக்கோணம் முதூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சோளிங்கரில் இருந்து முதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். தாளிக்கால் பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 24 அடிச்சாலை 16 அடியாக குறுகியது
- ஓச்சேரியில் பொதுமக்கள் வலியுறுத்தல்
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி ஊராட்சியில் 6-வது வார்டில் சுமார் 2100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர்.
இப்பகுதி பொது மக்களின் குடிநீர், தெருவி ளக்கு, சாலை அமைத்தல், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இங்குள்ள 2-வார்டு பகுதியில் குப்புசாமி தெரு அமைந்துள்ளது.
இந்த சாலை 24-அடியை கொண்டு பராமரிப்பு செய்து வந்துள்ளனர். தற்போது இந்த தெருவின் ஒரு பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் 24-அடியாக இருந்த இந்த சாலை தற்போது 16-அடியாக சுருங்கியுள்ளது. இதன்காரணமாக லாரிகள், டிராக்டர், வேன், உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது, ஒதுங்கி செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி யுள்ளது.
இதே போல் திருவிழாக் காலங்க ளில் சாமி ஊர்வலம் நடக்கும் போது பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு ள்ளது.
எனவே அரசு அதிகா ரிகள் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தெருவை ஆக்கிரமித்து கால்வாய் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பழைய கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள சுவர்களை அகற்றி பழைய படியே 24-அடி தெருவாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி பொது மக்களின் புகாராக உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகா ரிகள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 10 வாகனங்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், உதயசூ ரியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று ஆற்காட்டில் உள்ள செய்யார் சாலையில் வாகனத் தணிக் கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாகமோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 21) என்பதும், ஆற்காடு பகுதியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து சூர்யாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆஸ்பத்திரியில் அனுமதி
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
சோளிங்கர்:
ராணிப்பேட்டைமாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும், ஒவ் வொரு தெருவிலும் சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகிறது. தெருக்களில் விளையாடிக்கொண்டிருக் கும் குழந்தைகள், நடந்து செல்பவர்களை நாய்கள் கடிப்பது வழக்கமாக உள்ளது.
மேலும் நாய்களால் அடிக்கடி விபத்துகளும் நடைபெறு கிறது. இந்த நிலையில் தென் வன்னியர் வீதியில் இரண்டு வயது குழந்தை காவ்யா, லிங்கரெட்டி தெருவில் சுந்தர வல்லி (வயது 70), திலகவதி (60), ராமச்சந்திரன் (70) ஆகிய 4 பேரை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது.
இதில் காயம் மடைந்த அனைவரும் சோளிங்கர் அரசு மருத்துவமனைமில் சிகிச்சை பெற்றனர். இதே போல அடிக்கடி வெறிநாய் கடிப்பது வழக்கமாக உள்ளது. எனவே சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என பலமுறை நக ராட்சி நிர்வாகத்தில் வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக் கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதற்கு முன் ஏற்கனவே ஒரே நாய் 42 பேரை கடித்தது குறிப் பிடத்தக்கது.
- ஒன்றிய குழு தலைவர் திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மாங்காட்டுச்சேரி ஊராட்சி, கடம்பநல்லூர் கிராமத்திற்கு செல்லும் வழியில், பழுதடைந்த பாலத்தை பொதுமக்கள் சீரமைத்துதர கோரிக்கை வைத்தனர்.
இதை தொடர்ந்து, 2021-2022ஆம் நிதியாண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சிறுபாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
தற்போது அதற்கான பணி முழுமையாக முடிக்கப்பட்டு, ஒன்றிய குழு உறுப்பினர் வரலட்சுமி அசோக்குமார் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு சிறுபாலத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அசோக்குமார், ஒப்பந்ததாரர் பாபு, ஒன்றிய பொருளாளர் சங்கர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த சென்ன சமுத்திரம் டோல்கேட் நகரை சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மகன் கார்த்தி (வயது 22). இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. மேலும் குடிப்பழக்கத்தால் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
அதைத்தொடர்ந்து கார்த்தியின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்தி வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்தியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






