என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசாருக்கு உரிய விடுப்பு வழங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்
    X

    போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆய்வு செய்த காட்சி.

    போலீசாருக்கு உரிய விடுப்பு வழங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்

    • இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை
    • ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் காவலராக வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் திடீர் ஆய்வு மேற்கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள்தான் 2-வது பெற்றோர்கள். அவர்கள் நண்பர்களாக பழகி மாணவ ர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், மேலும் போலீசாருக்கு அரசு அறிவித்த விடுமுறையை உரிய நேரத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டும் விடுப்பு வழங்க வாய்ப்புகள் இருந்தும் அதை வழங்காத இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் காவலராக வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

    இதில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ், இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    Next Story
    ×