என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மாங்காட்டு சேரியில் சிறு பாலம் திறப்பு
    X

    மாங்காட்டு சேரியில் சிறு பாலம் திறந்து வைத்த காட்சி.

    மாங்காட்டு சேரியில் சிறு பாலம் திறப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒன்றிய குழு தலைவர் திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மாங்காட்டுச்சேரி ஊராட்சி, கடம்பநல்லூர் கிராமத்திற்கு செல்லும் வழியில், பழுதடைந்த பாலத்தை பொதுமக்கள் சீரமைத்துதர கோரிக்கை வைத்தனர்.

    இதை தொடர்ந்து, 2021-2022ஆம் நிதியாண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சிறுபாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    தற்போது அதற்கான பணி முழுமையாக முடிக்கப்பட்டு, ஒன்றிய குழு உறுப்பினர் வரலட்சுமி அசோக்குமார் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.

    நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு சிறுபாலத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அசோக்குமார், ஒப்பந்ததாரர் பாபு, ஒன்றிய பொருளாளர் சங்கர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×